அடங்கி போன காங்கிரசை வளர்த்துவிட்ட பெருமை திமுகவுக்கு உண்டு. ஆனால் அதே காங்கிரசு இன்று திமுகவின் கழுத்தை எட்டிப்பிடித்துள்ளது.
தகுதிக்கி மீறி தொகுதிகள் கேட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்கவேண்டுமானால் குறைந்தது 140 முதல் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர் சுடாலினும் அழகிரியும்.
திமுக 150 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதம் உள்ள 84 தொகுதிகளை தான் கூட்டணிக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும். திமுக 146, காங்கிரசு 50, பாமக 31, விசி 5, இதரம் 4 ( திமுக சின்னத்தில்). இது தான் திமுகவின் கணக்கு. ஆனால் குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது காங்கிரசு. அதை அதிகார தொனியுடனேயே கேட்பது தான் காருணாநிதியை உச்ச கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டால் கூட்டணி தொடரலாம். இல்லாவிட்டால் மார்ச் இறுதி வரை இழுத்து வெட்டி விடலாம் என்பது தான் திமுக கணக்கு.
ஏதாவது ஒரு மூன்றாவது அணி போட்டியிடுவது தான் திமுக வெற்றிக்கு சாதகமானது. இதை பல தேர்தல்களில் உணர்ந்திருக்கிறார் கருணாநிதி. இந்த முறை தேமுதிக கூட்டணிக்கு தயாராகிவிட்டது. அதே நேரத்தில் மூன்றம் அணி கூட்டணி பலம் பெற்றுவிடக்கூடாது என்பதில் கருணாநிதி கவனமாக இருந்தார்.
பாமக, தேமுதிக காங்கிரசு கூட்டணி அமைவதை படு தந்திரமாகவே உடைத்தெரிந்தார். தொடர்ந்து தேமுதிக&காங்கிரசு கூட்டணி அமைவதற்கும் முடிவு கட்ட முயன்று வெற்றிகனி பறிக்க உள்ளார். இந்த நிலையில் மூன்றாம் அணியாக காங்கிரசு மட்டுமே உள்ளது. சென்ற தேர்தலில் விசயகாந்த் தனித்து நின்றது போல இந்த முறை காங்கிரசை தனித்து நிறுத்த திட்டமிட்டுள்ளார். ஈழம் தவிர்த்த தனது எதிர்ப்பு ஓட்டுகள் செயலலிதாவுக்கு செல்லாமல் காங்கிரசுக்கு செல்லும் என்பது கருணாநிதி கணக்கு.
அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை கொங்கு முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட இன்னும் பல உதிரி கட்சிகளுக்கு ஒதுக்குவது. இதனால் எதிர் அணியில் கூட்டணி கட்சிகள் பலம் குறையும் மேலும் 170 தொகுதிகளுக்கு மேல் திமுக போட்டியிட முடியும்.
காங்கிரசை கழட்டி விடுவதில் திமுகவுக்கு பிரச்சனை இல்லாமல் இல்லை. தற்போது கழட்டி விட்டால் உடனடியாக ஆட்சி கவிழும். இரண்டு மாதமே இருந்தாலும் இடையில் ஆட்சி கவிழ்வதை கருணாநிதி துளியும் விரும்பவில்லை. அதே போல ஆட்சி கவிழ்ந்தால் ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் தேர்தலை சந்திக்க முடியாது. மேலும் அலைகற்றை உட்பட வழக்குகளில் கனிமொழி, ராசாத்தியம்மாள் வரை கைது செய்யப்படலாம். இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.
மேலும் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் சிக்கல் தான். எந்த நேரத்திலும் காங்கிரசு 360வது பிரிவை பயன்படுத்தலாம். அதற்கு அதிமுக முழு துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உறுதியான காரணங்களுக்காகவே தகுதிக்கு மீறி ஆட்டம் போடும் காங்கிரசை திமுக சகித்துக்கொண்டுள்ளது.
இந்த மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்துவது. 48 தொகுதிகள் கொடுப்பது. வேண்டாம் என்றால் கழட்டி விடுவது. தனித்து போட்டியிடும் காங்கிரசை தமிழகத்தை விட்டே கருவறுப்பது. இது தான் திமுகவின் அதிரடி திட்டம்.
கூட்டணி அமைந்தாலும் காங்கிரசை தோற்கடிக்க திமுக என்றோ முடிவெடித்துவிட்டது என்கின்றனர் திமுக அடிமட்ட தொண்டர்கள். தகுதிக்கு மீறி தொகுதி கேட்ட பாமகவின் நிலை தான் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெனப்பு பொழப்ப கெடுத்துச்சாம்
ReplyDeleteஹும்.. படிக்க இதம்மா இருக்கு. ரோசம் கெட்ட தாத்தாவுக்கு இப்படியெல்லாம் ஒரு ரோசனை வருமான்னு சந்தேகம்தேன்
ReplyDelete