கனிமொழியையும் 3ம் பொண்டாட்டி ராசாத்தியையும் காப்பாற்றுவதா? அல்லது ஆட்சியை காப்பாற்றுவதா என்று செய்வதறியாது திகைத்து வருகிறார் கருணாநிதி.
காங்கிரசுக்கு 60 தொகுதிகள் வரை தருகிறோம் ஆனால் அலைகற்றை விவகாரத்தில் கனிமொழி மற்றும் ராசாத்தியம்மாளை தொடக்கூடாது என்பது திமுகவின் பணிவான வேண்டுகோள். ஆனால் காங்கிரசோ கேட்கும் 63 தொகுதிகள் கொடுத்தால் அதை பற்றி யோசிக்கிறோம் என்கிறது.
பாவம் தாத்தா மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் பரிதவிக்கிறார்.
வரும் மார்ச் 15 தேதி சி.பி.ஐ விசாரனைக்காக டெல்லி செல்லும் கனிமொழி சென்னை திரும்புவார் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதே போல அடுத்தடுத்து 3ம் பொண்டாட்டி ராசாத்தி, 2ம் பொண்டாட்டி தயாளு இவர்களும் விசாரனைக்கு அழைக்கப்படலாம்.
நாட்டின் பாதுகாப்பு விசயம் என்ற கோணத்தில் அலைகற்றை வழக்கு நகர்ந்தால் கலைஞர் தொலைகாட்சி முடங்கும் சூழல் கூட உருவாகும்.
இத்தனையையும் தான்டி காங்கிரசை பகைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்தாலும் 360 பிரிவு காத்திருக்கிறது. பொறியில் சிக்கிய எலியான கருணாநிதிக்கு காங்கிரசிடம் மண்டியிடுவதை தவிர வேறு வழி இல்லை.
ஆனால் அரசியல் சாணக்கியன் கருணாநிதி அப்படி அசைந்துவிடுவாரா என்ன?
அதிரடியாய் நேற்றே ஒரு தீர்மானத்தை போட்டு விட்டார்.
காங்கிரசு கூடுதல் தொகுதி கேட்டு மிரட்டுகிறது. தொகுதிக்காக வேறு என்னென்னவோ பிரச்சனையை கிளப்புகிறது. தேர்தல் நேரத்தில் காங்கிரசே இப்படி பிரச்சனையை கிளப்பலாமா என்று புலப்பி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அதிரடி முடிவால் காருணாநிதி 2 விடயங்களை எதிர்பார்க்கிறார்.
1. காங்கிரசு 63 தொகுதிகளில் இருந்து 60க்கு இறங்கி வரும். கூடவே கனிமொழி, இரண்டு பொண்டாட்டிகள் கைதை தவிர்க்க உதவும்.
2. அப்படியே காங்கிரசு இறங்கி வராவிட்டாலும். 63 தொகுதி, ஆட்சியில் பங்கு கொடுக்காததால் பழிவாங்க கனிமொழி, ராசாத்தியை கைது செய்தார்கள், இனி தமிழின தலைவன் என்னையும் கைதுசெய்து கொல்வார்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைக்கலாம். இதனால் தமிழகத்தில் ஒரு அனுதாப அலை ஏற்படும். அதை வைத்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம்.
கருணாநிதி கல் எறிந்துள்ளார். மேற்சொன்ன 2 ல் எந்த மாங்காய் விழும் என்பது விரைவில் தெரியும். அதே நேரத்தில் கருணாநிதி எறிந்த கல் தன் தலையிலேயே விழும் சாத்திக்கூறுகளும் அதிகம்.
60 தொகுதிகளுக்கு காங்கிரசு ஒப்புக்கொள்ளும், வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்த பின்னர் கனிமொழி கைதாவார். பிரச்சார கூட்டத்திலேயே கருணாநிதி கும்பலும் காங்கிரசு கும்பலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வேட்டி கிழிய வீதிவீதியாக ஓடுவார்கள். அய்யகோ எறிந்த கல் என்தலையிலேயே விழுந்ததே என்று ஒரு ...... விழும்.
60 தொகுதிகளுக்கு காங்கிரசு ஒப்புக்கொள்ளும், வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்த பின்னர் கனிமொழி கைதாவார். பிரச்சார கூட்டத்திலேயே கருணாநிதி கும்பலும் காங்கிரசு கும்பலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வேட்டி கிழிய வீதிவீதியாக ஓடுவார்கள். அய்யகோ எறிந்த கல் என்தலையிலேயே விழுந்ததே என்று ஒரு ...... விழும்.
No comments:
Post a Comment