Mar 11, 2011

கண்ணீர்விட்டு அழுத கருணாநிதியின் 2ம் மனைவி


சி.பி.ஐ விசாரனைக்கு செல்லும் முன்னர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் கருணாநிதியின் 2ம் மனைவி தயாளு அம்மாள். பல அரசியல் நெருக்கடி, சிறைவாசத்தின் போதும் தன் மனைவி பிள்ளைகளை காப்பதில் நல்ல கணவனாகவும், தந்தையாகவும் இருந்துள்ளார் கருணாநிதி. ஆனால் காங்கிரசிடம் மாட்டிக்கொண்ட இந்த தருணத்தில் விழுபிதுங்கி நிற்கிறார்.

கனிமொழி ராசாத்தியம்மாளோடு போக வேண்டிய சி.பி.ஐ விசாரனை தன்னை வட்டமிட்டதை தயாளு அம்மாளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கணவனை கடந்து சுடாலின், அழகிரி வரை அழுது தீர்த்துள்ளார்.

இறுதியில் வேறு வழியில்லை, அண்ணா அறிவாலையத்தில் தான் விசாரனை என்று சமாதானப்படுத்தியுள்ளார்.

செயலலிதாவால் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது கூட இப்படி ஒரு மனஉளைச்சலுக்கு ஆளானதில்லை கருணாநிதி குடும்பம். ஆனால் இன்று சோனியாவின் காலடியில் சுடுபாறை புழுவாய் தவிக்கின்றனர்.

அடுத்த விசாரனை டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் என்பது தான் திமுகவுக்கு சீரணிக்க முடியாத வலி.

தன்மானம், சுயமரியாதை, தொகுதி, ஆட்சி என அத்தனையையும் விட்டுக்கொடுத்தும் மனைவி குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார்.

செயலலிதாவுடன் மோதிய மோதல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அடுத்தடுத்து சோனியாவுடன் மோதும் இறுதி யுத்தம் தான் கருணாநிதி சரியான சம்மட்டி அடி.

காலம் கடந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது கருணாநிதிக்கு வாய்ப்பு. காங்கிரசை தூக்கி எறிந்து ஈழம் பக்கம் கொஞ்சம் பார்வையை திருப்பினால் போதும்.

தமிழர்கள் மன்னிக்கும் குணம் நிறையவே பெற்றவர்கள்.....

5 comments:

 1. வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
  தமிழ் திரட்டி

  ReplyDelete
 2. தமிழனுக்கு மன்னிக்கும் குணம் அதிகம்
  என்றாலும், `மன்னிப்பு` தவறு செய்தவர்களுக்கு தானே பொருந்தும்.

  ReplyDelete
 3. ஆமாங்க செஞ்ச பாவத்துக்கு தண்டனை கிடைக்க வேனாவா?கடந்த அம்பது வருஷமா தமிழன ஏமாத்தி சொரண்டுன பாவம் சும்மா உடுமா?நல்ல வேணும்

  ReplyDelete
 4. //செயலலிதாவுடன் மோதிய மோதல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அடுத்தடுத்து சோனியாவுடன் மோதும் இறுதி யுத்தம் தான் கருணாநிதி சரியான சம்மட்டி அடி//
  இதை சோனியாவுடனான மோதலாக எப்படி பார்க்க முடியும்? லட்சம் கோடிக்கு மேல் தொகை அடிபடும் ஊழல்; தலைமை நீதி மன்றம் புலன் ஆய்வை மேற்பார்வை செய்கிறது; இருநூறு கோடி தலைவரின் டி வி கம்பனிக்கு வந்தது கண்கூடு. இதில் கம்பனி முதலாளிகளை விசாரிக்காமல் யாரை விசாரிப்பார்கள்? மைய அரசில் யார் இருந்தாலும் இதை நிறுத்த முடியாது> சோனியாவின் தொண்டர் அடிப்பொடி மன்மோகன் சிங்கின் கருணையால் ஓராண்டு தள்ளிப் போட முடிந்தது என மகிழ வேண்டும். கற்பழிப்பு செய்தவனை கைது செய்தால் அதற்கு யாரையும் காரணம் சொல்லக் கூடாது; அவன் செய்கைக்கு அவன் சிலுவையை சுமக்க வேண்டும். எழும்பூரில் ஜோப்படி திருடன் பர்சை அடித்து தூக்கிப் போட்டால் அவன் குழுவில் ஒருவன் பிடித்து வைத்துக் கொள்வான்; போலீஸ் ஜோப்படி செய்தவனை சோதனை செய்தால் அவனிடம் பர்ஸ் சிக்காது. பின்னர் விசாரித்து, அவன் தூக்கிப்போட்ட பர்சை பிடித்தது யார் என்று விசாரிக்கும் பொது இரண்டாமவன் பிடிபடக் கூடும். ராசா எடுத்து தயாளு-கனிக்கு தூக்கிப்போட்ட பர்சின் கதை.

  ReplyDelete
 5. "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

  அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

  ReplyDelete

Popular Posts