என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும் பிரச்சாரத்தில் மயங்கும் வெகுளித்தன வாக்காளர்கள் தான் வெற்றி தோழ்வியை நிர்னயிக்கின்றனர். திமுகவை விட அதிக பிரச்சாரக்காரணிகள் இருந்தும் பிரச்சாரபலம் அற்று நிற்கிறது அதிமுக அணி.
மின்வெட்டு உட்பட பிரச்சனைகளை தேர்தல் நேரத்தில் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பகல் நேரங்களில் 2,3 மணிநேர மின்வெட்டை மக்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டனர். அலைகற்றை ஊழல், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை கடந்து இலவசத்துக்கு மயங்கும் நிலையில் தான் வெகுசனங்கள் உள்ளனர். ஓரளவு படித்தவர்கள் மட்டுமே இந்த பிரச்சனைகளை சீர்தூக்கி பார்க்கின்றனர். இருந்தாலும் செயலலிதாவின் ஆணவப்போக்கு இன்னும் மாறவில்லை என்ற பிரச்சரத்தை சன், கலைஞர் உட்பட தொலைகாட்சிகள் இடைவிடாது செய்கின்றன.
பொதுவாக வெற்றிபெரும் அணிக்கு வாக்குசெலுத்தும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இந்த அணிதான் வெற்றிபெரும் என்ற ஒரு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டால் போதும் வேறு பிரச்சாரங்கள் தேவை இல்லை. அதை சன் தொலைகாட்சி மட்டுமல்லாது அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆளும் கட்சி ஆதரவு ஊடகங்கள், உளவுதுறை என பலதும் கட்சிதமாக செய்கின்றன.
செய தொலைகாட்சி இன்னமும் சவ்வு இழுப்பு இழுத்துக்கொண்டிருக்கிறது. செயலலிதாவின் இலவச அறிவிப்புகள் இன்னும் பலரது காதுகளுக்கு செல்லவில்லை. கருணாநிதி மின்விசிறியும் சேர்த்து தருகிறாராம் என்ற எதிர்மறை பிரச்சாரம் தான் அதிமுகவுக்கு மிஞ்சுகிறது.
இப்போதைய நிலையில் தினமணி தினமலர் ஆனந்தவிகடன் செய்திதாள்கள் மட்டுமே அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சர ஊடகம். விளம்பர மற்றும் பிரச்சார யுக்தி கொஞ்சம் கூட இல்லாத செயதொலைகாட்சியும் மக்களை வசீகரிக்க தவறிவருகிறது.
15 நாட்களில் செயலலிதாவும் விசயகாந்தும் எவ்வளவு சூராவளி பிரச்சாரம் செய்தாலும் வெகுசனங்களுக்குள் ஒரு வெற்றி அலையை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.
சன் தொலைகாட்சியின் பிரச்சார யுக்திக்கு முன்னால் அத்தனையும் அடிபட்டுபோய்விடும் என்று அடித்து சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தினத்தந்தி, தினகரன், நக்கீரன், சன், கலைஞர், இலவச திட்டங்களுக்கான டோக்கன் என திமுக அணிக்கு ஆதரவு அலை அதிகமாகவே வீசுகிறது.
எவ்வளவு பணம் இருந்தும் செயதொலைகாட்சியை சன்னுக்கு இணையாக வளர்க்காதது அதிமுகவுக்கு பெரும் வீழ்ச்சியே.
இன்றைய நிலையில் மக்கள் மனங்களில் மீன்டும் கருணாநிதி என்ற அலுப்பு அலையே வீசுகிறது.
நல்ல நல்ல திட்டங்கள் வழி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றும், தமிழகம் எல்லா துறைகளிலும் சிறப்பாக வளரச்சி பெற்றும், சாலை அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பாலங்கள் அமைத்தும், சாலை மேம்பாட்டு வளர்ச்சிக்கும் திமுக அரசே சிறப்பாக செயல் பெற்று வருவதால் திமுக வெற்றியே எதிர்கால தமிழகத்திற்கு தேவை. இது கட்சி சார்பாக எழுதிய கருத்து அல்ல. பொதுவாக சிந்தித்து நடுநிலையாளரான பொது மக்களில் ஒருவருடைய கருத்து.
ReplyDeleteசரியான கணிப்பு.இதே போல கேப்டன் டிவியும்.ஆனால் சில விதி விளக்குகள்.நேற்று தமிழருவி மணியனின் பேட்டியை கேப்டன் டிவியில் ஒளிபரப்பினர்.அதில் அவர் தமிழின படுகொலையை தடுக்க கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கியதையும் அதை கருணாநிதி கண்டுகொள்ளாமல் விட்டதையும் சொன்னார்.
ReplyDelete