Jan 31, 2011

தினமலரின் தண்ணீர் விபச்சாரம்

காவேரி ஆற்றில் இருந்து மாதேசுவரன் பகுதி மலைவாழ் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுக்க கர்நாடகா முயற்சி செய்கிறதாம். இதை கண்டு தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

என்ன கொடுமை. காவேரி ஆறு பாயும் மலைபகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடிநீர் தரக்கூடாது என்று தினமலரை தவிர வேறு எந்த தமிழன் சொல்வான்? 

குழாய் மூலம் குடிநீர் எடுப்பதை கூடாது என்று சொல்பவர்கள் நிச்சயமாக நாகரீகமற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழர்கள் நாகரீகம் உள்ளவர்கள், ஒருபோதும் குடிக்க தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள்.

தினமலரின் கருத்தை விவசாயிகள் கருத்தாக சொல்லும் இந்த நரிதந்திரம் தமிழகத்துக்கே கிடைத்த சாபக்கேடு

பிரபலமான பத்திரிக்கைகள் ஏன் இப்படி இருமாநில மக்களுக்கிடையே தண்ணீர் சண்டையை தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் இவர்கள் அடையும் பலன் என்ன? விற்பனைக்காக இப்படி படுபாதக செயலில் ஈடுபடுகின்றன பத்திரிக்கைகள்.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான நீரோடைகள் உள்ளன. இவற்றை சிற்றணைகள் மூலம் தேக்கி அங்குள்ள மலைவாழ் மக்கள்(ஆதிவாசிகள்) குடிநீர் எடுக்ககூடாது, விவசாயம் செய்யக்கூடாது என்பதில் தமிழக பத்திரிக்கைகள் தீவிரமாக இருக்கின்றன. உண்மையில் இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கதக்கது. பலமுறை நான் யோசித்திருக்கிறேன் ஏன் நக்சலைட்டுகள் இங்கும் முளைக்ககூடாது என்று.

மலையில் சிற்றணைகள் கட்டுவதால் சமவெளிப்பகுதிகளில் நீர்ஆதரம் கூடுமே தவிர குறையாது. இது சில பத்திரிக்கை அறிவிலிகளுக்கு புரிவதில்லை. இவர்களுக்கு தண்ணீர் முக்கியம் அல்ல மணல்தான் முக்கியம். அதற்காக தான் சிற்றணைகள் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கோவையில் 100 கோடி செம்மொழி மேம்பாலம் கட்டுவதால் தமிழனுக்கும் பயனில்லை, தமிழுக்கும் பயனில்லை. கோவை குற்றாலம் வழி பாயும் சிற்றாறுகளை நொய்யலுடன் இணைத்து ஒரு அணை கட்டினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயம் பெருகும், விலைவாசி குறையும். 

இதை எல்லாம் எழுத பத்திரிக்கைகள் இல்லை. ஏன் என்றால் எந்த விவசாயும் விளம்பரம் தரமாட்டான், பத்திரிக்கை படிக்கமாட்டான், அணை கட்டினால் ஊழல் செய்யமுடியாது, மேம்பாலம் கட்டினால் ஊழல் செய்யலாம்.

மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

Jan 30, 2011

திமுகவை குழிதோன்டி புதைக்கும் கருணாநிதி


காங்கிரசை தோற்கடிக்க உறுவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தந்தை பெரியார், அண்ணா அவர்கள் எந்த நோக்கத்துக்கான திமுகவை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் கருணாநிதியால் முடிவுக்கு வந்தது.

காங்கிரசை தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கவேண்டும் என்பது திமுகவின் முதல் கொள்கை.

ஆனால் அண்ணாவால் விரட்டப்பட்ட காங்கிரசு இன்று கருணாநிதியின் குரல்வலையை பிடித்துள்ளது.

அடுத்து திமுக &காங்கிரசு கூட்டணி வெற்றிபெற்றால் நிச்சயமாக 50 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக ஆட்சி பீடத்தில் காங்கிரசு அமரும் என்பதில் சந்தேகமில்லை.

2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட 2011 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் ஒரே கட்சி காங்கிரசு தான். இந்த அதிர்ச்சியை எப்படி சீரணித்துக்கொள்வது என்றே தெரியவில்லை.

இந்த தேர்தலில் எனது கணிப்பு படி திமுக கூட்டணியில் இப்படி ஒதுக்கீடுகள் அமையலாம்

திமுக     140 (2006 - 130)
காங்கிரசு      60 (2006 - 48)
பாமக      30 (2006 - 31)
வி.சிறுத்தை 2  (2006 - 9)
இதரம் 4  (2006 - 4)

இந்த கூட்டணி வெற்றி பெருமானால் தமிழக ஆட்சி கட்டிலில் திமுகவும் காங்கிரசும் ஒன்றாக அமரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈழம் அழித்து தமிழகத்தை பிடித்தது காங்கிரசின் சாதனை. குடும்பம்  காங்கிரசை வளர்த்து, திமுகவை அழித்தது கருணாநிதியின் சாதனை.


