தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது.
தினமலரின் குடும்ப சண்டை அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் நிற்பார்கள். சண்டையில் ஈரோடு, சேலம், திருச்சி பதிப்புகள் ஒரு குழுவாகவும், சென்னை மதுரை கோவை புதுச்சேரி பதிப்புகள் ஒரு குழுவாகவும் பிரித்துக்கொண்டார்கள்.
ஈரோடு தினமலரும் கோவை தினமலரும் பரம எதிரிகள் என்பது ஊரறிந்த விடயம். இருவருக்குள்ளும் செய்திகளை திரித்து வெளியிடுவதில் கடும் போட்டி இருக்கும். குறிப்பாக கோவை தினமலர் குழு ஈரோட்டில் காலைகதிர் என்ற போட்டி பத்திரிக்கை நடத்துகிறது. காலைகதிருக்கும் ஈரோடு தினமலருக்கும் சக்களத்தி சண்டை எப்போதுமே உண்டு. ஒருவருக்கு ஒருவர் தான்தான் பெரிது என பீற்றிக்கொள்ள அவ்வப்போது சில பரபரப்பு செய்திகளை அவிழ்த்து விடுவார்கள். இதனால் பல முறை பொதுமக்களிடம் மன்டியிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஈரோடு தினமலருக்கு போட்டியாக தற்போது காவேரியில் கர்நாடகா தண்ணீர் எடுக்கிறது என்ற கலவரத்தை கிளப்பிவிட்டுள்ளது கோவை தினமலர்.
மேட்டூர் அணை மற்றும் கொளத்தூர் பகுதிகள் இவர்கள் சொத்து சண்டையில் ஈரோடு தினமலருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் தினமலரை விற்கும் உரிமை ஈரோடு பதிப்புக்கு தான் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தான்தான் தீவிர செய்திகளை தருகிறேன் என்று காண்பிக்க கோவை தினமலர் அவ்வப்போது சில முயற்சிகள் எடுக்கும். அதை ஈரோடு தினமலர் எதிர்க்கும். தெரு சண்டை போடாத குறையாக எழும் இந்த பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் அண்ணன் தம்பிகள் கைகட்டிநிற்பது வாடிக்கை.
நீண்ட நாள் கழித்து மீண்டும் இவர்கள் குடும்பத்திற்குள் என்ன பிரச்சனையோ? திடீர் என காவேரியில் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளார்கள்.
மதேசுவரன் மலையில் உள்ள கர்நாடக தமிழர்களுக்கு சிறு குழாயில் குடிநீர் எடுப்பதால் தமிழகத்தில் உள்ள தமிழக தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கு தமிழக தமிழர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினமலர் மட்டும் தொடர்ந்து ஒரு வாரமாக இந்த பிரச்சனையை அரசியல் சூட்டுக்கு துண்டிவிட்டு வருகிறது.
ஈரோடு தினமலரிடன் தான்தான் இந்த செய்தியை முதலில் வெளிக்கொண்டு வந்தேன் என்பதை காண்பித்து அந்த பகுதியை அபகரிக்க கோவை தினமலர் செய்யும் சதிவேலை இது என்பது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
தினமலரின் இந்த நரித்தந்திரத்துக்கு பலியாவது தமிழக கர்நாடக தமிழர்கள் தான். தினமலரின் குடும்ப சண்டைக்கு கூட காவேரி பலிகடா ஆக்கப்படுவது காலத்தின் கொடுமை.
No comments:
Post a Comment