Mar 26, 2011

ஒரே தொகுதியில் 152. தேர்தல் தள்ளிபோக வாய்ப்பு


திருப்பூர் வடக்கு தொகுதியில் 152 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது.

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சணையை அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நூதன போராட்டத்தை ஏற்படுத்தினர் சாயபட்டறை முதலாளிகள். திருப்பூர் வடக்கு தொகுதியில் 1000 வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கினர். இன்று வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் 140 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளர். இது போக அரசியல் கட்சி வேட்பாளர்கள் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. எனவே இந்த தொகுதியில் வாக்கு சீட்டு முறை தான். இதிலும் சிக்கல் உள்ளது. வேட்புமனு பரிசீலனை 30 தேதி முடிகிறது. அடுத்த 2 நாட்களுக்கு சுயேட்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீடு குலுக்கல் நடைபெறும். ஏப்ரல் 2 முதல் 12 தேதி வரை வாக்குபதிவுக்கு 10 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதில் வாக்குசீட்டு வடிவமைத்து, பிழைதிருத்தி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று அச்சிட்டு, கோர்வையாக புத்தகவடிவமாக்கி, வாக்குசாவடிகளுக்க அனுப்பி வைக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே தேர்தலை தள்ளிவைக்க அதிக வாய்ப்புள்ளது.

152 வேட்பாளர்கள் என்பதால் வாக்குசீட்டை புத்தகமாக தான் வடிவமைக்க வேண்டும். குறைந்தது 15 பக்கங்களுக்கு கூடுதலான புத்தகமாக அமையும். இதில் அகர வரிசைப்படி தான் வேட்பாளர் பட்டியல் அமையும் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் திகைத்து வருகின்றனர். 

ஒரு வாக்காளர் வாக்கு புத்தகத்தை படித்த தெளிந்து 15 பக்கங்களை புரட்டி தங்கள் சின்னத்தை கண்டுபிடித்து வாக்களிப்பார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு சுயேட்சை வேட்பாளர் குறைந்தது 100 வாக்குகளை பிரித்தாலும் 15000 வாக்குகள் பிரிகிறது. சாயபட்டறை பிரச்சனை அதிகம்பேரிடம் சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் 500 வாக்குகளுக்கு கூடுதலாக பெரும் பட்சத்தில் 1,00,000 வாக்குகளை அரசியல் கட்சிகள் இழக்க உள்ளனர் என்பது தான் வேடிக்கை.

1,58,000 வாக்குகள் உள்ள இங்கு சுயேட்சைகள் 1 லட்சம் வாக்குகளை பிரித்தால் வெற்றிவேட்பாளர் வெறும் 10% ஓட்டுகளை மட்டுமே பெற்றவராக இருக்க கூடும்.

1 comment:

  1. ரொம்ப வேகமாக இருக்கீங்க. நன்றி.

    ReplyDelete

Popular Posts