திமுக தன்னோடு அழிந்துபோய்விட வேண்டும் என்பது தான் கருணாநிதியின் திட்டமா?

காங்கிரசை கழட்டிவிட்டால் திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் கருணாநிதியின் யோசனை இதுவாக கூட இருக்கலாம்.

இப்போது காங்கிரசை கழட்டிவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும். ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஒருவேளை குடியரசு தலைவர் ஆட்சி என்றால் அங்கு காங்கிரசின் கைதான் ஓங்கி இருக்கும். மத்திய ஊழல் வழக்குகளில் தன் மனைவி, துணைவிகள் கைது செய்யப்படலாம். குடும்ப சண்டையால் தேர்தல் வெற்றி தோல்வியை கூட பார்க்க முடியாமல் போகலாம்.

அய்யகோ... நல்ல தந்தையின் மன ஓட்டங்களை யார் அறிவார். 

தள்ளாதை வயதில் இப்படி காங்கிரசின் கிடுக்கிபிடியில் சிக்குவது தான் கருணாநிதியின் விதியா? 

தமிழகத்தில் தேர்தல்நடத்தை விதிகள் எப்போது அமல்?


இந்திய சனநாயகம் சனியன் சோனியாவிடம் இப்படி மண்டியிடும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். 

காங்கிரசு ஆட்சி சில மாநில கட்சிகளின் கைபிடியில் உள்ளபோதே, சனியன் இந்த ஆட்டம் ஆடுகிறதே, தனிபெரும்பான்மை என்றால் யோசித்துபாருங்கள்?

நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம், தகவல் ஆணையம். சி.பி.ஐ இப்படிப்பட்ட ஆணையங்கள் தான் ஆளும் கட்சிக்கு கடிவாளங்களாக கருதப்படுகிறது.

ஆனால் சனியனின் ஆட்சியில் எந்த ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது? 

எல்லா ஆணையங்களையும் தங்கள் கைபாவையாக மாற்றிவிட்ட சனியன், தினம் தினம் இந்தியாவை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பணத்தை குவித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தில் காங்கிரசின் உள்வேலை தான் இந்திய சனநாயகத்துக்கே பெரும் அடியாக உள்ளது.

பீகாரில் 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தாது ஏன்?

சனியன் இந்தியாவை விட்டு அகலும் வரை இதுபோன்ற சனநாயக கேளிகூத்துகள் நடந்துகொண்டு தான் இருக்கும்.

வாய் இளித்து வேடிக்கை பார்க்க மட்டுமே இந்திய குடிமகன் தேவை. செக்குமாடான இந்திய குடிமகன் இத்தாலி சனியனுக்கு இன்னும் நாலு கூழைகுப்பிடு போடட்டும்.

முல்லைபெரியாறு : ஒரு மலையாளியின் குரல்

வண்டிப்பெரியாறு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு கேட்டு போரடிவரும் போராட்டகுழுவில் உள்ள ஒரு மலையாளியின் குரலை தான் தற்போது கேட்டீர்கள்.

அவர்களது குரலின் தமிழ் மொழிபெயர்ப்பு :

2800 அடி உயரத்தில் உள்ள முல்லைபெரியாறு அணையில் இருந்து சிறிய பல புதிய கால்வாய்கள் வெட்டுவதன் மூலம் அணையே இல்லாமல் கூட தமிழத்துக்கு முழுவதுமான தண்ணீரை கொண்டு செல்ல முடியும். அல்லது சிறு சிறு சிற்றணைகள் மூலம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துசெல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை கொடுக்கும் தார்மீக பொருப்பை நாங்கள் வகிக்கவும் செய்வது தான் நாங்கள் முன்வைத்து போராடும் கருத்து. 

தமிழக அரசு யோசிக்குமா?

Jan 28, 2011

தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி


தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி
----------------------------------------------------------------------------
அதிமுக + தேமுதிக + மதிமுக + இடதுசாரி + கொ.மு.க + இதரம் = 180
திமுக + காங்கிரசு + பாமக + இதரம் = 56

அதிமுக + மதிமுக + இடதுசாரி + கொமுக + இதரம் = 100
தேமுதிக + காங்கிரசு + பாமக = 80
திமுக + இதரம் = 56

திமுக + பாமக + மதிமுக + இடதுசாரி = 136
அதிமுக + தேமுதிக + காங்கிரசு + கொமுக = 100

அதிமுக + தேமுதிக + காங்கிரசு = 80
திமுக + பாமக + இதரம் = 80
மதிமுக + இடதுசாரி + கொமுக + சீமான் + தமிழர் அமைப்புகள் = 76
-------------------------------------------------------------------------------------------
காங்கிரசு + பாமக + தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது.
தேமுதிகவை இழுப்பதில் அதிமுகவும் தீவிரம் காட்டியுள்ளது.
திமுகவுடன் சேர்ந்துகொள்ள பாமக இறுதிகட்டத்தை எட்டிவிட்டது
காங்கிரசை உடும்புபிடியாக பிடித்துவைக்க திமுகவின் முயற்சிதான் உச்சம்
-------------------------------------------------------------------------------------------
இப்போதைய நிலவரப்படி அடுத்து ஆட்சிமாற்றம் ஏற்படவே அதிக வாய்ப்

Jan 14, 2011

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை

எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும்.

இன்னும் காலம் கடந்துபோய்விடவில்லை கவனம் இருக்கட்டும்  ராசபட்சே - சோனியா சோடி.



Jan 13, 2011

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை

தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனைத்திலும் பண்பட்டவர்கள். நாகரீகத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.

இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கு உலக அரங்கில் நிச்சயமாக ஒரு தனிநாடு அங்கீகாரம் தேவை.

இது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை.

இந்தியா என்ற நாட்டில் மாநில சுயாட்சி இல்லை. இலங்கையில் சுதந்திரமே இல்லை. இத்தகு நிலையில் தமிழர் பெட்டகங்கள் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விகுறியே.
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும்.
 இன்னும் காலம் கடந்துபோய்விடவில்லை கவனம் இருக்கட்டும்  ராசபட்சே - சோனியா சோடி.

இந்தியா என்றா நாடு எப்படி உருவாக்கப்பட்டது? இங்கிலாந்தியர் தங்களுக்கு ஒரு வியாபாரசந்தையாக தானே  இந்தியாவை  உருவாக்கினார்கள். வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு சந்தையில் நியாயமான மனித உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு இருக்கும்?

இந்த சந்தையை மக்களாட்சி என்ற ஒற்றை கயிற்றில் கட்டியது சாதனை தான். ஆனால் மக்களாட்சி என்ற போர்வையில் தனி இனங்களின் நியாயமான உணர்வுகளை மழுங்க செய்வது எவ்வளவு பெரிய அநீதி?

தமிழர்கள் ஒன்றும் சகமனிதர்களிடம் பழகத்தெரியாத காட்டுமிராண்டிகளோ, ஆட்சிமுறை, அரசியல், கல்வி, வாணிபம், நிர்வாக கட்டமைப்பு இல்லாதவர்களோ அல்லவே. அப்புறம் ஏன் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி தர இந்தியா மறுக்கிறது. 

இந்தியா மாநில சுயாட்சியை மறுப்பதன் காரணம் என்ன? மீண்டும் ஒரு ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட தானே.

இந்தியா என்ற மாட்டு சந்தையில் அடிமாட்டு விலையில் இருப்பதை விட தமிழன் இறப்பது மேல்.

நிச்சயமாக இன்றைய தமிழர் தலைமுறையினர் இதை யோசித்தேயாக வேண்டும்

தமிழன் என்ற உணர்வை விட்டுவிட்டு இந்தியன் என்ற உணர்வு ஏற்கவேண்டும் என்பது எவ்வளவு பெரிய அடக்குமுறை.

முதலில் நான் தமிழன் பின்புதான் இந்தியன். முதலில் இந்தியன் பின்பு தான் தமிழன் என்றால் எப்படி ஏற்க முடியும்?

இந்தியன் என்ற உணர்வு தோன்றி 60 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் தமிழர் என்ற உணர்வு தமிழ் மொழி தோன்றியது தொட்டு இருக்கிறது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்தியா என்ன மதிப்பு அளித்துள்ளது? இலங்கை என்ற நாட்டின் நட்புக்காக கொடுக்கும் விலையில் ஒரு துளி சொந்த நாட்டு தமிழர்களுக்கு கொடுத்துள்ளதா?

மாநில சுயாட்சி அதிகாரம் தரப்பட வேண்டும். அது இல்லை என்றால் தனிநாடு அமைப்பது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை. இது இந்திய இறையாண்மைக்கோ, இலங்கை இறையாண்மைக்கோ எதிரானது அல்ல. இது அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. 

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றால் இந்தி மட்டுமல்ல இந்தியாவின் அடக்குமுறைகளும் துரத்தியடிக்கப்படவேண்டியது தான். 

இந்திய ஒரு சுதந்திரமான நாடுதான். போற்றி புகழதக்க இறையாண்மை கொண்டது தான். ஆனால் சமீபகாலத்தில் அதன் செயல்பாடுகள், குறிப்பாக தமிழர்க்கு எதிரான செயல்பாடுகள் ஒரு அடக்குமுறை போன்றே தோன்றுகிறது.

உணர்வு ரீதியாக சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் உள்ளங்களில் எழுந்துள்ள இந்த சந்தேகத்தை போக்க இந்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

நான் ஏதோ இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதுகிறேன், பிரிவினையை தூண்டுகிறேன். தேச துரோகம் செய்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

நானும் இந்திய குடிமகன் தான். நானும் உணர்ச்சி உள்ள மனிதன் தான். எனக்குள்ளும் சில உணர்வுகள் இருக்கிறது. அது ஒன்றும் அநீதி அல்லவே. அந்த உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாவிட்டால் இந்த நாட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது?

இதுவரை அம்பேத்கார் படத்தை பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள். சுதந்திரம் தர ஆங்கிலேயர் சம்மதித்து விட்டார்கள். ஆனால் காந்திக்கும் அம்பேத்காருக்கும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.

காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்காருக்கு நெருக்கடி தருகிறார்.

காந்தி என்ற ஒற்றை மனிதரின் உயிருக்காக எங்கள் உணர்வுகளை புதைக்கமுடியாது என்று தைரியமாக நிற்கிறார் அம்பேத்கார்.

அம்பேத்காரின் கோரிக்கை இது தான். ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கா விட்டால் இந்தியாவே தேவை இல்லை என்பது தான்.

அதையே தான் நானும் இன்று வலியுறுத்துகிறேன். இந்தியாவுக்கு இலங்கை தான்முக்கியம் என்றால் தமிழனுக்கு இந்தியா தேவை இல்லை. 

இந்தியை துரத்திய தமிழனுக்கு இந்தியாவை துரத்துவது ஒன்றும் கடினமல்ல.

எங்கள் கோரிக்கை இதுதான். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்திய இறையாண்மைக்கு மட்டும் மதிப்பளியுங்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவை உண்மையான மக்களாட்சி. அது இல்லை அரசியல் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும் என்றால் தமிழர்மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய குடிமக்களுமே மீண்டும் ஒரு சுதந்திரபோராட்டம் நடத்த வேண்டும்.

அடிமைதனம் தான் தமிழகத்தின் நோக்கமா?

முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது தமிழக எல்லைக்குள் ஏன் புதிய அணையைகட்டிக்கொள்ள கூடாது? 

வருமானம் குறைந்த ஒரு சிறு மாநிலமே அணை கட்ட துணியும் போது, 7 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது முல்லை பெரியாறு. அப்படி இருக்க நாம் ஏன் புதிய அணை கட்டக்கூடாது? நமக்கு தேவை தண்ணீர். கேரளாவுடன் அரசியல் சண்டை அல்ல. 

பலமுறை தமிழக எல்லைக்குள் அணைகட்டும் திட்டம் பொறியாளர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அதை முன்னெடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?

அப்படி என்ன தமிழகத்தில் நிதி பற்றாக்குறை?

கேரளா ஒரு சிறு மாநிலம். அங்கு விவசாயம் இல்லை, குடிநீர் தட்டுப்பாடு இல்லை, அவ்வளவு மக்கள் தொகையும் இல்லை, ஆனாலும் இன்றும் கூட 8 புதிய அணைகளை கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் பெரிய விவசாய மாநிலம் தமிழகம். பாராம்பரியமாக விவசாயத்தை தொழிலாக கொண்ட இங்கு மேம்பாலங்களை தான் கட்டிக்கொண்டு இருக்கிறோம். ஒரு சிற்றணை கட்ட கூட இவர்களுக்கு புத்தி வரவில்லை என்றால் என்னவென்று சொல்வது?

விவசாய பூமியான தமிழகத்தில் இன்று அணைகளோ, ஏரிகளோ அமைக்கப்படுவதில்லை. மேம்பாலங்களும் ரீயல் எசுடேட் வியாபாரமும் தான் கோலோச்சுகிறது.

நமக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதும், அங்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் இடம், தண்ணீர், தங்குதடையற்ற மின்சாரம் கொடுப்பது தான் முக்கியமாக படுகிறது. கேட்டால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். 

தமிழக அரசின் நோக்கம் என்ன? ஒட்டுமொத்த விவசாய நிலங்களை காயப்போட்டு விவசாயிகளை கூலிகளாக்குவது, தரிசான விவசாய பூமியை அடிமாட்டு விலைக்கும் கீழ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று ஊழல் செய்வது. வே¬வாய்ப்பற்ற ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்குவது. இது தானே நடக்கிறது. பிழைப்பை கெடுத்து வேலைவாய்ப்பு என்ற பெயரில் தமிழர்களை கொத்தடிமையாக்குவது தான் அரசின் நோக்கமா?

கேரள முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒரு துளி தண்ணீர் கூட வேண்டாம் என்கிறது. அணையின் பாதுகாப்பு மட்டும் தான் அவர்களது பிரச்சனை. அதற்காவே கடன்வாங்கியேனும் புதிய அணையை கட்டிதீருவோம் என்று முழு மூச்சில் வேலை செய்கிறார்கள். உச்சநீதிமன்றத்தையே எதிர்த்து அவர்கள் உத்வேகமாக இருக்கிறார்கள். 

ஆனால் தண்ணீர் உயிர்பிரச்சனையாக உள்ள நாம் வெற்று அறிக்கைகளை மட்டுமே விட்டு, வாய்சவடால் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேரளா அணை கட்டியே தீருவேன் என்றால் தமிழகமும் அணைகட்டும் வாதத்தை முன்வைக்க வேண்டும். இதனால் ஒரு சமரசபோக்கு வர வாய்ப்புள்ளது.

