காங்கிரசு திமுக கூட்டணியில் இருந்து விலக விரும்புவதால் திமுகவும் மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது ஒரு தந்திர நாடகமாகவே தெரிகிறது. இறுதிவரை இழுத்து இறங்கி வருவது தான் காங்கிரசின் திட்டம். அவ்வளவு தான் என்று முடித்து அணைத்துக்கொள்வது தான் திமுகவின் திட்டம்.
தற்போது டெல்லியில் இருந்து அவரசர அவசரமாக குலாம்நபி ஆசாத்தும் சிதம்பரமும் சென்னை திரும்பி உள்ளனர். 60 தொகுதிகளுக்கு உடன்பட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தான் வருகையின் நோக்கம்.
இன்று இரவு அல்லது நாளை காலை ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தெரிகிறது.
கூட்டணி தொகுதி ஒதுக்கீடு விபரம்
திமுக 121
காங்கிரசு 60
பாமக 31
வி.சி 10
கொமுக 7
இதரம் 5
தனித்து போட்டியிட்டு சுவடற்று போக காங்கிரசும் தயாரில்லை. கனிமொழியை டெல்லி திகார் சிறையில் சந்திக்க கருணாநிதிக்கும் தைரியம் இல்லை.
அடிமட்ட தொண்டர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக தான் இந்த நாடகங்கள் எல்லாம் நடக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
விடிந்தால் விசயம் தெரியும்
இது நாடகத்தின் தொடக்கம். இனிமேல் தான் கதாபாத்திரங்கள் வசனங்கள் திடீர் திருப்பங்கள் உருவாகும்.
ReplyDeleteஅரசியல்ல இது எல்லாம் சாதாரனம்பா
ReplyDeletewww.athiradenews.blogspot.com
வாருங்கள் நண்பர் சோதிசி
ReplyDeleteஈழத்தமிழர்களின் நலன் கருதி மீண்டும் கூட்டணி சேர்ந்தோம் என்று வசனங்கள் வராமல் இருந்தால் சரி.
//ஈழத்தமிழர்களின் நலன் கருதி மீண்டும் கூட்டணி சேர்ந்தோம் என்று வசனங்கள் வராமல் இருந்தால் சரி. //
ReplyDeleteஅப்படி சொன்னாலும் சரிதானே? இப்போதைய சூழ்நிலையில் இந்த இரண்டு கட்சிகள் இல்லாமல் அங்கே உள்ள தமிழர்களுக்கு குடிக்க கஞ்சாவது கிடைக்குமா?