Mar 3, 2011

திமுக கூட்டணியில் கொமுகவுக்கு 7 தொகுதி


திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. கொமுக வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கொமுக அறிவித்துள்ளது. 

திமுக கூட்டணியில் இதுவரை பாமக 31, விடுதலை சிறுத்தைகள் 10, கொமுக 7, முசுலீம் லீக் 3, மூமுக 1 என மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முசுலீம் லீக் உட்பட 4 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே திமுகவுக்கு 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளது. 

234 ல் 52 போக மீதம் உள்ள 182 தொகுதிகளை தான் காங்கிரசு மற்றும் திமுக பிரித்துக்கொள்ள வேண்டும். திமுக கடந்த தேர்தலை போல 132 (+4=136) தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Popular Posts