திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி?
மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்கள் கூட திராவிட கட்சிகளை ஆட்கொள்ளவில்லை. ஆனால் இன்று தங்கபாலு, வாசன், இளங்கோவன் போன்ற தலைவர்கள் திமுகவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறார்கள். இவர்களுக்கு தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு கடுகளவும் இல்லை. அதே போல இந்தி எதிர்ப்பை விட ஈழம் எதிர்ப்பில் காங்கிரசு சுவடற்று கிடக்கிறது. இருந்தாலும் காங்கிரசு திமுகவை மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரசால் உள்ளூர் நபரின் செல்வாக்கு இன்றி ஒரு தொகுயில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று ஆட்சியில் பங்கு என்ற நிலைக்கு வந்துள்ளது.
இது காங்கிரசின் வளர்ச்சியா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அப்படியானால் இந்த நிலைக்கான காரணம் என்ன?
காங்கிரசு வளர்ச்சி அடையவில்லை அதே நேரத்தில் திமுக மிகபெரிய ஏமாளித்தனத்தை சந்தித்துள்ளது.
கருணாநிதி குடும்பத்தால் காங்கிரசு வளர்ந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருணாநிதி ஏமாளியானதற்காக ஒட்டுமொத்த தமிழனும் ஏமாளியாகிவிட முடியுமா?
ஒரு காலத்தில் கூட்டணி பற்றி பேச டெல்லி இங்கு வந்தது. ஆனால் பிசுகோத்து சோனியாவிடம் கூட்டணி பேச தள்ளுவண்டியில் தள்ளாடி செல்கிறார் கருணாநிதி. இந்திராவிடம் தைரியமாக அரசியல் செய்த கருணாநிதி சோனியாவிடம் வாலாட்டி நாயானது காலத்தின் கொடுமை.
கருணாநிதி இன்னும் நிறைய அனுபவிக்கவேண்டியுள்ளது.
காலம் திரும்புவதாக காங்கிரசாரின் கணக்கு, தீபம் அணையும்போது கொஞ்சம் அதிகமாகவே பிரகாசிக்கும் என்பது காலத்தின் கணக்கு.
// கருணாநிதி இன்னும் நிறைய அனுபவிக்கவேண்டியுள்ளது //
ReplyDeleteபாவம் சார் அவரு!!
நச்சுன்னு உச்சந்தலையிலே அடிச்சிட்டீங்களே. உண்மையெல்லாம் சொல்லலாமா. நம்ப மடத் தமிழனுக்கு ஏதாவது புரியுமா? கொள்ளை அடிச்சா பயந்து தனிஞ்சுதான் போகனும். ஒரு தமிழன் தனது பல வாரிசுகளுக்கு, பரம்பரைக்கு நம்பலைக் கொள்ளை அடிச்சிட்டாங்கிற காரணத்துக்காக நாங்க அந்த மறத் தமிழனை விட்டு கொடுத்துடுவோமா. மேலும் மேலும் வளர்ப்போமே.
ReplyDelete