இன்று திமுக பொதுக்குழு கூடுகிறது. ஏற்கனவே அழகிரி வைத்த கெடு நினைவிருக்கலாம். ராசா மற்றும் மாநில அமைச்சர் பூங்கோதையை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்று அழகிரி கோரியிருந்தார்.
ராசாவுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு என்பது ஊர் அறிந்த விடயம். அதே போல அமைச்சர் பூங்கோதை கருணாநிதியின் அன்பு துணைவி ராசாத்தியம்மாளின் உறவினர். இதனால் திமுகவில் பூங்கோதையும் ஒரு ஈட்டிமுனையாக இருந்து வருகிறார்.
நீரா ராடியாவுடனா£ன தொலைபேசி உரையாடலில் அழகிரியை முரடன், படிக்காதவன், என்றெல்லாம் வார்த்தை சாலம் விட்டவர் பூங்கோதை. இவற்றில் ஒருசில விடயங்களே வெளியாகி உள்ளன.
இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி கடந்த மாதம் திமுக தலைமைக்கு ஒரு மிரட்டல் விடுத்தார். ராசா, பூங்கோதையை கட்சியை விட்டு நீக்காவிட்டால் தான் ராசினாமா செய்வதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த கருணாநிதி திமுக பொதுகுழு கூடி முடிவு செய்யலாம். அதற்குள் நல்ல தீர்வு எடுக்கப்படும் என அழகிரிக்கு உறுதியளித்திருந்தார். அதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்.
சி.பி.ஐ யால் ராசா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சாமீனில் வெளிவருவதற்குள் திமுக பொதுகுழுவில் விவாதம் முடிந்திருக்கும். அதை குறிவைத்தே நேற்று ராசாவின் திடீர் கைது அரங்கேறியது.
இந்நிலையில் இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் எதாவது காரணங்கள் கூறி பூங்கோதை கட்சி பொருப்புகளில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
திமுகவை பொருத்தவரை கருணாநிதியை தவிர பூங்கோதைக்கு ஆதரவாக பேச ஒருவரும் இல்லை என்பது துணைவி ராசாத்தியம்மாளுக்கு விழும் அடுத்த அடி.
எல்லாம் அழகிரி கொடுத்த இடியண்ணே
ReplyDelete!!!