அலைகற்றை ஊழலில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளளார் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராசாமீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள சுப்பிரமணிய சாமி தான் இந்த வழக்கையும் தொடர்ந்துள்ளார்.
அலைகற்றை ஊழலால் பாகிசுத்தான் உளவு அமைப்பு மற்றும் சீன ராணுவ அமைப்புகள் பயனடைந்துள்ளன என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் ராசாவுடன் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இது குறித்து விளக்கம் அளிக்கும் படி சி.பி.ஐ., க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணாநிதி உள்ளிட்டோர் மீது தனி மனுவாக வழக்கு தொடரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.
"நல்லா விளங்கும் தமிழகம்" இந்த தலைப்பில் உள்ள படம் மிக மிக அருமை.
ReplyDeleteஇந்த படம் போதும் தற்போது நம் "தமிழகம்' உள்ள நிலைமையை எடுத்துகட்ட!!!
கருணாநிதிக்கு இதெல்லாம் ஜுஜுபி. நாங்கள்தான் உலக உத்தமர் பரம்பரையாக்கும் ,இந்த தமிழர்களை காப்பாற்ற எங்களை விட்டால் யாரும் இல்லை. என்று அறிக்கை விடுவார். வழக்குகளை சாகும் வரை இழுத்தடிப்பார். சட்டங்களை மாற்றாதவரை இதெல்லாம் மக்களை குஷி படுத்தும் நாடகங்கள்.
ReplyDelete