Feb 20, 2011

திருட்டு முன்னேற்ற கழகம்

மதியம் உச்சிவெயில், நிழலுக்காக சாலையோரம் இருத்த மரத்தடியில் வண்டியை ஒரம்கட்டினேன். எதிர்புறம் சாலையோர சுவரில் திமுக மற்றும் காங்கிரசுக்கு ஆதரவான சுவர்விளம்பரம் எழுதப்பட்டு வந்தது. ஒரு பக்கம் இளைய தலைவர் கோவை விசுணு என்ற விளம்பரம். அருகில் பாரி துதிபாடி விளம்பரம்.
யார் இந்த விசுணு? பாரி? 

கோவையில் உள்ள அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பாரி. கோவை தங்கம் எம்.எல்.ஏ.,வின் மகன் விசுணு. இந்த முறை இவர்களும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார்கள் என்பது விளம்பரத்தில் இருந்து தெரிகிறது.

திமுகவில் வாரிசு அரசியல் என்பது கருணாநிதி குடும்பத்தில் மட்டும் இல்லை. எல்லா மாவட்ட மட்டத்திலும் இருக்கிறது. கொடி கட்டி, சுவர்விளம்பரம் எழுதும் இளிச்சவாய் தொண்டர்கள் கடைசிவரை அதே வேலையை செய்யவேண்டியது தான்.
ஏதோ மத்தியிலும் மாநிலத்திலும் தான் ஊழல் நடக்கிறது. கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறது என்றால் அது தவறு. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து மட்டத்திலும் அளவுக்கு ஏற்ப கொள்ளை தொடர்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது? இப்போது இந்த கேள்விக்கான பதில் எந்த திமுக காரனுக்கும் தெரியாது. அதே நிலை தான் மற்ற கட்சிகளுக்கும்.

மக்கள் மனநிலை என்னவாக இருக்கும்? அருகில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். எல்லாம் திருடனுகங்க... விசுணு, பாரி இவனுக எல்லாம் எந்த காலத்தில் வேலைக்கு போனானுக? எப்ப ஒழுங்கா படிச்சானுக? ஆனா நாளைக்கு எம்.எல்.ஏ., மந்திரினு இவனுகளுக்கு நம்ம கையேந்தனும். கோடி கோடியா கொள்ளை அடிக்கறதுல திமுக காரனுகளை விட்டா வேற ஆள் இல்லை என வெளிப்படையாகவே பட்டுனு சொன்னார்.

கனிமொழி, அழகிரி, தயாநிதிமாறன், சுடாலின் இவர்களுக்கு எல்லாம் கருணாநிதியின் வாரிசு என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது? அதே போல தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைவர்களின் வாரிசுகள் அடிக்கும் ஆட்டமும், கொள்ளையும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  

நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு (ரூ.170000000000) திமுக மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. உயர்மடத்திலேயே அவ்வளவு என்றால் கடைகோடி ஊராட்சியில் எவ்வளவு கோடி இருக்கும் என்று கணித்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts