Feb 3, 2011

ராசா 5 நாள் விசாரனை காவலுக்கு நீதிபதி அனுமதி

ராசாவை 5 நாட்கள் சி.பி.ஐ விசாரணைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இன்று மதியம் 2 மணிக்கு ராசா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைபற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்களுக்கும் ராசாவின் நேரடி பதிலுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. மேலும் விசாரனையின் போது போதிய ஒத்துழைப்பு தர மறுக்கிறார். ராசாவிடம் கூடுதல் தகவல்களை பெற கைது தேவைப்பட்டது.

ராசாவை மேலும் 5நாட்கள் விசாரனைக்கு அனுமதிக்க வேண்டும். அலைகற்றை விவகாரத்தில் ராசா 22 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது கண்டுபடிக்கப்பட்டடுள்ளது. இதுகுறித்த கூடுதல் விசாரனைக்கு ராசாவை 5 நாட்கள் விசாரனைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ வாதிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ராசாவின் வழக்கறிஞர் ரமேசு குப்தா. அழைக்கும்போது எல்லாம் முறையாக விசாரனைக்கு வந்தார் ராசா. மேலும் சோதனை உட்பட சி.பி.ஐயின் அனைத்து நடவடிக்கைகளுக்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்நிலையில் விசாரனை என்ற பெயரில் அழைத்து திடீர் கைது செய்யப்பட்டது தேவையற்றது. ராசானை விடுதலை செய்யவேண்டும் என்று ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

சி.பி.ஐயின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள் 5 நாள் விசாரனை காவலில் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

No comments:

Post a Comment

Popular Posts