திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி பலமாக உள்ளது என்பதை கருணாநியை விட வீரப்பமொய்லி அடிக்கடி நினைவூட்டி வந்தார்.
வீரப்பமொய்லியின் அக்கறை எங்களை போன்ற ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் வியப்பை தந்தது. ஆனால் அதற்கு காரணம் இப்போது தான் புறிகிறது.
வேறு ஒன்றும் இல்லை அலைக்கற்றை ஊழலில் அவருக்கு கனமான பங்கு இருந்திருக்கிறது. கூட்டணி உடைந்தால் குட்டுவெளியில் வந்துவிடும் என்ற பயத்தில் தான் வீரப்பமொய்லியின் பேட்டிகள் பறந்துவந்திருக்கிறது.
அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ராசாவின் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே மத்திய சட்ட அமைச்சகம் தான். வீரப்பமொய்லியின் பரிந்துரையை தான் அப்படியே பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் ராசா.
2.த.,அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவரச வீதிகளுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆவணங்கள் நேற்று(3.4.2010) நாடாளுமன்றத்திலும் பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் ராசாவுக்கு துணையாக பிரதமர் மன்மோகன்சிங் விசாரணை வட்டத்திற்குள் வந்தார். இன்று வீரப்பமொய்லியும் வந்துள்ளார். விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கும் சோனியாவும் வருவார்.
விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் தலைவரை இந்த வட்டத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம். ஆனால் அவரின் கருத்து வாரிசுக்கு நிச்சயம் ராசாவுக்கு பக்கத்தில் இடம் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
can you provide some link on this?
ReplyDeletethanks
anvarsha
I found the link..
ReplyDeletehttp://www.timesnow.tv/Law-Minister-backed-Raja-on-2G/videoshow/4359753.cms
here is the link on this.
anvarsha
நன்றி anvarsha ...
ReplyDelete