தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ளார் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் ஆளும் கட்சிமீது அதிர்ப்தி அலை வீசுகிறது. இந்த தேர்தலில் அதிமுக அணி வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர அதிமுக வெற்றியை தடுக்க முடியாது.
வைகோ தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெரும் பட்சத்தில் வைகோ இல்லாமலே வெற்றி பெற்றுவிட்டோம் என்ற இருமாப்பு அதிமுகவினருக்கு வரும். அதே நேரத்தில் மதிமுக தேர்தல் புறக்கணிப்பால் நடுநிலைவாக்குகள் சிதறவில்லை, அதனால் தான் அதிமுக வெற்றிபெற முடிந்தது என்ற நம்பிக்கை அதிமுக வட்டத்தில் இருக்கும். ஒரு வேளை திமுக வெற்றி பெற்றால் வைகோ நடுநிலை வாக்குகளை பிரித்ததால் திமுக வெற்றிபெற்றது என்ற பலிசொல் வரும். தேர்தல் புறக்கணிப்பால் வைகோ தனது பலத்தை கூட்டியதோடு அடுத்த தேர்தலுக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளார்.
வைகோ முடிவால் சீமான் என்ன செய்யப்போகிறார் என்ற பார்வை தான் பலருக்கும் இருந்தது. சீமானும் சரியான முடிவை எடுத்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக பலமான அணிக்கு வாக்கு கேட்பது தான் புத்திசாலித்தனம்.
தமிழகத்தில் காங்கிரசின் தோழ்வி பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். திமுக காங்கிரசு எதிர்ப்பாளர்கள் தயங்காமல் அதிமுக அணிக்கு வாக்கு செலுத்தலாம்.
தேர்தலுக்கு பின்னர் திமுக & அதிமுக & காங்கிரசு ஒரு யுத்தம் தயாராக இருக்கிறது. அதில் வைகோ தலைமையில் மூன்றாம் அணி கம்பீரமாய் முளைக்கும்.
congressku எதிர் அணி J & VK. இவங்க ரெண்டு பெரும் கடைசி வரை காங்கிரஸ் கூட்டணி கிடைக்காத என்று நாக்க தொங்க போட்டு காத்து இருந்தார்கள்! Jaya even openly said she can support congress in spectrum issue. anyway tamil கட்சிகளின் (seeman) அழிவு இப்படித்தான் நடக்கும் என்றல் யார் தான் மாத்ஹா முடியும்.
ReplyDelete