இன்று காலை கலைஞர் தொலைகாட்சி அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்திவந்தது. இந்த செய்தி தமிழகபத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக கருணாநிதி விரும்பவில்லை. மேலும் கூட்டணி மற்றும் தொகு பங்கீடு விடயத்தில் தொடர்ந்து திமுகவுக்கு காங்கிரசு தண்ணிகாட்டி வந்தது.
இந்நிலையில் பலநாட்களுக்கு பின்னர் கருணாநிதி இன்று காலை ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பாமக தலைவர் ராமதாசுக்கு அதிரடியாக தொலபேசியில் அழைப்பு விடுத்தார். அழைப்புக்காக காத்திருந்த ராமதாசு கோபாலபுரம் நோக்கி சிட்டாக பறந்தார். 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
பாமக திமுக கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க சொன்னார் கருணாநிதி. தொகுதி எண்ணிக்கையோடு அறிவிக்கலாம் என்று ராமதாசு முருக்கினார். அவ்வளவு தானே. 31 தொகுதிகள் + அன்புமணிக்கு மேலவை பதவி என்று கையெழுத்தே போட்டுக்கொடுத்தார் கருணாநிதி.
மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுத்தார் ராமதாசு. டெல்லியில் இருந்து என்ன பதிலடி வருமோ என்ற பயம் கலந்த குழம்பியே பேட்டியளித்தார் கருணாநிதி. மொத்தத்தில் கூட்டணியில் பாமகவுக்கு 31 இதரத்திற்கு 6 என 37 தொகுதிகள் ஓதுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள 199 தொகுதிகளில் தான் காங்கிரசு & விடுதலைசிறுத்தைகள் & திமுக பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி எதிர்பார்த்தது போலவே மாலை பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகளில் திமுக-பாமக தொகுதி உடன்பாடு தான் தலைப்பு செய்தி. ஆனால் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு இன்னும் இழுபறிதான்.
கூட்டணியில் பாமக வந்தாலும் 70 தொகுதிகளில் இருந்து குறைவதாக இல்லை என்ற நிலையில் காங்கிரசு உறுதியாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் ஆணைய அங்கீகாரம் என்பதில் உறுதியாக உள்ளனர். கூட்டி கழித்து பார்த்தால் திமுகவுக்கு மிஞ்சுவது 120 தான். அதிரடியாக பாமகவை கூட்டணியில் சேர்த்த திமுகவுக்கு கிடைத்த லாபத்தை விட அதிமுகவுக்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.
காங்கிரசு + தேமுதிக + பாமக என்ற மூன்றாம் அணிக்கு இப்போதைக்கு முற்றுபுள்ளி வந்துள்ளது. மேலும் அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாமகவை விட கூடுதல் தொகுதி வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை நிறைவேற்ற இனி அதிமுகவுக்கு தயக்கம் இருக்காது. விரைவில் 35 தொகுதிகளுடன் தேமுதிக அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment