48 முதல் 53 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். சம்மதம் என்றால் கூட்டணி தொடரலாம் என திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது. தொகுதி பங்கீடு குறித்து பல யோசனைகளுக்கு பின்னர் திமுக சொன்ன இறுதி யோசனை காங்கிரசை கிடுகிடுக்க வைத்துவிட்டது.
மாநிலத்தில் மட்டும் கூட்டணியை முறித்துக்கொள்ளலாம். மத்தியில் தொடர்ந்து ஆதரவு என்ற அதிரடி யோசனையை திமுக நேற்று முன்வைத்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழக காங்கிரசார் திகைத்துப்போய் உள்ளனர்.
மத்திய ஆட்சிக்காக சோனியாவும், வரட்டு வீம்புக்காக ராகுலும் தங்களை பலிகடாவாக்கி விடுவார்களா என்ற அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர் தமிழக காங்கிரசார்.
தற்போது மத்திய அரசுக்கு திமுக 18, விசி.1 என மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. கூட்டணி முறிந்தால் மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் பதவிவிலக வேண்டும், இதை திமுக விரும்பவில்லை. அதே போல திமுகவின் 19 உறுப்பினர்கள் ஆதரவு விலக்கப்படுமானால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும். வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் கட்சிகளை அவ்வளவு உறுதியாக நம்ப முடியாது. எனவே திமுகவை வெளியேற்ற காங்கிரசும் விரும்பவில்லை.
ஆனால் தற்போதுள்ள ஒரே நெருக்கடி தமிழக தேர்தல் தொகுதி பங்கீடு. கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிட ராகுல் காந்தி விருப்பவில்லை. மேலும் திமுக விடம் கூடுதல் தொகுதிகளை பெருவதை ஒரு வைராக்கியமாக பார்க்கின்றனர் சோனியாவும் ராகுலும்.
மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் மங்கிவிட்ட நிலையில் தனித்து போட்டியிடுவதை தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் 50 குறைவான தொகுதிகளில் போட்டியிடவும் ஈகோ குறுக்கிடுகிறது.
கூட்டி கழித்து தமிழகத்தில் தனித்துபோட்டி, மத்தியில் திமுகவின் தொடர் ஆதரவு என்ற திமுகவின் திட்டத்தை ஏற்க காங்கிரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திமுகவினரும் இதை உட்சாகமாக எதிர்பார்க்கின்றனர். ஆனால் தமிழக காங்கிரசாரின் நிலை தான் அந்தோ பரிதாபம்.
இதுகுறித்து விவாதிக்க இன்று மாலை (தற்போது) டெல்லியில் காங்கிரசு உயர்மட்ட குழு மற்றும் தமிழக தொகுதி பங்கீட்டு குழு என இரு கூட்டங்களை நடத்துகிறது காங்கிரசு.
மத்தியில் கூட்டு மாநிலத்தில் வெட்டு திட்டத்தை காங்கிரசு ஏற்கும் பட்சத்தில் எவ்வித பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து திமுகவும் ஆலோசித்து வருகிறது. இதற்காக நாளை மறுநாள் திமுக உயர்நிலை குழு கூட்டப்பட்டுள்ளது.
அரசியலில் இப்படியும் ஒரு கோலம் இருக்கிறது என்பதை காண தமிழக வாக்காளர்கள் தயாராகிக்கொள்ளவும்.
No comments:
Post a Comment