தமிழக எல்லைக்குள் புதிய அணை கட்டுவதால் கேரளாவுக்கு பணம் தரவேண்டியது இல்லை. தமிழகம் எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மின்சாரமும் தயாரித்துக்கொள்ளலாம். அணையின் ஒட்டுமொத்த அதிகாரம் பாதுகாப்பும் தமிழகத்தின் கையில் இருக்கும். கேரளாவுடன் சண்டையும் வேண்டாம். வழக்கு என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகள் செய்த செலவில் ஒரு சிற்றணையே கட்டியிருக்கலாம்.

தமிழக மக்களே மேம்பாலங்கள் கட்டியது போதும். அணைகளை கட்ட யோசிக்கவாவது செய்யுகள். 

Jan 12, 2011

செயலலிதா + தினமணியின் முட்டாள்தனமான வாதம்

மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை.

முல்லைபெரியாரில் புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டுள்ள இடம் புலிகள் பாதுகாப்பு வனத்திற்கு உட்பட்டது. சமீபத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து உலகளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட பிரதமர் அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால் கேரளாவால் புதிய அணை கட்டமுடியாது. இதை சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் என்பது தான் செயலலிதாவின் புதிய அறிக்கை சுருக்கம்.

இதை தினமணி புகழ்ந்து தள்ளியுள்ளது. வாசகர்கள் நடுநிலையும் தமிழர்கள் மீது அக்கறையும் உள்ள தினமணியின் சேவை வாழ்க என்று வேறு புகழ்ந்து தள்ளுகின்றனர்.

முதலில் செயலலிதாவுக்கு விளக்கமளித்துவிட்டு தினமணிக்கு வருகிறேன்.

புலிகளை பாதுகாக்க புதிய அணை கட்டக்கூடாது என்று நீங்கள் கூறுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே கேரளா முல்¬லைபெரியாறு அணையால் புலிகளுக்கு ஆபத்து என்பதை ஒரு வாதமாக வைத்துள்ளது. அரசியல்வாதிகள் கொஞ்சம் பழைய செய்திதாள்களையும் படிப்பது நல்லது. (பத்திரிக்கை ஆசிரியர்களும் தான்) 

முல்லை பெரியாறு அணை உடைந்தால் மனிதர்களை விட புலிகள், காட்டுயானைகள் அழியும் என்பதை கேரளா ஏற்கனவே காணொளியுடன் விளக்கியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் புலிவாலை பிடித்தால் உங்களுக்கு தான் ஆபத்து. புலிகளை காப்பது இருக்கட்டும் தமிழ்ஈழ புலிகளை காக்க எதாவது குரல்கொடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

அடுத்து தினமணி

தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் வெளியிடும் தினமணியின் அதே அலுவலகத்தில் இருந்து வெளிவரும் இன்டியன் எக்சுபிரசு நாளிதழில் ஏன் கேரளவுக்கு ஆதரவாக செய்திகள் வருகின்றன. அப்படியானால் உண்மை தான் என்ன? இது தான் நடுநிலையா?

முல்லை பெரியாறு விடயத்தில் சன் டிவி செய்திக்கும் சூரியா டிவி செய்திக்கும் ஏன் வேறுபாடு ( இரு டிவிக்கும் செய்திகள் சென்னையில் ஒரே ஒளிப்பதிவு அறையில் இருந்து தானே ஒளிபரப்பப்படுகிறது ) 

தமிழக காங்கிரசும் கேரள காங்கிரசும் முல்லைபெரியாறு விடயத்தில் ஒரே கருத்தை கொண்டுள்ளதா? தமிழக இடதுசாரிகளும் கேரள இடதுசாரிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளார்களா? தமிழக அதிமுகவும் கேரள அதிமுகவும் ஒரே கொள்கைள் உடையனவா?

ஒன் மேன் ஆர்மி அதிமுக என்றால் கேரள அதிமுக தேர்தல் அறிக்கையில் எப்படி கேரளா புதிய அணை கட்டியே தீரவேண்டும் என்பது இடம்பெற்றது? இதை ஏன் செயலலிதா கண்டிக்கவில்லை? கேரளாவில் புதிய அணை கட்டவேண்டும் என்கிற கேரள திமுக யாருக்காவது தெரியுமா? இவர்களுக்கு கருணாநிதியும் கனிமொழியும் சால்வை அணிவித்து கூப்பாடுபோடுவதாவது தெரியுமா?

முல்லை பெரியாறு பற்றி வாய்கிழிய பேசும் வைகோவுக்கு குமரகத்தின்(கோட்டயம்) ரகசியங்கள் தெரியாதா? வைகோ மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் முல்லைபெரியாறு அணையால் ஆபத்து இல்லை என்று!

