Feb 1, 2011

தினமலரின் தண்ணீர் விபச்சாரம்

காவேரி ஆற்றில் இருந்து மாதேசுவரன் பகுதி மலைவாழ் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுக்க கர்நாடகா முயற்சி செய்கிறதாம். இதை கண்டு தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

என்ன கொடுமை. காவேரி ஆறு பாயும் மலைபகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடிநீர் தரக்கூடாது என்று தினமலரை தவிர வேறு எந்த தமிழன் சொல்வான்? 

குழாய் மூலம் குடிநீர் எடுப்பதை கூடாது என்று சொல்பவர்கள் நிச்சயமாக நாகரீகமற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழர்கள் நாகரீகம் உள்ளவர்கள், ஒருபோதும் குடிக்க தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள்.

தினமலரின் கருத்தை விவசாயிகள் கருத்தாக சொல்லும் இந்த நரிதந்திரம் தமிழகத்துக்கே கிடைத்த சாபக்கேடு

பிரபலமான பத்திரிக்கைகள் ஏன் இப்படி இருமாநில மக்களுக்கிடையே தண்ணீர் சண்டையை தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் இவர்கள் அடையும் பலன் என்ன? விற்பனைக்காக இப்படி படுபாதக செயலில் ஈடுபடுகின்றன பத்திரிக்கைகள்.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான நீரோடைகள் உள்ளன. இவற்றை சிற்றணைகள் மூலம் தேக்கி அங்குள்ள மலைவாழ் மக்கள்(ஆதிவாசிகள்) குடிநீர் எடுக்ககூடாது, விவசாயம் செய்யக்கூடாது என்பதில் தமிழக பத்திரிக்கைகள் தீவிரமாக இருக்கின்றன. உண்மையில் இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கதக்கது. பலமுறை நான் யோசித்திருக்கிறேன் ஏன் நக்சலைட்டுகள் இங்கும் முளைக்ககூடாது என்று.

மலையில் சிற்றணைகள் கட்டுவதால் சமவெளிப்பகுதிகளில் நீர்ஆதரம் கூடுமே தவிர குறையாது. இது சில பத்திரிக்கை அறிவிலிகளுக்கு புரிவதில்லை. இவர்களுக்கு தண்ணீர் முக்கியம் அல்ல மணல்தான் முக்கியம். அதற்காக தான் சிற்றணைகள் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கோவையில் 100 கோடி செம்மொழி மேம்பாலம் கட்டுவதால் தமிழனுக்கும் பயனில்லை, தமிழுக்கும் பயனில்லை. கோவை குற்றாலம் வழி பாயும் சிற்றாறுகளை நொய்யலுடன் இணைத்து ஒரு அணை கட்டினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயம் பெருகும், விலைவாசி குறையும். 

இதை எல்லாம் எழுத பத்திரிக்கைகள் இல்லை. ஏன் என்றால் எந்த விவசாயும் விளம்பரம் தரமாட்டான், பத்திரிக்கை படிக்கமாட்டான், அணை கட்டினால் ஊழல் செய்யமுடியாது, மேம்பாலம் கட்டினால் ஊழல் செய்யலாம்.

மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts