வாக்குபதிவுக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ளது. அதிமுக திமுக இருபெரும் அணி கூட்டணிகள் முடிவாகி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் வெற்றி வாய்ப்புக்காண கருத்து கணிப்புகளும் துள்ளியமாகி வருகின்றன.
கட்சி வாக்கு வங்கி மற்றும் பொதுமக்கள் மனநிலை, பொது பிரச்சனைகள் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் அடிப்படையில் கட்சிகளின் வாக்கு வங்கி கணக்கிடப்படவில்லை. தொகுதி வாரியாக சராசரி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.
வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென்மாவட்டங்கள் என்ற நான்கு பிரிவுகளில் கட்சிகளின் பலம் அலசப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள் 50 தொகுதிகள்
(புள்ளிகள் சதவீதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது)
திமுக .........12
பாமக ..........6
காங்கிரசு ..5
வி.சி ..2
மொத்தம் 25
அதிமுக ......12
தேமுதிக .....4
கம்யூ .........2
இதரம் .........1
மொத்தம் ...19
மின்வெட்டு, ஊழல் குற்றசாட்டுகள் இவைகளை கடந்து இலவச திட்டங்கள் மற்றும் சன், மக்கள், கலைஞர், காகிரசு தொலைகாட்சிகளின் பிரச்சார பலம், ராமதாசு, கருணாநிதி, சுடாலின், திருமாவளவன் என மேடை பேச்சாளர்கள் அணி வகுப்பால் திமுக அணிக்கு இங்கு வெற்றி அலை வீசுகிறது. திமுக அணி வடமாவட்டங்களில் 36 தொகுதிகளை கைபற்றும் அதிமுக அணி இங்கு 14 தொகுதிகள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.
கொங்கு மண்டலம் 60 தொகுதிகள்
திமுக ...............10
கொமுக............. 2
காங்கிரசு 2
விசி+இதரம் 1
மொத்தம் 15
அதிமுக .......14
தேமுதிக .....6
கம்யூ .........4
இதரம் .........1
மொத்தம்.... 25
கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தொழில்பாதிப்பு போன்ற காரங்களால் திமுக அணி பின்னங்கால் பிடரி வாங்குகிறது. இங்குள்ள 60 தொகுதிகளில் அதிமுக அணி 50 தொகுதிகளுக்கும் கூடுதலாக உறுதியாக வெற்றிவாகை சூடும்.
கடலோர மாவட்டங்கள் 54 தொகுதிகள் :
திமுக ........14
காங்கிரசு ..4
வி.சி............1
இதரம்........1
மொத்தம் 20%
அதிமுக 11
தேமுதிக 5
கம்யூ 4
இதரம் 2
மொத்தம் 22%
மீனவர் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை உட்பட பிரச்சனைகளால் திமுக கோட்டையான இங்கு இம்முறை அதிமுக பலம்பெற்றுள்ளது. பிரச்சார சக்தி இல்லாததால் அதிமுக தனது வெற்றியை சேர்த்து அள்ள தவறிவிட்டது. இதனால் வெற்றி இரு பாதியாக பிரிந்து செல்கிறது. 54 தொகுதிகளில் 30 அதிமுக அணிக்கும் 24 திமுக அணிக்கும் செல்கிறது.
தென்மாவட்டங்கள் 70 தொகுதிகள்
திமுக..........13
காங்கிரசு... 8
இதரம் ........ 1
மொத்தம் ..22
அதிமுக 15
தேமுதிக 5
கம்யூ ........3
இதரம் .......3
மொத்தம் 26%
தென் மாவட்டங்களை பொருத்தவரை கட்சி வாக்கு வங்கிதான் வெற்றி தோழ்வியை நிர்ணயிக்கிறது. வைகோ மற்றும் கார்த்திக் கட்சிகள் வெளியேற்றம், நாடார் சங்கங்களின் பிளவு, பிரச்சார அணிவகுப்பு இல்லாமை போன்றவை அதிமுக அணிக்கு பாதகமாக உள்ளன. இலவசங்கள் மற்றும் காங்கிரசு கூட்டணி திமுகவுக்கு பலமாக உள்ளது. சன் தொலைகாட்சி இறுதிகட்ட பிரச்சார யுக்திகள் மூலம் திமுக அணிக்கு கணிசமான வெற்றிதொகுதிகள் செல்கிறது. அதிமுக 40 திமுக 30 என்ற ரீதியில் வெற்றிகள் அமையலாம்.
திமுக 70 தொகுதிகளிலும், அதிமுக 100 தொகுதிகளிலும் வெற்றி பெரும். எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாதால் காங்கிரசு, பாமக, தேமுதிக கட்சிகள் ஆட்சியை நிர்ணயிக்கும் சூழல் உருவாகும் நிலை உள்ளது. காங்கிரசு 10, பாமக 15 தேமுதிக 15, இடதுசாரிகள் 15 தொகுதிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
நாலைந்து நாட்களாக எதுவும் வரவில்லையே என்று காத்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteநன்றி திரு. சோதிகணேசன்
ReplyDeleteஊருக்கு சென்றதால் 3 நாட்கள் இணைய தொடர்பு இல்லை.
உங்கள் கணிப்பு தேர்தலுக்கு முன்பே தவறாகி விட்டதே. மதிமுக அதிமுக கூட்டணியில் இல்லை. அதைவிடக்கொடுமை காங்கிரஸ் மூன்று சதவீதம் ஓட்டு வங்கி என்றும் கம்னியூஸ்ட்டுகளுக்கும் மூன்று சதவீத ஓட்டு சதவீதம் என்று குறிப்பிட்டு இருப்பது உங்களின் அரசியல் புலமையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அரைவேக்காடு! குப்பையாக பதிவு செய்வதை தவிர்க்கவும்.
ReplyDeletehttp://exitopinionpollsindia.blogspot.com/2011/04/which-way-will-shg-vote-swing-battle.html
ReplyDeleteread this also
This comment has been removed by the author.
ReplyDelete