குமுளி இடுக்கி, வண்டிபெரியாறு பகுதிகளில் தமிழ் மலையாளம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் தினத்தந்திக்கும் மலையாளத்தின் மாத்யமம் உட்பட பத்திரிக்கைகளுக்கும் ஒரே நிருபர் தான். அவர் ஒருவரே இரு பத்திரிக்கைகளுக்கும் செய்தி அனுப்புவார். அப்படியே மொழிமாற்றம் செய்து அனுப்பினால் பத்திரிக்கைகள் செய்தியை வெளியிடுமா? அங்கு ஆதரவாக அங்கு இங்கு ஆதரவாக இங்கு இதுதான் உண்மை நிலை.

பொதுமக்களே தயவு செய்து உண்மையை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்

ஏன் ஒரே செய்தி நிருவனம் இருவேறு செய்திகளை தருகிறது? ஏன் ஒரே கட்சி இருவேறு குரல் கொடுக்கிறது? ஏன் ஒரே நிருபர் ஒரே செய்தியை இருவேறு கோணங்களில் எழுதுகிறார்?

ஒரு கனமேனும் யோசியுங்களேன்...

ஈழம் ; வைகோ, சீமான் முடிவு சரியானதே

ஈழம், முல்லைபெரியாறு, சேதுசமுத்திர திட்டம், உட்பட பல விடயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரே தமிழக தலைவர் வைகோ. (எனக்கு தெரிந்தவரை) 

அரசியலில் வைகோ போன்ற நபர்கள் தேவை என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்திய நாடாளுமன்றம், சட்டசபைகளில் வைகோ இடம்பெறாதது தமிழர்களுக்கு பின்னடைவே.

வைகோவின் அரசியல் பயணம் தடுமாறியது காலத்தின் நெறுக்கடியாகவே நான் பார்க்கிறேன். வேர்பிடித்துவிட்ட இரு பெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்துவது சாதரனம் அல்ல. சிலநேரங்களில் ஏதோ ஒரு பக்கம் சாயாவிட்டால் கட்சி இழப்புக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். 

தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.

கருணாநிதியை விட செயலலிதா ஈழத்திற்கு எதிரானவர் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். 

கருணாநிதி எதிர்கட்சியாக இருந்திருந்தால் ஈழப்போரின் போது தமிழகத்தில் மிகப்பெரிய பிராளயமே ஏற்பட்டிருக்கும். ஒருவேளை போரின் வெற்றி புலிகள் பக்கம் கூட திரும்பியிருக்கலாம். ஆனால் அதைவிட அதிகாரம் கொண்ட ஆளும்கட்சியாக இருந்து கருணாநிதி நடத்திய நாடகத்தை எப்படி மன்னிப்பது?

தமிழக மக்களிடம் ஈழம் ஒரு பிரச்சனையே அல்ல என்று அடித்து சொன்ன துணைமுதல்வர் சிடாலின் அதை நீருபித்தும் காட்டிவிட்டார். காங்கிரசுக்கு இதைவிட மிகப்பெரிய தைரியம் வேறு என்ன இருக்க முடியும்?

இந்த தேர்தலில் திமுக-காங்கிரசு கூட்டணி வெற்றிபெறும் என்றால் தமிழகத்தில் ஈழம் மீண்டும் குழிதோண்டி புதைக்கப்படும்.

ஈழம் தமிழர்களின் உணர்வு என்பதை நிரூபிக்க திமுக-காங்கிரசு கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஈழப்போரை நடத்திய காங்கிரசை இந்த தேர்தலோடு தமிழகத்தில் இருந்தே துடைத்தெரிய வேண்டும். அது தான் ஈழம் அமைப்பதற்கான மற்றொரு படி.

செயலலிதா மிகவும் ஆபத்தானவர், ஈழத்துக்கு எதிரானவர், எந்த நேரத்திலும் காங்கிரசோடு கைகோர்த்துவிடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்காக ஈழ ஆதரவு கட்சிகள் தனி அணியில் நின்றால் அதைவிட ஈழத்துக்கான பின்னடைவு வேறு ஏதும் இருக்க முடியாது.

போதிய அரசியல் அறிவோ, ஈழம் குறித்த புரிதல்களோ இல்லாத தமிழகத்தில் நிச்சயமாக ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

Jan 11, 2011

காங்கிரசின் நீதிமன்றங்கள் கலைக்கப்பட வேண்டும்

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவ கொள்ளை, நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் நீதித்துறை ஊழல், இறையாண்மை என்ற பெயரில் அடிமைத்தனம் இந்த மூன்றுக்கும் புரையோடிய சாக்கடை வாசம் அல்லாமல் வேறு என்ன இருக்கிறது?

நாட்டின் உச்ச அதிகாரமாகமும் நம்பிக்கையும் தருவது 2 கட்டமைப்புகள் 1. சனாதிபதி, 2 உச்சநீதிமன்றம்.

ஆனால் இன்று இந்த இரண்டுமே அரசியல் சாக்கடையில் சுற்றும் மூச்செலிகள் ஆகிவிட்டன. 

