என்ன கொடுமை, தமிழனை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் தினமலருக்கு வைகோ காவடி தூக்குவது வேதனையாக இருக்கிறது.
மாதேசுவரன் மலைக்கு கர்நாடகம் குடிநீர் எடுப்பதால் மேட்டூர் அணை வரண்டுவிடும் என தினமலர் விசமத்தை விதைத்தது. கர்நாடகா குடிக்க தண்ணீர் எடுப்பதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தூண்டி விட்டது.
தினமலரின் விசமத்துக்கு எந்த தமிழரும் ஏமாற முன்வரவில்லை. உண்மையில் தமிழர்களின் பண்பாட்டை பெருமையாக நினைத்தேன். தினமலரின் விசமம் தோற்றுபோனதை இன்று எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் வழக்கம்போல வைகோவின் அவசர அறிக்கை வந்துள்ளது.
வைகோ ஒரு திறமையான அரசியல்வாதி. தமிழர்களுக்காக குரல்கொடுக்க இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிச்சயம் தேவை. ஆனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பியே வைகோ செல்லாகாசவது வேதனை.
மாதேசுவரன் மலையில் வசிப்பவர்களில் 90% பேர் தமிழர்கள், தமிழர்களாக இருந்தால் என்ன, கன்னடர்களாக இருந்தால் என்ன?, குடிக்க சிறு குழாயில் தண்ணீர் எடுப்பதை எதிர்க்கிறீர்களே நீங்கள் மனிதர்களா?
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகா எதிர்க்கிறது என்றால் அவர்களை காட்டுமிராண்டிகள் என்கிறோம். இப்போது அதே வேலையை நாம் செய்வது நாகரீகமா?
குடிக்க தண்ணீர் எடுப்பதை குற்றம் என்று தூண்டி விடுபவன் நிச்சயம் ஒரு ஈனபிறவியே. அதை தினமலர் என்றோ பெற்றுவிட்டது, வைகோ முயற்சிக்க வேண்டாம்.
காவேரியை துண்டாடினால் தினமலருக்கு பரபரப்பு செய்தியாகி, விற்பனை கூடும், தமிழருக்கும் கன்னடருக்கும் பகை கூடி சண்டை வரும். இழப்பு இருபகுதி மக்களுக்கு தான். தினமலருக்கு அல்ல.
அறிவுள்ள தமிழர்களே தினமலரின் சதியை புரிந்துகொள்ளுங்கள்...
No comments:
Post a Comment