Feb 4, 2011

கலைஞர் தொலைகாட்சி கனிமொழியின் பங்கு?


அலைகற்றை ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைகாட்சிகளுக்கு பணம் கைமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அமலாக்க பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அலைகற்றை ஊழல் வழக்கில் கைதாகி உள்ள ராசாவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பு இருப்பதால் விசாரணை துரிதப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலைகற்றை ஊழலில் தொடர்புடைய சுவான் டெலிகாம் நிறுவனம் ரூ.210 கோடியை கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள விவகாரம் வெளியாகியுள்ளது. இந்த பணம் கனிமொழியின் பங்குதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் 60% பங்குகள் கருணாநிதியின் 2 வது மனைவி தயாளு அம்மாள் பெயரிலும், 20% பங்குகள் கனிமொழியின் பெயரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

கனிமொழியின் பங்கை நீக்கிவிட வேண்டும் என்பது ஏற்கனவே கருணாநிதி குடும்ப பிரச்சனையாக உள்ளது. தற்போது அலைகற்றை பூதமும் கலைஞர் தொலைகாட்சியை துரத்த துவங்கியுள்ளது. கனிமொழியின் பங்கை பிரித்து கொடுத்து விட்டால் சக்களத்தி சண்டையும், அலைகற்றை ஊழல் பிரச்சனையையும் சமாளித்து விடலாம் என்பது தயாளு அம்மாள் மற்றும் வாரிசுகள் கணக்கீடு. ஆனால் இதை ஏற்க கருணாநிதி மறுத்து வருகிறார்.

தன் காலத்திலேயே ராசாத்தி மற்றும் கனிமொழியை அநாதையாக விட கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. எந்த சகோதரசண்டை வாய்சாலம் அடித்தாரோ, அதே போன்ற சகோதர சண்டை இன்று கருணாநிதியை ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.

கருணாநிதி இன்னும் அனுபவிக்கவேண்டியது நிறைய உள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts