Feb 2, 2011

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது

ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அழகிரி கோரியிருந்தார். இதற்கு கனிமொழி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ராசாவை நீக்காவிட்டால் மத்திய அமைச்சர் மற்றும் தென்மண்டல செயலாளர் பதவியை ராசினாமா செய்வதாக அழகிரி மிரட்டல் விடுத்திருந்தார்.

ராசாவை திடீரென கட்சியில் இருந்து நீக்கினால் தலித் வேசம் கலைந்துவிடும் என்று கருணாநிதி கவலை தெரிவித்திருந்தார். அடுத்த திமுக பொதுகுழுவுக்குள் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று அழகிரியை சமாதானப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாளை திமுக பொதுக்குழு கூடுவதாக இருந்தது. ராசாவை கட்சியை விட்டு நீக்க தகுந்த காரணம் தேவை என்பதை கருணாநிதி உணர்ந்திருந்தார். அதற்காகவே டெல்லி பயணத்தை பயன்படுத்தியுள்ளார். ராசா கைதுக்கு டெல்லியில் கருணாநிதி பச்சை கொடி காட்டியுள்ளார். இதற்கு அழகிரி மற்றும் தயாநிதிமாறன் தரப்பு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. அதை தொடர்ந்தே இன்று ராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை திமுக பொதுகுழுவில் ராசா கட்சியை விட்டு தானாக நீக்கப்படுவார்.

ராசாவை வைத்து பிளாக்மெயில் செய்துவந்த காங்கிரசை தோற்கடிக்கவும், அழகிரியை சமாதானப்படுத்தவும், தன் தலித்வேசம் கலையாமல் இருக்கவும் கருணாநிதி போட்ட ஒரே கல்லில் மூன்று மாங்காய் கணக்கு தான் ராசா கைது.

No comments:

Post a Comment

Popular Posts