Mar 5, 2011

காங்கிரசை ஈடுகட்ட சரத்குமாரக்கு திமுக அழைப்பு


திமுக கூட்டணியில் காங்கிரசை கழட்டிவிட்டுவிட்டு சரத்குமார் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது.

தேமுதிகவுடன் காங்கிரசு கூட்டணி சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கருணாநிதி கவனமாக இருந்தார். அதற்காக காங்கிரசு இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்தார்.

நேற்று அதிமுக கூட்டணியில் தேமுதிக கூட்டணியில் கையெழுத்தானதும் கருணாநிதிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. 

அடுத்த அரை மணிநேரத்தில் 63 தொகுதிகள் எல்லாம் கொடுக்க முடியாது என தைரியமாக அறிக்கை விட்டார். காங்கிரசை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட முதல் அறிக்கை (கடந்த 5 ஆண்டுகளில்).

காங்கிரசுக்கு கேட்கும் 63 தொகுதிகள் கொடுத்துவிட்டால் மீதம் உள்ள 118 போட்டியிட்டு எங்கே பெரும்பான்மையை பிடிப்பது? 

குட்ட குட்ட குனிந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளது திமுக. 51 அல்லது அதிகபட்சம் 55 சம்மதம் என்றால் கூட்டணி என்ற இறுதி இறுக்கத்தை திமுக எட்டி விட்டது.

முதல் 70 வரை தருவதாக சொன்னவர்கள் இப்போது 53 என்பதை ஏற்க முடியாது என்று காங்கிரசு ஈகோவில் உச்சத்தில் உள்ளது. 

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளை சரத்குமார் மற்றும் கம்யூனிசுட்டுகளுக்கு ஒதுக்கலாம் என்ற அதிரடி முடிவில் திமுக அதிக கவனம் செலுத்துகிறது.

காங்கிரசு கட்சிக்கு பொதுவாக நாடர் சமுதாயத்தின் வாக்குகள் தான் அதிகம். சுதந்திரபோராட்டம் மற்றும் காமராசரால் ஏற்பட்ட தாக்கம் இன்றுவரைக்கம் தொடர்கிறது. அதே நேரத்தில் சரத்குமாரின் கட்சி உதயத்தால் கணிசமான நாடார் சமுதாயத்தினர் காங்கிரசில் இருந்து பிரிந்துள்ளனர். இதனால் காங்கிரசு பலவீனம் அடைந்துள்ளது. 

சரத்குமார் மூலம் காங்கிரசு இழப்பை ஈடுகட்டலாம் என்று திமுக கணக்குபோடுகிறது. ஆனால் சரத்குமாரோ ஓரீரு தொகுதிகள் கிடைத்தாலும் நண்பர் விசயகாந்துடன் அதிமுக கூட்டணியிலேயே சேர விருப்பமாக உள்ளார். அதே போல தான் கம்யூனிசுட்டுகளும். 

எனவே திமுகவுக்கு காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை.

1 comment:

Popular Posts