Mar 13, 2011

யாரை வெளியேற்றுவது? செயலலிதா ஆடுபுலி ஆட்டம்

அதிமுக கூட்டணியில் இதுவரை 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மிதம் உள்ள 182 தொகுதிகளை தான் இனி பங்கிட வேண்டும்.

தனிபெரும்பான்மை பெற குறைந்தது 150 தொகுதிகளுக்கும் கூடுதலாக போட்டியிடவேண்டும் என்று அதிமுக திட்டமிட்டுள்ளது. அனேகமாக 153 தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம். இதில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் இதர கட்சிகளின் தொகுதிகளும் உள்ளடக்கம்.

மமக 3, புதிய தமிழகம் 2, சமக 2, மூமுக 1, பார்வடு பிளாக்1, இகுக 1, கொஇபேரவை 1, என மொத்தம் இதர கட்சிகள் 11 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதில் மமக தனி சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதலாக இன்னொரு இதர கட்சி அதிமுக சின்னத்தில் போட்டியிட கூடும். 

12 + தேமுதிக 41 என மொத்தம் 53 தொகுதிகள் காலி. மிதம் உள்ள 181 தொகுதிகளில் அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிடும். 144 + 13 = 157 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் பட்சத்தில் குறைந்தது 125 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றிபெற்றுவிட முடியும் என்பதுவே அதிமுகவின் திட்டம். 

157+41=198 போக 36 தொகுதிகளை தான் மதிமுக, இந்திய கம்யூ, மார்க்சிய கம்யூ ஆகியவற்றிற்கு பிரித்து கொடுக்க வேண்டும். மதிமுக 15, சி.பி.எம்.11, சி.பி.ஐ 10 என பிரித்துக்கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

ஆனால் 21 தொகுதிக்கும் குறையாமல் வேண்டும் என்று மதிமுகவும், குறைந்தது 15 வேண்டும் என்று சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் கோரி வருகின்றன. 

சீமான் மற்றும் ஈழம் ஆதரவு வாக்குவங்கி மதிமுக பக்கம் இருப்பதால் மதிமுகவை தக்கவைத்துக்கொள்ள அதிமுக விரும்புவதாக தெரிகிறது. மதிமுகவை வெளியில் விட்டால் மூன்றாம் அணி என்ற பெயரில் வாக்குகள் பிரியும் என்ற பயம் செயலலிதாவுக்கு உள்ளது. அதே நேரத்தில் கம்யூனிசுட்டுகளை கழட்டி விடவும் தயக்கம் உள்ளது. களப்பணிக்கு கம்யூனிச தொண்டர்கள் தேவைப்படுகின்றனர்.

மதிமுக 21, சி.பி.ஐ 13 என 34 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

சி.பி.எம் ஒத்துவந்தால் 15, சி.பி.ஐ ஒத்துவந்தால் 13. எதாவது ஒரு கம்யூனிச கட்சி விட்டுபிரிந்தால் மதிமுகவுக்கு 21 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்படியே காய்நகர்த்தல்கள் நடைபெருகிறது. 


அதிமுக ....144
தேமுதிக ..41
மதிமுக ....15
சி.பி.எம் ....11
சி.பிஐ ........10
இதரம் .......13

அல்லது 


அதிமுக .....146
தேமுதிக ...41
மதிமுக ......21
சி.பிஐ .........13
இதரம் ........13



இது தான் அதிமுக கூட்டணி கணக்கு. 

ஒரு கம்யூனிச கட்சியை பிரித்துவிடுவதால் பெரிதாக மூன்றாம் அணி உருவாகிடாது என்பது செயலலிதாவின் கணக்கு.

மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ யார் வெளியேறுவார்கள் காத்திருக்கிறது அதிமுக. 3ல் யார் வெளியேறுவது தோழமையுடன் பழகிய  மூன்று கட்சிகளுமே தர்ம சங்கடத்தில் உள்ளன.

1 comment:

  1. ஆமா செயலலிதாவ நம்பினோர் கைவடப்படுவர்.வாஜ்பாய கேளுங்க அலறுவார்.இந்த அம்மணிய நம்புனா நாமம்தான்

    ReplyDelete

Popular Posts