தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளில் காங்கிரசுக்கு 3 தொகுதிகளை விட்டுத்தருவதாக பாமக சம்மதித்ததை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வருகிறது.
63 தொகுதிகள் என்பதில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் காங்கிரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் 119 க்கும் குறைவாக போட்டியிடுவதில்லை என்பதில் திமுகம் உறுதியாக உள்ளது.
கூட்டணி உடைந்தால் இரு கட்சிகளின் அரசுகளுக்குமே ஆபத்து உள்ளது. எனவே இருகட்சிகளுமே முறுக்கிபிடிப்பதை நீட்டிக்கின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மகன் அன்புமணிக்கு ஒரு எம்.பி பதவியை உறுதிபடுத்தி 31 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது பாமக. திமுக தோற்றாலும் எம்.பி பதவி உறுதி என்றிருந்தது பாமக. அதே நேரத்தில் காங்கிரசு கூட்டணியை விட்டு விலகுவதால் பாமக கனவு தகர்ந்துள்ளது.
நேற்று அவசர அவசரமாக பாமக தலைவர்களை கருணாநிதி அழைத்து பேசினார். அரசியல் சாணக்கியனான கருணாநிதி பாமகவுக்கு ஒரு பஞ்சு மிட்டாயை தூக்கிபோட்டார். 3 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுங்கள் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தருகிறேன் என்றுள்ளார் கருணாநிதி. அட இதுவும் நல்லா இருக்கே என்று உடனடி சம்மதம் தெரிவித்துள்ளது பாமக.
எனவே காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதில் பிரச்சனை முடிந்துள்ளது.
அடுத்து எந்தெந்த தொகுதிகள் என்ற பிரச்சனைக்கும் ஒரு ஆலோசனை தீர்வாகியுள்ளது. சென்ற தேர்தலில் ஒதுக்கிய 48 தொகுதிகளை அப்படியே ஒதுக்குவது. மீதம் உள்ள 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து ஒதுக்குவது என்றும் முடிவாகியுள்ளது.
இப்படி தொகுதி பங்கீடு மற்றும் எந்தெந்த தொகுதி என்பதும் முடிவுக்கு வந்துள்ளது.
ஆனால்
ஆனால்
அட அது தானே முக்கிய பிரச்சனை
தேர்தலுக்கு முன் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரை சி.பி.ஐ விசாரிக்கக்கூடாது என்பது திமுகவின் முக்கிய நிபர்ந்தனை.
தேர்தலுக்கு முன் கனிமொழி, தயாளு அம்மாள் கைது செய்யப்படமாட்டார்கள். அதே நேரத்தில் சி.பி.ஐ விசாரனையை தவிர்க்க முடியாது என்று காங்கிரசு கைவிரித்து விட்டது.
இந்த பிரச்சனைக்கும் தீர்வு வந்தால்
கருணை தாய் சோனியாவே வருக, ஈழத்தமிழர்களை போல தமிழ்நாட்டு தமிழர்களையும் காக்க என்ற அறிக்கை வரும்
No comments:
Post a Comment