செயலாலிதாவின் வல்லார்படம் குறித்த அறிக்கையை கண்டு வருத்தமாக இருக்கிறது. சிறிதும் அறிவில்லாத அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைதுறையும் வைத்துக்கொண்டு தமிழர்கள் கூனிக்குறுக வேண்டியுள்ளது.
கொச்சியில் சர்வதேச துறைமுகத்தை எதிர்ப்பது எவ்வளவு கேவலமான செயல். தூத்துக்குடி சர்வதேச துறைமுகமாக மாற வாய்ப்புகள் குறைவு. காரணம் அருகில் கொழும்பு சர்வதேச துறைமுகம் உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக அதிகமாக பயனடைவது கொழும்பு துறைமுகம் தான். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்த செயலலிதா தூத்துக்குடி துறைமுகத்தின் மீது காட்டும் திடீர் பாசம் வியப்பாக இருக்கிறது.
கோவை, திருப்பூர், கரூர், பகுதி வியாபாரிகள் தூத்துக்குடியை தவிர்த்து கொச்சி துறைமுகத்தை பயன்படுத்துவார்கள் என்கிறார் செயலலிதா. ஏன் இவர்கள் கொச்சி துறைமுகத்தை பயன்படுத்த வேண்டும்? கோவை, திருப்பூர், கரூர் தமிழகத்தில் தானே இருக்கிறது.
கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் விசாரித்தோம். அவர்களின் பதில் உங்களுக்கும் அதிர்ச்சியை தரலாம்.
கொச்சி துறைமுகத்துக்கு செல்லும் வழியில் வாளையார் சோதனை சாவடி என்ற ஒரே ஒரு இடையூறு தான் உள்ளது. மேலும் கொச்சி துறைமுகத்தில் உயர் பதவி முதல் அடிமட்டம் வரை அதிகமாக தமிழர்கள் தான் பணியாற்றுகிறார்கள். எனவே எந்தவித சிரமமம் இன்றி ஏற்றுமதி செய்ய முடிகிறது.
ஆனால் தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் வழியில் 50க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் உள்ளது. இதில் பலதும் சட்டவிரோதமாக அரசியல் ரவுடிகளால் நடத்தப்படுவது. இவர்களிடம் மாட்டி சிக்கி சிரழிய வேண்டி உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தில்லுமுல்லுகளை விட கொச்சி துறைமுகம் எவ்வளவோ மேல்
தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சியடைவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சாலையில் சுங்க கொள்ளையை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கோவை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.
நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பது நீதி, அடுத்தவன் வளர்ச்சியை தடுத்து நாம் வளரவேண்டும் என்பது அநீதி. இது தமிழர்கள் உலகுக்கு சொல்லிக்கொடுத்த பாடம்.
No comments:
Post a Comment