Dec 12, 2011

பெண்கள் மானபாங்கம்-உண்மையில் நடப்பது என்ன?


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஊடங்கள் நினைத்ததை சாதித்து விட்டன. தமிழர் மலையாளி பிரச்சனையை கிளப்பி கொஞ்சம் காசுபார்த்து விட்டன. அதற்கு சால்ரா போட இங்கு வலைப்பதிவர்களும் வரிந்துகட்டிக்கொண்டுள்ளது தான் உச்சகட்ட வேதனை.

குமுளியில் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக கூறும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தேன். தமிழக ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தியது போல அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

கடந்த வாரம் கூடலூரில் ஒரு இளைஞர் சுயமாக தீக்குளித்தார். ஆனால் தமிழக ஐயப்பசாமி மீது தீ வைத்து விட்டார்கள் என்ற புரலி தமிழகம் முழுவதம் பரவியது. தமிழக போலீசாரின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து அந்த விடயத்தை ஊடகங்கள் கைவிட்டன. அடுத்து எந்த பிரச்சனையை கையில் எடுத்தால் தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது ஊடகங்களுக்கு தெரியாமல் இல்லை. அதை செய்து சாதித்துவிட்டார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒரு இளைஞன் திருச்சூர் ரயிலில் ஒரு கல்லூரி பெண்னை கழ்பழித்து கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். அப்போது கேரள மக்கள் யாரும் அதை தமிழர்கள் செய்ததாக பார்க்கவில்லை. கேரளாவில் உள்ள தமிழர்களையும் தாக்கவில்லை. தனிப்பட்ட ஒரு கொடூரன் செய்ததாக தான் பார்த்தார்கள். 6 மாதங்களில் வழக்கு முடிக்கப்பட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல குமுளியில் தமிழ் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக சொல்லும் கயவர்களை அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். ஆனால் தமிழர்&மலையாளிகள் கலவரத்தைதூண்டி வேடிக்கை பார்க்கின்றன ஊடகங்கள்.
நக்கீரன் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் திடீர் என தமிழக மக்களின் நம்பிக்கைக்குறிய ஊடகங்களானது எப்படி என்று தெரியவில்லை.

தமிழக போராட்டக்குழுவும், கேரள போராட்டக்குழுவும் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள். அதை வெளியிட்டு பிரச்சனை தீர்க்க ஊடகங்கள் முன்வரவில்லை. இதை கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் இன்று மலையாளி தமிழர் பிரச்சனைக்காக வக்காலத்து வாங்குகின்றனர்.

சிலரின் சுயநலத்திற்காக பல அப்பாவிகளின் வாழ்க்கையில் விளையாடும் ஊடகங்கள் நாசமாக போகட்டும் என்று சபிப்பதை தவிர வேறு என்ன சொல்ல?

இன்று கேரளாவிலும் தமிழகத்திலும் மாறி மாறி அரசியல்வாதிகள் உண்ணாவிரத நாடகம் நடத்துகிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் பட்டினி கிடக்கும் தோட்ட தொழிலாளர்களின் வேதனை யாருக்காவது தெரியுமா? தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே உணவு உண்ண முடியும் என்ற நிலையில் உள்ள அடித்தட்டு மக்களை பட்டினி போட்டு கொல்வது தான் உங்கள் போராட்டமா?

உணர்ச்சிவசப்பட்டு எழுதுபவர்களுக்கு உண்மையை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும். அது எத்தனை பேருக்கு இருக்கிறது?

மேதகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு கீரல் விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார் வைகோ. என்ன நடந்தது? இன்று முல்லைபெரியாறு பிரச்சனையில் தமிழகத்தில் எரிமலை வெடிக்கும் என்கிறார் வைகோ. உணர்ச்சிகளை தூண்டி விடுவது எளிது. ஆனால் அதில் அடிபட்டு சாவது அடித்தட்டு மக்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

எரிமலையும் வெடிக்காது ஒரு ஈரவெங்காயமும் நடக்காது. தமிழகத்தில் மலையாளிகளை அடிப்பீர்கள், கேரளாவில் தமிழர்களை அடிப்பார்கள். பிரச்சனை முற்றினால் ரொம்பரொம்ப நடுநிலையான இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்படும். அப்போதும் எல்லையில் உள்ள தமிழர்கள் தான் சுட்டுக்கொல்லப்படுவார்கள். பிரச்சனையை தூண்டிவிடுபவர்களுக்கு ஒரு கிரல் கூட விழாது. 6 மாதம் எல்லை முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும். குழந்தைக்கு பால்வாங்ககூட வெளியில் இறங்க முடியாமல் பட்டினி கிடந்து சாவோம் . அது அல்லாமல் வேறு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

இன்னும் எழுதுங்கள், உங்கள் ஆசை தீர பிரச்சனையை தூண்டி தூண்டி எழுதுங்கள். எங்கள் குழந்தைகளின் கண்ணீர் மட்டும் உங்களை எளிதில் விட்டுவிடாது என்பதை மட்டும் நினைவில் வைத்து எழுதுங்கள்.

ஊடகங்களின் செய்தியை பக்கத்துக்கு பக்கம் பகிர்ந்து கொள்ளும் வலைபதிவர்கள் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் பதிவை பகிந்துகொள்ள தயாரா?

உண்மையில் சமாதானத்தை விரும்பும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் 

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு முழு வெற்றி

இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்

5 comments:

  1. sorry...i disagree with u....

    ReplyDelete
  2. Politicians especially india sukku noora udaiyumngra levelku pesurathellam naanum kandikuren. But..evano oru porambokku malayali ponnu onna rape pannunathayum, ivanunga mozhi veri adipadaila tamil aalungala avamanap paduthunathum, mela siru neera peeechiathum onna ??!!! Rape pannunavan entha ponnu antha idathula thania ninnu irunthaalum rape thaan senjiruppan..malayaliathaan seivenuttu seila. But ivanuku tamilsa enna senjaanga ? Inari veri karanamathaanae appadi senjaanunga ? thittamittuthaanae senjaanga suya ariva use pannithaane appadi senjaanunga ? So better change ur idea and ur post. Guess ur living in Kerala Tamilnadu border..try to think and write neutral. Its u who making a false propoganda..not all the journalist.

    ReplyDelete
  3. தமிழர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு ஈழத்தில் இரத்த ஆறு ஓடவிட்டது போதாதோ?

    ReplyDelete

Popular Posts