Mar 16, 2011

விரக்தியில் திமுக, மமதையில் அதிமுக:பலமாகும் மூன்றாம் அணி

அதிமுக திமுக கூட்டணிகளில் விரிசல் ஏற்பட்டு பலமான மூன்றாம் அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விரும்பிய தொகுதிகளை காங்கிரசு உட்பட கூட்டணி கட்சிகள் கராராக பெற்றுவிட்டன. இதனால் 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது திமுக. பெரும்பான்மை பெறமாட்டோம். அடுத்து கூட்டணி ஆட்சிதான். அதுவும் காங்கிரசு, பாமகவுடன் என்பதை திமுக தொண்டர்கள் சீரணித்துக்கொள்ளவில்லை. தலைமை மட்டத்தில் கூட்டணி ஏற்பட்டாலும், தொண்டர்கள் மத்தியில் அடிதடி தான் மிஞ்சுகிறது. போதகுறைக்கு பல தொகுதிகளில் காங்கிரசு தனித்துபோட்டி என்ற அறிவிப்புகள் வெளிவர அதிர்ச்சியில் உறைந்துள்ளது திமுக கூட்டணி. 

அதிமுக 160 தொகுதிகளில் போட்டி என்பதை தேமுதிக எதிர்பார்க்கவில்லை. அதே போல மதிமுக வெளியேற்றம், தமிழ் அமைப்புகளின் ஆதரவு இழப்பு போன்றவையும் தேமுதிகவை யோசிக்க வைத்துள்ளது. வேறு வழியில்லை என்ற நிலையில் சேர்ந்துள்ள இடதுசாரிகளும் விரும்பிய தொகுதி கிடைக்காமல் விக்கித்து நிற்கின்றனர்.

இன்று அதிரடியாக 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை செயலலிதா அறிவித்துள்ளார். இதில் தேமுதிகவின் 30, இடதுசாரிகளின் 10 தொகுதிகளும் அடக்கம் என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தேமுதிக மற்றும் இடதுசாரிகள்.

சி.பி.எம் பகிரங்கமாகவே எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தாங்காள் விரும்பும் தொகுதிகளில் இருந்து அதிமுக வேட்பாளர்களை திரும்ப பெறவேண்டும் என்றுள்ளது சி.பி.எம். இதுகுறித்து சி.பி.எம் அவசர ஆலோசனை கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

ஏமாற்றத்தில் அமைதிகாத்த வைகோவுக்கு அதிமுக அணி விரிசல் தெம்பை தந்துள்ளது. மூன்றாம் அணியை பலப்படுத்த தீவிரம் காட்டியுள்ளார்.

மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ வரிசையில் கொமுக, மமக, உட்பட கட்சிகளை சேர்க்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேமுதிகவையும் மூன்றாம் அணிக்கு இழுக்கும் காய் நகர்த்தல்களும் தயாராகியுள்ளதாக தெரிகிறது.

விரக்தியில் இருக்கும் திமுக அணிக்கு மூன்றாம் அணிவரவு சற்று ஆருதலை தந்துள்ளது. ஆனாலும் மூன்றாம் அணி பலம் அடைவது திமுகவுக்கு திக்திக்.

சமீபத்திய தேர்தல் கணிப்புகளின் படி வெற்றி மதமதப்பில் இருக்கும் செயலிதா இறங்கி வருவாரா? 

தன்னம்பிக்கையோடு துணிச்சலாக வைகோ மூன்றாம் அணியை பலப்படுத்துவாரா?

காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை தக்கவைக்கும் கருணாநிதியின் திட்டத்திற்கு பலம் கூடுமா?

மூன்று நாட்களுக்குள் விடை கிடைத்துவிடும்...

1 comment:

  1. தேமுதிக வைகோ கம்யூனிஸ்ட் ஆகியோர் நிச்சயம் மூன்றாம் அணி அமைக்க வேண்டும்.அப்போதான் இந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்து மக்களுக்கு விடுதலை.இதை செய்ய வேண்டும்.

    ReplyDelete

Popular Posts