அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதிமுக வைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக என இரு அணிகள் மீதும் அதிர்ப்தி உள்ளது.
காங்கிரசுக்கு எதிராக சீமான் உட்பட தமிழர் அமைப்புகள் இணைந்து 2% வாக்குவங்கி களம்காண்கிறது. 63 தொகுதிகளிலும் காங்கிரசை தோற்கடிப்போம் என்ற சபதத்தில் சீமான் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர்.
காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்அணிக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். அந்த வரிசையில் எதிர் அணியில் அதிமுக நிற்கிறது. இந்த நிலையில் வைகோ மூன்றாம் அணியாக போட்டியிட்டால் சீமான் யாருக்கு வாக்கு சேகரிப்பார் என்பது தான் உச்சகட்ட கேள்வி.
ஒருவேளை வைகோவுக்கு வாக்குகேட்டால் வாக்குகள் சிதறி காங்கிரசு வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு ஓட்டு கேட்டால் வைகோ நட்புக்கு தர்மசங்கடமான நிலையுள்ளது.
தேர்தலுக்கு பின்னர் காங்கிரசு கணிசமான தொகுதிகளுடன் அதிமுக அணிக்கு செல்லாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இந்த நிலையில் தமிழர் அமைப்புகள் யாருக்கு வாக்கு கேட்பார்கள்?
புதிருக்கு புதிராக உள்ள இந்த தேர்தல் தமிழகத்தை புரட்டிப்போட காத்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
தேர்தலுக்கு பின்னர் காங்கிரசு கணிசமான தொகுதிகளுடன் அதிமுக அணிக்கு செல்லாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இந்த நிலையில் தமிழர் அமைப்புகள் யாருக்கு வாக்கு கேட்பார்கள்?
ReplyDelete/////
.
.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அப்படி நடந்தால் ஜெயா அந்த ஆதரவை ஏற்று கொள்வார்.(அவருக்கு இலங்கை தமிழர் பற்றிய கவலை என்றும் இருந்ததில்லை.ஏதோ தேர்தலுக்காக கூச்சல் போட்டார்.மற்றபடி கருணாநிதிக்கும் அவருக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.இதை சீமான் புரிந்து கொள்ளவில்லை.