செனற வாரம் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. வலைப்பதிவுகளை பார்வையிட்டபோது சில வலைப்பதிவுகள் என்னை ஆழமாக யோசிக்க வைத்தன.
அந்த பதிவர்களுக்கு பதிவுலகின் உயரிய விருதை கொடுத்து பாராட்ட தோன்றியது. அந்த விருதை அறிவிக்கும் முன்னர் அப்படி என்ன பதிவின் சிறப்பு என்பதை பார்ப்போம்
முதல் பதிவு :
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளத்து வாசனையுடன் எழுதும் சோசபின் கதைக்கிறேன் என்ற பெண் வலைபதிவர் அவர்.
அவரது வலைப்பூவில் இரண்டு பதிவுகள் மிகமிக பாரட்டுக்கு உரியவைகள்
1. தமிழ் ஈழ வலைப்பதிவுகள் ஒரு ஆய்வு;
2. மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான்.
முதல் பதிவில் ஈழ வலைப்பதிவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.
நான்காம் ஈழப்போரின் இறுதியில் உண்மை நிலையை பல முன்னனி ஊடகங்கள் பயந்தும் பணத்துக்கு அடிமையாகிவிட்டன. இந்த நேரத்தில் உண்மை செய்திகளை கொண்டுவருவதில் வலைப்பதிவர்கள் ஆக்கப்பூர்வமான ஒரு பங்கை அளித்தனர். என்பதை கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இந்த கட்டுரை மூலம் வலைப்பதிவுகளுக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்துள்ளார் சோசபின்.
இன்று பல ஊடகங்களும் அரசியல் மற்றும் விளம்பரம்(வியாபாரம்) பிடியியில் சிக்கிவிட்டன. இருட்டடிப்பு மற்றும் கருத்துதிணிப்பு இல்லாத செய்திகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்த நிலையில் வலைப்பதிவுகளில் வரும் பின்னூட்ட விவாதங்களில் செய்திகளின் உண்மை தன்மையை கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது சோசபின் பதிவுகள்.
வலைப்பதிவர்களுக்கு நல்ல கவுரவத்தை கொடுத்த சோசபினுக்கு வலைப்பதிவர்கள் என்ன செய்யபோகிறீர்கள்?
ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு கிடைக்கும்
மிகப்பெரிய விருது - பின்னூட்டம்.
நல்ல பதிவுகளுக்கு 1 நிமிடம் ஒதுக்கி பின்னூட்ட விருதை நம்மால் கொடுக்க முடியும் என நினைக்கிறேன். இதை கூட செய்யாவிட்டால் நாம் வலைப்பதிவர் என்பதற்கு அர்த்தமே இல்லை.
மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான் குறித்த பதிவில், பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை இந்தியாவில் சோதனையிட்டதன் விளைவை படங்களுடன் விளக்கியுள்ளார். சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட இந்தபதிவை தமிழ்மலர் கவுரவிக்கிறது.
திட்டம் தீட்டுவது எளிது, ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த எடுக்கும் முயற்சிகள் தான் கடினம். பல கடினங்களை தாண்டி தனது திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசியல்வாதிகளுடன் மல்லுக்கட்டி வருகிறார் ஒருவர். அரசியல்வாதிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் இவற்றுடன் போராடி தோற்றுபோனவர் இறுதியாக தமிழ்வலைப்பதிவர்களை சரணம் அடைந்துள்ளார். அப்படி என்ன அவசியமுள்ள திட்டம்? அப்படி என்ன அதிசய போராட்டம்? அடுத்த பதிவில் தருகிறேன்.
அதற்கு முன்னர் சோசபின் வலைபதிவுக்கு சென்று ஒரு பின்னூட்ட விருதை கொடுத்து வாருங்கள். உங்கள் நல்ல மனசுக்கு பாரட்டுக்கள்.
1. தமிழ் ஈழ வலைப்பதிவுகள் ஒரு ஆய்வு;
2. மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
viththiyasamaana muyarchi... ungal nalla valaipookkalin arimugam thodarattum...
ReplyDeletevazhththukkal.