Mar 17, 2011

விசயகாந்த், வைகோ தலைமையில் மூன்றாம் அணி.


அதிமுக கூட்டணி உடைந்து பலமான மூன்றாம் அணி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு விரும்பும் தொகுதிகளை ஒதுக்காமல் தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது அதிமுக. இதனால் தேமுதிக, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம், மூமுக, பார்வர்டு பிளாக் உட்பட கட்சிகள் அதிமுக அணியில் இருந்து விலகின.  ஏற்கனவே அதிமுக அணியில் இருந்து விலக்கப்பட்டிருந்த மதிமுக, கார்த்திக் கட்சிகளும் மூன்றாம் அணி முயற்சியில் இறங்கியிருந்தன. 

இன்று காலை தேமுதிக அலுவலகத்தில் ராமகிருசுடிணன்,த.பாண்டியன், கிருசுணசாமி, சேதுராமன், கதிரவன் உள்ளிட்ட தலைவர்கள் விசயகாந்துடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாம் அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மதிமுக தலைவர் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மமக உட்பட உதிரி கட்சிகளையும் இணைத்து பலமான மூன்றாம் அணி அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேமுதிக, மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம், சமக, பார்வடு பிளாக், முமுக இதரகட்சிகள் மூன்றாம் அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. 

No comments:

Post a Comment

Popular Posts