சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி முன்னாள் அரியானா மாநில காவல்துறை உயர்அதிகாரி வத்வா தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மத்திய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வத்வா பஞ்சாப்&அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகுல்முத்கல், ரங்கோன் கோகாய் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
பொதுவாழ்வில் இருப்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்க முடியாது. மனுதாரர் பிரபல அரசியல்வாதியின் பொதுவாழ்வில் குறுக்கிடுகிறார். இது ரகசியமாக பாதுகாக்ககூடியது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அப்புறம் சாதி பிரியர்களுக்கு
சோனியாகாந்தி என்ன சாதி என்று தெரிந்துகொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதே என்ற கவலை வேண்டாம்.
ஒரு வழி இருக்கிறது.
தனித்தொகுதியில் சோனியாகாந்தி போட்டியிட முடியுமா?
இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html