சனாதிபதியை யார் தேர்ந்தெடுத்தது? சனாதிபதி யாரின் சிபாரிசில் வந்தவர்? சனாதிபதி யாருக்கு கூழைகும்பிடு போட்டவர்? காங்கிரசு என்ற கட்சிதான் இந்தியாவா? இந்தியர்களின் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு என்ன அறுகதை இருக்கிறது?

பிரதீபா பட்டீல் யார்? இந்தியாவின் 100 கோடி மக்கள் தேர்ந்தெடுத்த சனாதிபதியா? அல்லது காங்கிரசு தேர்ந்தெடுத்த சனாதிபதியா? 
இந்திய மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவர் இந்தியாவின் சனாதிபதி. காங்கிரசு தேர்ந்தெடுத்தது என்றால் அவர் காங்கிரசின் சனாதிபதி தானே.

இன்று இந்தியாவின் மாநில கவர்னர்கள் எல்லாம் யார்? முன்னாள் காங்கிரசு தலைவர்கள், அல்லது அடுத்து காங்கிரசு தலைவர்களாகுபவர்கள். காங்கிரசுக்கு கூழைகும்பிடுபோட்டு வந்தவரை எல்லாம் கவர்னர் என்றால் அந்த பதவிக்கு என்ன விலையும் மரியாதையும் தருவது?

சி.பி.ஐ, தகவல் உரிமை ஆணையம், மனித உரிமை ஆணையம், லஞ்ச ஒழிப்பு ஆணையம் இப்படி எந்த ஆணையத்தை எடுத்தாலும் காங்கிரசு அபிமானிகள். இந்த நாட்டில் என்ன சனநாயகம் இருக்கிறது?

இன்று பல ஆணையங்களில், பல ஆட்சிபணி அதிகாரிகளில் காங்கிரசுக்காரர்கள் தான் கொட்டம் அடிக்கின்றனர். அதே பாணியில் தான் நாட்டில் உள்ள பெருபான்மை நீதிமன்றங்களில் அரசியல் அபிமானிகள் நீதிபதிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் எழுதும் தீர்ப்பில் எல்லாம் எப்படி நீதியை எதிர்பார்ப்பது?

சனாதிபதி, சபாநாயகர், கவர்னர், நீதிபதிகள், காவல்துறை, ஆணையங்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லாம் எந்த அரசியல் கட்சியையும் சாராத நடுநிலையாளர்களாக இருக்க வேண்டாமா? அப்போது தானே நியாமன சனநாயாகம் இருக்கும்.
அரசியல் கட்சிகளுக்கு கூழைகும்பிடு போடும் சனாதிபதி, கவர்னர்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை ஆய்வாளர், அரசுஊழியர்கள் கூண்டோடு அகற்றப்பட வேண்டும்.

அதற்கு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். வழி இருக்கிறது அம்பேத்காரின் சட்ட புத்தகத்தில் 

அதை செயல்படுத்த தேவை 100 நல்லெண்ணவாதிகள், 5 மாவட்ட ஆட்சியர்கள், 2 வழக்கறிஞர்கள். தேவைப்பட்டால் ஒரு பிரபலம்.

சனநாயகத்தின் மீது உண்மையான மதிப்பை வைத்திருப்பவர்கள் என்னோடு தோள்கோர்க்கலாம்.

சேர்ந்து சிந்திப்போம்.

தொடரும்.

தமிழ்ஈழம் அமைய தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு

இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று.


இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான்.


உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம் செய்கிறது. சுண்ணாம்பு கற்கலால் கட்டப்பட்ட முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பது உலகறிந்த விடயம்.


இதுவரை ஆய்வு செய்த 23 நிபுணர் குழுவும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்பதை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு சாதகமாக சொன்ன உச்சநீதிமன்றம் கூட அணை பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை சொல்லவில்லை. 

இந்த விடயத்தில் தமிழகம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பது நமக்கு தான் இழப்பை தரும். நாம் ஏன் வீம்பு (ஈகோவை) விட்டுவிட்டு மாற்றை யோசிக்கக்கூடாது?




நமக்கு தேவை தண்ணீர். அதை தர கேரள முழுமனதுடன் சம்மதிக்கிறது. அதை எங்கு சேமிப்பது என்பதில் தான் பிரச்சனை. முல்லைபெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிப்பது கேரளாவுக்கு ஆபத்தை தரும். என்றால் சேமிப்பிடத்தை ஏன் மாற்றக்கூடாது?



1975ல் சீனாவில் 2 அணைகள் உடைந்து ஏரத்தாள 2 லட்சம் மக்கள் இறந்தார்கள். இது நடந்தது நம் கண்முன் தான். 35 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. நம்மைபோல தான் அணை பலமாக உள்ளது பலமாக உள்ளது என பாட்டுப்பாடிக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் அந்த பாட்டு 2 லட்சம் மக்களுக்கு மரண ஓலமானது. அது கூட உள்நாட்டு பிரச்சனையாக முடிந்துவிட்டது.



