Mar 27, 2011

திருப்பூர் வடக்கு இந்திய தேர்தல் கூத்தை நிரூபிக்குமா?


திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சிகளின் சமரசத்தை தொடர்ந்து 140 வேட்பாளர்களை திரும்ப பெற தொழில் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி பரப்பப்படுறது. ஆனால் உண்மையில் 140 வேட்பாளர்களும் வேட்புமனுவை திருப்ப பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.


140 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சாயப்பட்டறை பிரச்சனைக்கு கடுகளவேணும் தீர்வு வந்துவிடப்போவதில்லை. அதே நேரத்தில் 140 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது நிச்சயம் ஒரு தீர்வை நோக்கி நகர்த்த முடியும். 

கடந்த 1996ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1030 பேர் விவசாய கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள். இதனால் மொடக்குறிச்சியை இந்தியாவே திரும்பி பார்த்தது. 

ஆனால் வருத்தம் என்னவென்றால் 63 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. வெற்றிவேட்பாளரான திமுகவின் சுப்புலட்சுமி செகதீசன் 55% வாக்குகள் பெற்றார். 1030 சுயேட்சைகள் போட்டியிட்டும் அவர்களால் பிரிக்க முடிந்தது வெறும் 5% வாக்குகளை மட்டுமே.

போதிய விழிப்புணர்வோ பிரச்சாரமோ இல்லாததால் மொடக்குறிச்சி முயற்சி தோல்வியை தந்தது. ஆனால் அதே பாணியில் திருப்பூர் வடக்கு தொகுதியின் முடிவுகளும் இருக்க கூடாது

சாயபட்டறை பிரச்சனையை மட்டுமல்ல, அரசியல் கட்சிகளை நிராகரிக்ககூடிய நியாமன காரணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். 140 பேரும் சுயேட்சை வேட்பாளர்களின் தேவை மற்றும் பலத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 

ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்த பட்சம் 500 (0.5%)வாக்குகளையாவது பிரிக்க வேண்டும். அப்படி நடக்குமானால் இந்திய தேர்தல் என்பது ஒரு கேளிகூத்து என்பதை கண்டீப்பாக நிரூபிக்க முடியும். இந்திய தேர்தல் முறையை திருத்தியே ஆகவேண்டும் என்ற முழக்கத்துக்கு ஒரு ஆதரா மைல்கல் கிடைக்கும்.

பதிவாகும் 80% வாக்குகளில் 60% வாக்குகளை சுயேட்சை வேட்பாளர்கள் பிரிக்க வேண்டும். வெற்றி வேட்பாளர் 10% துக்கும் குறைவான வாக்குகளை பெற்றவராக இருக்க வேண்டும். இது நிகழுமானால் இந்திய தேர்தல் கூத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்ற குரலை ஓங்காரமாகவே ஒலிக்க முடியும்.
  
அந்த மைல்கல்லை திருப்பூர் வடக்கு தொகுதி எட்டும் என்று நம்புவோம்.

3 comments:

 1. தேவியர் இல்லத்தில் இட்ட மறுமொழிக்கான பதில்....
  @தமிழ்மலர் said...
  ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பேசுவீங்கன்னு எதிர்பார்க்கலை....
  தேர்தல் புறக்கணிக்க வேண்டாம், வாக்களியுங்கள்,
  பிடிக்கலையா 49 0 மூலம் என் ஓட்டு யார்க்கும் இல்லைனு சொல்லுங்க...
  //..நான் இதுவரை வாக்கு செலுத்தியது இல்லை. இந்திய சனநாயக முறைகளை சீர்படுத்தும் வரை இனிமேலும் வாக்கு செலுத்தபோவது இல்லை. ..//

  அதை விடுத்து இப்படி சொல்லுவது பொறுப்பல்ல..
  சனநாயக முறையை யார் திருத்துவர்? ஓட்டளிகவில்லைன
  நீங்க கள்ள ஓட்டுபோட வழி வகுக்குறிங்க.. அப்புரம் அடுத்தவங்களை சுட்டிகாட்ட உங்களுகளுக்கு தகுதியில்லாமல் போய்விடும்...


  நீங்களும் நானும் செய்யவேண்டியதும் இருக்கு. நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம். இந்த முறை யாருக்கேனும் வாக்களீகனும் அவ்வளவே. அடுத்த முறை நாம் வாக்களித்த , வாக்களிக்க மறுத்த கட்சி செயல்பாட்டை அலசி , தவறாது வாக்களிப்போம். இப்படி செயல்பட்டல் எதிர் காலத்தில் குறைதது 99% வாக்கு பதிவு நிச்சயம். குழப்படி செய்பவர் தொற்பதும் நிச்சயம்.. செயல்படுத்த நீங்க ரெடியா ?

  இதை பற்றி ஒரு பதிவு போடுங்க...
  அதாவத் ...நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம்.

  ReplyDelete
 2. திரு. வினோத் உங்கள் மாற்று கருத்துக்கு நன்றி.

  ஆனாலும் எனக்கு வாக்கு செலுத்த வரிசையாய் கால்கடுக்க நிற்பவரை பார்த்தால் சிரிப்பு தான் வரும்.

  வாக்கு செலுத்துவது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது விதி. 49 ஓ ரகசியமாகவும் எளிமையாகவும் இல்லையே. அப்புறம் நீங்க என்ன தான் மாங்கு மாங்குனு 49 ஓ போட்டாலும் உங்க ஓட்டு கள்ள ஓட்டாய் பதிவாகிவிடும். 49 ஓ மாயமாகிவிடும்.

  வாக்கு சாவடியில் பூத் முகவர்கள் அடிக்கும் கூத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த முறை உற்று பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 3. சரி உங்க ஓட்டை சுயேட்சைக்கு போட வேண்டியது தானெ...

  ReplyDelete

Popular Posts