Jan 1, 2011

ஈரோடு சங்கமம் : மொக்கை பதிவர்களுக்கு ஓசை செல்லாவின் குட்டு

ஈரோடு சங்கமத்தில் மதிய விருந்துக்கு அடுத்தபடியாக என்னை கவர்ந்தது ஓசை செல்லாவின் ஆதங்கம். 

10 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் வேகம் குறித்து நகைச்சுவையாக பேச்சை துவங்கினார். தமிழ் வலைபதிவுகளை மேம்படுத்தி வளர்க்க ஆரம்ப காலங்களில் ஓசை செல்லா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியவை. 

ஓசை செல்லாவின் கருத்துக்களை விரிவாக எழுத நேரமில்லை. ஆனால் மைய கருத்தை மட்டும் சுருக்கமாக எழுதுகிறேன். அதையே இந்த 2011ம் ஆண்டில் தமிழ்வலைபதிவர்களுக்கு ஆலோசனையாகவும் வைக்கிறேன்.

வலைபதிவு உண்மையில் ஒரு வரபிரசாதம். இதில் யார் வேண்டுமானலும் எண்ணங்களை பதியவைக்கலாம். வலைபதிவர்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும், ஒரு கவுரவம் வேண்டும், ஒரு பொருட்டாக மதிப்பிட வேண்டும் என்றால் எழுத்து மேம்பட வேண்டும். 

எழுத்தாளர்களுக்கு இணையாக வலைபதிவர்கள் படைக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காண்பிக்க வேண்டும். 

வெறும் மொக்கை மட்டுமே வலைபதிவு என்றால் யாரும் நிச்சயம் வலைபதிவை சீண்ட மாட்டார்கள். மொக்கை தேவை தான் அதற்காக வலைபதிவே மொக்கையானால் வலைபதிவுக்கு மதிப்பில்லை. 

இன்று பலரும் வலைபதிவை மதிக்க காரணம் மொக்கை அல்ல. தரமான எழுத்துகள் படைப்புகள் வலைபதிவில் இருப்பதால் தான் வபைதிவை மதிக்கிறார்கள். 

மொக்கை பதிவர்கள் தங்கள் மனசந்தோசத்திற்காக எழுதலாம். ஆனால் அதுவே மற்ற நல்ல தரமான எழுத்துக்களுக்கு இருட்டடிப்பாக மாறக்கூடாது

தொழில்சார்ந்து கணிணி முன்னர் அமர்ந்திருப்பவர்களுக்கு வலைபதிவு ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம். அந்த பொழுது போக்கையும் பயனுடையதாக்குங்கள். 

மொக்கை பதிவர்களின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் வலைபதிவுக்கு ஒரு மதிப்புடமை கிடைக்காது.

வேண்டுமென்றே எதிர்மறை பின்னூட்டம் போடுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பது, ஒருவரே பல பதிவுகளை வைத்துக்கொண்டு அவருக்கு அவரே மாறிமாறி பின்னூட்ட சண்டை இட்டுக்கொள்வது. குழுவாக மொக்கையடிப்பது, குழுவுக்குள் மட்டுமே ஓட்டுபோட்டுக்கொள்வது, கருத்துக்களை திரித்து எழுதுவது, இதெல்லாம் வலைபதிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழ்வலைபதிவில் மிகமிக குறைவு என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். துறைசார்ந்த வலைப்பதிவுகள் கவனிக்கப்பட வேண்டும். அதை வரவேற்று ஊக்குவிக்க வேண்டும். திரட்டிகளிலும் துறைசார்ந்த பதிவுகளுக்கு தனி களம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மொக்கை மட்டுமே வலைபதிவு என்றால் அது மதிப்பற்று போகும். துறைசார்ந்த எழுத்துக்களை வரவேற்போம், பின்னூட்டம் இட்டு அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.

No comments:

Post a Comment

Popular Posts