2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை கருணாநிதி முழு வீச்சாக செய்து வருகிறார். ஆனால் எந்த முயற்சியும் முழுமையான பலனை தருவதில்லை.
காங்கிரசை வெளியேற்றினால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என இடதுசாரிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதே நேரத்தில் பாமக ஒரே ஒரு நிபர்ந்தனையுடன் அணிசேர தயாராகிவிட்டது. தேர்தலுக்கு பின் மத்தியில் அன்புமணி ராமதாசை மேலவை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுதரவேண்டும்.
விசயகாந்த் முழுமையாக அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார். இதனால் காங்கிரசு வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டது. காங்கிரசு வராவிட்டால் மதிமுக, இடதுசாரிகள், கூடவே கொங்கு முன்னேற்ற கழகத்தையும் சேர்த்துக்கொள்வது என அதிமுக முடிவுசெய்துள்ளது.
அதிமுகவுக்கு சீமான் மற்றும் சனவரியில் கட்சி துவங்க இருக்கும் நடிகர் விசய் ஆகியோர் அதரவு தெரிவிக்ககூடும்.
தற்போதைய நிலவரப்படி
திமுக - காங்கிரசு - பாமக - விடுதலைசிறுத்தைகள் - சில இசுலாமிய கட்சிகள்
அதிமுக - தேமுதிக - மதிமுக - இடதுசாரிகள் - கொ.மு.க - புதிய தமிழகம் - சில இசுலாமிய கட்சிகள்
என்ற நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.
சமக பாரதியசனதா போன்றவையும் அதிமுக பக்கம் சாய தாயாராகியுள்ளன.
காலங்கள் மாற கட்சிகளின் கோலங்கலும் மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. தன...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///எப்புடி,ரங்கோலி?????
ReplyDeleteபெயரில்லா கூறியது...
ReplyDelete///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க!நான் லகரம்,ளகரம் பிழை கண்டு பிடித்துக் கூறவில்லை!கட்சிகளின் குழப்பங்களைக் கிண்டலடித்தேன்!அவ்வளவே!!!!!!!!!!
ReplyDelete