Mar 31, 2011

கருணாநிதி பக்கம் நகரும் கருத்துகணிப்புகள்


2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓரளவு வெற்றிவாய்ப்பு உள்ள அணி பக்கம் கருத்து திணிப்பை நடத்திவிடுவார்கள். கடந்த வாரம் வரை அதிமக அலை வீசியது. 140 தொகுதிகளுக்கு மேல் அதிமுக அணி கைபற்றும் என்று கருத்துகணிப்புகள் கூறி வந்தன. ஆனால் இந்த வாரம் திடீர் பல்டியாக கருத்து கணிப்புகளில் திமுக அலை வீசுகிறது. இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 2 தேதிக்கு மேல் திமுக அலை வீசும் என்று பாமக தலைவர் ராமதாசும், சுடாலினும் சொல்லி வந்தார்கள். அதேபோல காய் நகர்த்தப்பட்டுள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.

பணத்தை இறக்க தயக்கம் காட்டிவந்த திமுகவினர் இப்போது தைரியமாக பணத்தை வாரி இறைக்கின்றனர். 130 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்கிறது உளவுத்துறையின் சமீபத்திய கருத்து கணிப்பு.

பிரச்சாரம் மற்றும் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மிகமுக்கிய பணிகளை செய்வதில் அதிமுக அணி ஆமை வேகத்தில் தான் உள்ளது.

சன் தொலைகாட்சியை சமாளித்து வெற்றி அலையை மக்கள் மனதில் பதிய வைக்குமா அதிமுக ªன்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏப்ரல் 3 கருத்துக்கணிப்புகளை வெளியிட கடைசி நாள். அன்று ஏராளமான கருத்துக்கணிப்புகள் வெளிப்படையாக வெளியாக உள்ளன. அன்று 20 க்கும் மேற்பட்ட திமுக அணியின் கருத்து திணிப்புகள் வெளியாக உள்ளது. உண்மை நிலவரத்தை துள்ளியமாக அறிய இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ்மலரும் இறுதி நிலவரம் அறிய முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளின் முழு நிலவரம் அ முதல் ன் வரையிலான புள்ளி விவரங்களுடன் விரைவில் வெளியிடப்படும். 

2 comments:

  1. உலக கோப்பை இறுதி போட்டியில் தமிழின விரோதிகள் இந்தியா இலங்கை மோதுகிறது.அதை உண்மை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சன் குழுமம் போன்ற ஒரு கேவலமான ஒரு நிறுவனம் இந்த உலகத்தில் இருக்க முடியாது. தினகரன் என்ற பேப்பரில் எந்த அளவிற்கு மட்டமான செய்திகள் வெளியிட முடியுமோ அவளோவு மோசமான செய்திகள். நடுநிலையான செய்திகள் ஒரு சதவீதம் கூட இல்லை. மாறன் குடும்பம் இன்னும் தமிழனை முட்டாள் என நினைக்கரன். இவர்களுக்கு அழியும் காலம் வெகு தூரம் இல்லை.

    ReplyDelete

Popular Posts