Mar 8, 2011

காமம் கடந்து பெண்ணை ரசியுங்கள்


பெண்கள் சுதந்திரம் என்றால் பலருக்கும் உடனடி நினைவுக்கு வருவது ஓட்டல்பாரில் தண்ணியடித்து சுற்றும் பெண்கள், சிகரெட் பிடிக்கும் பெண்கள், சீன்சு பேண்ட் டீ&சர்ட் சகிதம் திரியும் பெண்கள், ஆண்களை ஆட்டிப்படைக்கும் பெண்கள்.

உண்மையில் பெண் சுதந்திரமும், விடுதலையும் இதனுள் அடங்கிவிடுகிறதா? 1% பெண்களின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் மதிப்பிடலாமா? இந்த விடயத்திலும் ஆணாதிக்கமே மேலோக்குகிறது என்பது தான் எதார்த்தம்.

பொதுவாக பெண்களை ஒரு போகப்பொருளாக பார்க்கும் மனோபாவம் இன்றளவும் இருக்கிறது. இது தவறில்லை. அது இயற்கை. ஆணுக்காக தான் பெண். பெண்ணுக்காக தான் ஆண். அதே நேரத்தில் பெண் சுதந்திரம் என்ற ஒற்றை பேச்சிலும் கவர்ச்சி போதையை மட்டும் முதன்மை படுத்துவது தவறு. போதையில் சுற்றும் பெண்களை வைத்து மட்டும் எப்படி பெண்விடுதலைக்கு எதிராக பேசலாம்?

உண்மையில் பெண்விடுதலையை ஆண்கள் ரசிக்கிறார்கள். சிலக்கட்டுப்பாடுகளை பெண்கள் உடைத்தெரிந்து வெளியில் வரவேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் விருப்பம். எந்த பெண்ணும் தன்னை ஆட்கொள்ள ஆண் அனுமதிக்கிறான். ஆனால் பிரச்சனை ஆணா பெண்ணா என்பதில் இல்லை. ஈகோ அது ஆண் பெண் இனம் பார்ப்பதில்லை

பெண்விடுதலை இன்னும் தேவைப்படுகிறது. இதை எதிர்க்கும் சில பெரிசுகளை விடுங்கள். இளவட்டங்களை பார்த்து ஒரே ஒரு கேள்வி

உங்கள் காதலியை உங்கள் தங்கையை தைரியமாக உங்களால் அனைத்து இடத்திற்கும் சக மனிதராக கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா?

பிறப்பு முதல் இறப்பு வரை ஆணுக்கு உடல்ரீதியாக பெரிதான மாற்றங்கள் இல்லை

ஆனால் பெண் அப்படி அல்ல. அவள் கருவறையில் இன்னொரு உலகம் இருக்கிறது. தாய்மைக்கு முன்னும் பின்னும் என இரு ஆயுளில் பெண்ணின் வாழ்க்கை நகர்கிறது. இதன் அர்த்தம் பிரசவ வலியை உணர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும். இந்த ஒற்றை உதாரணத்தை எப்படி ஆண்களுக்கு புரியவைப்பது? 

கட்டுப்பாட்டை மீறுதல்,  அநாகரீகமாக நடந்துகொள்ளல், திமிர் பிடித்து அலைதல், போதையில் சுற்றுதல், ஆணவத்தில் மிதத்தல் இதற்கெல்லாம் ஆண் பெண் இனம் கிடையாது. பெண்களிலும் அப்படிப்பட்ட 1% பேர் உள்ளனர், ஆண்களிலும் அப்படிப்பட்ட 1% பேர் உள்ளனர். எனவே இந்த 1% பேரை வைத்து ஒட்டுமொத்த பெண்ணினத்தை எடைபோட வேண்டாம் என்பதுவே இந்த பெண்கள் தினத்தில் ஒரு பெண்ணின் வேண்டுகோள்.

பெண்கள் இயற்கையிலேயே ஆடல்கலை, வாதத்திறமை, அழகுபடுத்திக்கொள்ளல் போன்ற குணங்களை கொண்டுள்ளவர்கள். இவர்களை இளம் பருவத்தில் சுதந்திரமாக ஆடவிட்டு ரசித்துவிட்டு திடீர் என ஒரு கட்டுப்பாட்டை போட்டு அத்தனையும் அடக்கு என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது.

உங்கள் காதலியை மனைவியை அன்னையை பாடசொல்லி ரசியுங்கள், ஆடசொல்லி ரசியுங்கள், வாதித்து ரசியுங்கள், அழகுபடுத்தி ரசியுங்கள், அப்போது தெரியும் பெண்விடுதலையின் அருமை

பெண் சுதந்திரத்தின் அருமை தெரியாதவர்கள் ஒருமுறை கீழ்சொல்லும் பாடல்களை கண்டு பின்னர் முடிவெடுங்கள்

1. சின்ன சின்ன ஆசை 
2. அத்திரி பத்திரி கத்திரிக்கா
3. வான் மேகம்
4. மேகம் கருக்குது
5. போவோமா ஊர்கோலம் 
6. சின்ன சின்ன வண்ணக்குயில்
7. சின்ன குயில் பாடும் பாட்டு 
8. தேவதை வம்சம் நீயே
9. யாரோ யாரோடி
10. கொஞ்சும் மைனாக்களே

இந்த பாடல்களில் ததும்பும் பெண் சுதந்திரம் அதுதான் தேவை
அந்த சுதந்திரம் அதை பெண் ஆயுள் முழுவதும் எதிர்பார்க்கிறாள். 

காமம் கடந்து பெண்மையை ரசியுங்கள்.

பெண்ணை ரசித்தவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் பெண்விடுதலைக்கு எதிராக பேசமாட்டார்கள்.

1 comment:

Popular Posts