Mar 28, 2011

தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி. கருத்து கணிப்பு முடிவுகள்


காமராசரை தோற்கடித்து திமுக ஆட்சியை கொண்டுவந்தார் அண்ணா. அப்போதை மக்கள் மனநிலையில் காமராசரும் அண்ணாவும் சரிசம மதிப்பை பெற்றிருந்தனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தனர். 

மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசரை தோற்கடித்து காங்கிரசு ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தார் அண்ணா. அவரது அடித்தளம் இன்று வரை தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு தடையாக இருந்து விட்டது. ஆனால் இன்று மக்கள் செல்வாக்கு சிறிதும் இல்லாத தங்கபாலு முன்பு திமுக தோற்றுபோகும் அவலத்தை யாரும் எதிர்பார்க்க வில்லை.

தற்போதைய உளவுதுறை கருத்து கணிப்புகள் படி தமிழகத்தில் திமுக காங்கிரசு கூட்டாட்சிக்கே வாய்பிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

இலவசங்களுக்கான முன்பதிவாய் டோக்கன் விநியோகிக்கும் அதிரடி திட்டம் மூலம் திமுக மக்களை கவர்ந்து வருகிறது. மேலும் ஓட்டுக்கு 2 ஆயிரம் வரை கனகச்சிதமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கருணாநிதி எதிர்ப்பு அலை வீசினாலும் 85 முதல் 90 தொகுதிகள் வரை திமுக கைபற்றும் என்கிறது பல்வேறு கருத்துகணிப்புகள். 

119+4=123 தொகுதிகளில் போட்டிடும் திமுக 85 தொகுதிகள் வரை வெற்றிபெரும். பாமக 18, விசி.1, கொமுக 1, என மொத்தம் திமுகவுக்கு நிபர்ந்தனை அற்ற ஆதரவாய் 105 தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு உள்ளது. இந்த நிலையில் 15 தொகுதிகள் வரை காங்கிரசு வெற்றி பெற்றால் திமுக&காங்கிரசு&பாமக கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

பெருந்தலைவர் காமராசரை தோற்கடித்து காங்கிரசை முடிவுக்கு கொண்டுவந்தார் அண்ணா. கேவலம் தங்கபாலுவிடம் தோற்று காங்கிரசு ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார் கருணாநிதி. இந்த வரலாற்று புகழோடு தன்னோடு திமுகவுக்கும் முடிவுகட்ட காத்திருக்கிறார் கருணாநிதி. 

இன்றைய கருத்து கணிப்பு நிலவரம்.

அதிமுக 90
திமுக ........85
பாமக ........18
காம்யூ ........14
காங்கிரசு 14
தேமுதிக...12
கொமுக.......1

அதிமுக 171, திமுக 123 தொகுதிகளில் போட்டியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts