Feb 25, 2011

தேமுதிகவுக்கு 35 தொகுதி : அதிமுக கூட்டணி விபரம்


நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக தேமுதிக அதிமுக வளையத்திற்குள் வந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என கடந்த தேர்தலின் போதே விசயகாந்த் அறிவித்தார். அதை மையப்படுத்தியே கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். 

ஆட்சியில் பங்கு, எம்.சி.ஆர் வாரிசு, இந்த பேச்சுகளை பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே கடிவாளம் போட்டார் செயலலிதா. 80, 60, 50, 40 பாமகவை விட அதிகம் என்று தொகுதி பங்கீடு இழுத்து வந்தது. இறுதியில் தேமுதிகவுக்கு 35 தொகுதிகளை இறுதி செய்துள்ளது அதிமுக. இதற்கான அறிவிப்பு ஓரீரு நாளில் வெளிவரலாம். 

தேமுதிக காங்கிரசு கூட்டணி அமைக்க முழுவீச்சில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி ஆட்சி தத்துவமும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் யார் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் ஈகோ.

ஈழம், மீனவர் பிரச்சனையில் காங்கிரசு தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 85 தொகுதிகளில் போட்டியிடுவதை விட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 35,  40 தொகுதிகளில் போட்டியிடுவது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது தேமுதிக. 

தேமுதிகவுக்கு தங்களை விட அதிக தொகுதிகளை(100) கொடுத்து போட்டியிடுவதை விட ஒன்று தனித்து போட்டி அல்லது திமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளது காங்கிரசு.

தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்க தயாராக இருக்கும் தொகுதி எண்ணிக்கை விபரம் :

அதிமுக...................... 145 (140)
தேமுதிக.................... 35
மதிமுக...................... 20 (25)
கம்யூனி..................... 23
கொமுக.................... 4
மமக........................... 3
இதரம்........................ 4

மொத்தம் ..................234

இதர கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்  மதிமுகவுக்கு அதிமுக தொகுதிகளில் மேலும் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts