தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை வாக்கு சதவீதம் கூடியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது.
வாக்குசதவீதம் அதிகமாகும் பொது திமுக வெற்றிபெற்றது என்பதைவிட எதிர்கட்சி வெற்றிபெற்றது என்பது தான் உண்மை. வாக்குசதவீதம் அதிகமாகும்போது ஆளும்கட்சி மீதான எதிர்ப்பே அதிகமாக பதிவாகியுள்ளது. வாக்குசதவீதம் அதிகமான தேர்தல்களில் திமுக எதிர்கட்சியாகவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளது. ஆதனால் தான் இந்த முறை திமுகவுக்கு கிலிபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், மேல்மட்டத்தினர் வழக்கத்தை விட அதிகளவில் வாக்குசெலுத்தியுள்ளனர். நலத்திட்டங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் போன்றவை பெரிதாக பேசப்படுகிறது இந்த வாக்குவங்கியில்.
கட்சி வாக்குவங்கியை பொருத்தவரை திமுக அதிமுக இரு கூட்டணியும் சமநிலையிலேயே உள்ளன. மதிமுக போட்டியிடாமை, திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தல் இந்த இரு காரணங்களால் இந்த சமநிலை வருகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் திமுக கூட்டணி கட்சி வாக்குவங்கியில் தோல்வியை பதிவுசெய்கிறது.
பொதுமக்கள் வாக்குவங்கியை பொருத்தவரை இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகவே உள்ளது. 70% பொதுமக்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பணபுழக்கம் இன்மையால் ஆளும் கட்சிமீது அதிருப்தியை பதிவுசெய்கின்றனர்.

அதே நிலை தான் இந்த தேர்தலிலும். இலவசங்கள், நலதிட்டங்கள், ஊடக பிரச்சாரங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தொழில் முடக்கம் என்ற காரணங்களில் திமுக சரிவை சந்திக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்போடு இந்த காரணிகளே கருத்தாய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைகாட்சி மற்றும் கருத்துகணிப்பு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பை மே 10 தேதியே வெளியிட காத்திருக்கின்றன. ஆனாலும் அரசல்புரசலாக வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கசியதுவங்கியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை போலவே 90 தொகுதிகள் வரை மட்டுமே திமுக கூட்டணி கைபற்றும் என்றே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளும் கூறுகின்றன.
அதிமுக கூட்டணி...... 144 - 184
திமுக கூட்டணி............. 50 - 90
என்ற ரீதியிலேயே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் உள்ளன.
If you are happy with your own results is nice but it will vanish on 13 th may.
ReplyDeleteநல்ல காமெடியான பதிவு. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. நீங்க சொன்ன ரிசல்ட் வரும். ஆனா வராது. புரியல்லையா? திமுக கூட்டணிக்கு 135 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும்.
ReplyDeleteதிமுக கூட்டணி -135
ReplyDeleteஅதிமுக கூட்டணி - 94
இழுபறி மற்றும் பிஜேபி - 5
நல்ல காமெடியான பதிவு. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. நீங்க சொன்ன ரிசல்ட் வரும். ஆனா வராது. புரியல்லையா? திமுக கூட்டணிக்கு 165 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 69 இடங்களும் கிடைக்கும்.
ReplyDelete