இந்த தேர்தலில் கட்டாயம் வெல்ல«ண்டும். இல்லாதவிட்டால் திமுகவுக்கு கடும் நெறுக்கடி காத்திருக்கிறது.
தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையுமானால் அனேகமாக திமுகவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் போதாது.
அலைகற்றை ஊழல் விவகாரத்தில் மத்தியில் இப்போதே நெருக்கடி துவங்கி விட்டது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் தோண்டி எடுக்க காத்திருக்கின்றன. ஏரத்தாள 1996 ல் செயலலிதா ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்குகளை விட அதிகமாக வர வாய்ப்புள்ளது.
தற்போதே காங்கிரசுடன் சுமுகமான நிலை இல்லாத நிலையில் தேர்தல் தோழ்விக்கு பின்னர் மிகப்பெரிய பிளவு ஏற்படும். மத்திய அரசு கோபத்தையும், மாநிலஅரசு பலிவாங்கும் படலத்தையும் திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
தற்போது 90 வயதாகி விட்ட கருணாநிதியால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தேர்தலை முதலமைச்சர் வேட்பாளராக சந்திக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே.
கருணாநிதி அல்லாத பட்சத்தில் திமுகவில் அழகிரி சுடாலின் தரப்பு போட்டி கட்சியை பிளவுபடுத்தக்கூடும். மேலும் கனிமொழி, ராசா பூங்கோதை ராசத்தியம்மாள் வகை படைகள் தனி அணியாக செயல்படவும் வாய்ப்புள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவு திமுகவில் குடும்ப சண்டை எரிமலையாய் இப்போதும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை கொண்டு மதிமுக, அதிமுக உட்பட கட்சிகளை கரைய செய்தது திமுக. அதே வேலையை திமுகவின் மீது செயலலிதா ஏவிவிடலாம். இந்த காலகட்டத்தில் அளவுக்கு அதிகமானோர் அதிமுக பக்கம் ஓட வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் தோற்றாலும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. பாரதிய சனதா, காங்கிரசு, மூன்றாம் அணி இதில் வெற்றி பெரும் அணியில் இடம்பெற்று ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதிலும் கோட்டை விட்டால் திமுகவின் எதிர்காலத்திற்கு கொஞ்சம் வெளிச்சம் குறைவு தான்.
தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்,
தமிழ்குறிஞ்சி
இவனுங்கள அப்படியே விடக்கூடாது... இதுவரைக்கும் ஆட்டைய போட்ட நம்ம பணத்தையும், சேர்த்த சொத்தையும் புடுங்கனும்....
ReplyDeleteஇதே தமிழ் நாட்ல இந்த குடும்பம் பிச்ச எடுக்க விடனும்...