Feb 4, 2011

திராவிட கட்சி - காங்கிரசு வென்றது யார்?

அலைகற்றை ஊழலில் கொள்ளையடித்தது காங்கிரசு. பலியானது? கருணாநிதியின் பழைய வசனம் தேனை எடுத்தவன் புறம் கையை நக்கிவிட்டேன், கருணாநிதிக்கு புது வசனம் நொங்கை தின்றவன் ஓடிவிட்டான் நோண்டி தின்றவன் மாட்டிக்கொண்டான்.

50 ஆண்டுகளாக கூட்டிணியை முடிவு செய்தது திராவிட கட்சிகள், இன்று கூட்டணியை முடிவு செய்வது காங்கிரசு, அப்போ வெற்றி?

சென்னை மருத்துவமனைக்கு ராசீவ்காந்தி பெயரை வைக்கவேண்டும் என்று காங்கிரசும், தந்தை பெரியார் பெயரை வைக்கவேண்டும் என்று திராவிட கட்சிகளும் போராடின. இறுதியில் வென்றது? 

கருணாநிதியை பார்த்து இந்திரா பயந்தார், இப்ப சோனியாவை பார்த்து கருணாநிதி? 

இன்னும் 5 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரசில் இணையும் மாபெரும் இணைப்பு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சனியன் சோனியாவிடம் இருந்து திராவிட இயக்கத்தை காப்பாத்துங்கோ...

1 comment:

  1. அப்படி இணைப்பு விழா நடந்தாலும் நல்லதே...

    காங்கிரசை விட திமுக ஒன்றும் காப்பற்றபட வேண்டிய அளவு புனிதமாது அல்ல..

    ReplyDelete

Popular Posts