Feb 25, 2011

கேபிள்இணைப்பு இலவசம்:அதிமுக தேர்தல் அறிக்கை


கடந்த சட்டமன்ற தேர்தலில் வண்ணதொலைகாட்சி இலவசம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதற்கு இணையாக இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி கேபிள் இணைப்பு இலவசம் அல்லது 20 ரூபாய்க்கு 100 சேனல்களுடன் கேபிள் இணைப்பு என்ற அதிரடி திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது அதிமுக.

தற்போது தமிழகத்தில் கேபிள் இணைப்பாக ரூ.150 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. டி.டி,எச் போன்றவற்றிலும் மாதம் 120 வரை செலவாகிறது. இந்நிலையில் மிகக்குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற திட்டம் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று அதிமுக தலைமை விபரங்களை சேகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியின் இறுதியில் அரசு கேபிள் நிறுவனம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாறன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுக அரேசே அரசு கேபிள் நிறுவனத்தை கொண்டு வந்தது. 

ரூ. 400 கோடி வரை சவப்பெட்டியில் அடக்கமாகிவிட்ட இந்த திட்டம் அடக்கமாக செயல்படுவதாக இன்னமும் திமுக சொல்லி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த அடக்கமே ஆரவாரமாக தோண்டி எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இதில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரனைகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் சுடாலின் கைது செய்யப்படும் அளவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரன் குடும்பத்துடன் இதயம் இனிக்கும் வரை திமுக ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் வராது. எனவே கேபிள் கொள்ளையை தடுக்க அதிமுகவுக்கு வாக்கு அளியுங்கள் என்ற பிரச்சாரம் தயாராகிவிட்டது.

No comments:

Post a Comment

Popular Posts