Nov 19, 2010

நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்

கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.

அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :



நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக

ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்



தமிழில இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கவேண்டும் என்றால் தமிழர்களே அதை எதிர்க்கிறார்கள். இந்த நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு வரும் தீங்கை புரியச்செய்வதே இந்த பதிவு. மேலும் இந்த நான்கு எழுத்துக்களை நீக்கினாலே அறிவியல தமிழ் எளிமையாகிவிடும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழில் வடமொழி எழுத்துக்களை நீங்குவதால் அறிவியல் சொற்களை எழுத முடியாது என்றும், ஸ, ஷ, ஜ, ஹ இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு இருப்பதால் தமிழ் மேலும் வளமையடையும் என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.

இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை என்றால் தமிழில் அறிவியலை எழுதவே முடியாது என சொல்வது தமிழரின் இயலாமை தான் காட்டுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் நச்சு கிருமிபோல ஒட்டிக்கொண்டு தமிழுக்கு செய்யும் தீங்கை புரிந்துகொண்டீர்கள் என்றால் இதற்காக வரிந்துகட்ட மாட்டீர்கள்.

பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள்.

வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது.

இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு தொங்கிக்கொண்டு இருப்பதால் என்னென்ன தொழுநோய் தமிழுக்கு வந்திருக்கிறது என பாருங்கள்

1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது.
8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள்
9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள்
10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது.

இன்று உலகின் ஒப்பற்ற உயரிய நூல் திருக்குறள் என பெருமைபடுகிறோம். அதில் எங்கே போனது இந்த நான்கு எழுத்துக்கள்?
இந்த நாசமாக போன( தமிழை நாசமாக்கியதால் இப்படி குறிப்பிடுகிறேன்) நான்கு எழுத்துக்களை தூக்கி எரிவதால் தமிழ்அன்னைக்கு என்னென்ன ஆற்றல்கள் வருகிறது?

1. சீரிய, உயரிய, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இலக்கணம் கொண்ட மொழியாகிறது.
2. தனித்து வாழும் செம்மொழியாகிறது
3. அறிவியல் தமிழ் எளிதாகிறது.
4. சீரிய உச்சரிப்புடைய உன்னதமொழியாகிறது
5. சமசுகிருதம் என்ற சாயல் இல்லாமல் தனித்து நிற்கிறது.
6. காலவளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் சொற்களும் வளர்கிறது.
7. கணிணி உட்பட தகவல் தொழில்நுட்பங்களில் தன்னிகரற்ற மொழியாகிறது.
8. குழந்தைகளிடம் கொஞ்சும் மழலை தமிழை கேட்க முடிகிறது.
9. இயல், இசை நாடகம் காக்கப்படுகிறது.
10. என்றும் இளைமை மிளிர்கிறது தமிழுக்கு

இன்று பெரும்பாலான அறிவியல் வர்ர்த்தைகள் எல்லாம் கிரேக்கம் லத்தீன் மொழிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் பழமையான ஒரு பொதுமொழியில் இருக்கட்டும் என்பது தான். இந்த மொழிகளுக்கெல்லாம் தமிழ் எந்த விதத்தில் சளைத்தாக உள்ளது? 


உதாரணத்திற்கு அவர்கள் ஆல்பா, பீட்டா, காமா, என்கிறார்கள். இதன் பொருள் முதலாவது இரண்டாவது, மூன்றாவது என்பது தான். இதை மொழிபெயர்க்க நாம் fa , ba,. ga போன்ற உச்சரிப்புகள் தமிழில் இல்லை என வாதிடுகிறோம். ஆல்பா பீட்டா காமா என்று எழுதினாலும் புரிகிறது. அதைவிட தமிழில் நேர்மின் கதிர், எதிர்மின்கதிர், மின்சுமையற்ற என எளிமையாக மொழிபெயர்க்கும் போது இன்னும் கருத்தூன்றி படிக்க முடிகிறது.

1 comment:

  1. அதை எதிர்க்கும் தமிழர்கள் ஒன்று அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஹிந்தி படிக்கமுடியாமல் போயிற்றே என்று புலம்பும் வகையினராக இருக்க வேண்டும், இல்லையெனில் மொழிஉணர்வற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதால் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்றாகிவிடுமா? தமிழை நேசிப்பவர்களுக்கு உண்மை தெரியும் எது தமிழுக்கு உகந்ததென்று

    ReplyDelete

Popular Posts