ஆனால் முல்லை பெரியாறு விடயத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அணைக்கு எதாவது சம்பவித்தால் அப்புறம் கேரளா தமிழகம் நல்லுறவு என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க வேண்டியதில்லை. ஏற்படும் இழப்பிற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்.



இன்று தமிழகத்தின் வாதம் இதுதான் கல்லணை. கல்லணை. கல்லணை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கும்போது 112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரியாறு அணை உறுதியாக இருக்காதா என்பது தான் தமிழகத்தின் வாதம்.



இது தவறாதும் மடத்தனமான வாதமுமாகும்.



கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா? நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்

  • கல்லணை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • பெரியாறு அணை 2890 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • கல்லணையின் உயரம் 20 அடிகள் 
  • பெரியாறு அணையின் உயரம் 177 அடிகள். 
  • கல்லணையில் இருந்து அவசர காலத்தில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரை வெளியேற்ற முடியும். 
  • பெரியாறு அணையில் இருந்து 2000 கன அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும் அதுவும் அவரசர கதியில் வெளியேற்ற முடியாது. 
  • கல்லணையின் கீழ்பகுதி 20 டிகிரி சரிவையுமே 20 அடி ஆழமும் கொண்டுள்ளது. 
  • பெரியாறு அணையின் கீழ்பகுதி 90 டிகிரி சரிவும் 300 அடி ஆழ பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. 
  • கல்லணை பகுதியில் நிலச்சரிவு, நிலநடுக்க அபாயம் இல்லை. 
  • பெரியாற்றில் இந்த இரண்டு அபாயங்களும் உள்ளது. பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2006 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது.
  • கல்லணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேட்டூர், அமராவதி, பவானிசாகர் இந்த மூன்று அணைகளை வைத்தே கல்லணையின் அவசர காலத்தை கணித்து விட முடியும்.
  • ஆனால் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அணை கட்டுமானத்தின் போதே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டுமானம் கைவிடப்பட்டிருக்கிறது. பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் பென்னி குயிக் தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் கட்டி முடித்திருக்கிறார். கட்டும்போதே 185 இடங்களில் தடுப்பணை கட்டி, பிரதான பாதையை பேபி டேம் பக்கம் திருப்பியிருக்கிறார்.  பெரியாற்றில் எதை வைத்து அவசர காலத்தை கணிப்பது. 
  • பெரியாறு அணையானது 12க்கும் மேற்பட்ட காட்டாறுகளை இணைத்து மலை உச்சியில் கட்டப்பட்ட அணை.
  • மலைசிகரத்தில் உள்ள காட்டாற்றின் அழுத்தம், வேகத்தை சமவெளி பகுதியில் ஓடும் நதியுடன் ஒப்பிடலாமா?
  • கல்லணையில் தண்ணீரை தடுத்து நிறுத்தும் மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாகவே நான்கு திசைகளில் தண்ணீரை பிரித்து விடக்கூடிய வசதிகள் இருக்கிறது.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்து வைப்பது ஒரு பகுதி, வெள்ளம் அதிகமாகும் போது திறந்து விட வேறு ஒரு பகுதி, தண்ணீரை தமிழகத்திற்கு திருப்ப ஒரு பகுதி என மூன்றாக, மூன்றும் மூன்று திசையில் இருக்கிறது. 
  • பெரியாறு அணையில் அழுத்தம் அதிகமான பகுதியில் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மதகுகள் இல்லை. அழுத்தம் கூடும்போது தண்ணீரை திறந்துவிட அணையின் இடது புறத்தில் பேபி டேம் உள்ளது. இது ஆற்றின் பிரதான பாதையைவிட மேடான இடத்தில் உள்ளது. அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க வடக்குப்பக்கம் சுரங்கப்பாதை உள்ளது. அணையில் 104 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தண்ணீர் கீழே வரும்.
  • கல்லணை என்பது தண்ணீரை பிரித்துவிடும் அணைதானே தவிர தேக்கி நிறுத்தும் அணை அல்ல. மேலும் இயற்கையான போக்கில் கட்டப்பட்ட அணை.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீர் தடுத்து தேக்கப்பட்டு அணையின் மற்றொரு மூலையில் சுரங்கம் வழியாக கீழே கொடுவரப்படுகிறது. இது இயற்கைக்கு எதிராக கட்டப்பட்ட அணை. 
  • இரு அணைகளின் அழுத்தமும், நீர் அரிப்பும் மிகஅதிக வேறுபாடு உடையது.
  • கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை என்பது தற்போது மதகுகளுக்கு கீழ் உள்ள அடிப்பகுதி. அதாவது ஒரு செக் டேம் போன்றது. அதன்மீது உள்ள பாலங்களும், மதகுகளும் சமீபத்தில் கட்டப்பட்டது. 
  • கல்லணை தடுப்பு சுவற்றின் அகலம் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை ஒரேமாதிரியாக உள்ளது. 
  • ஆனால் பெரியாறு அணையின் தடுப்பு சுவற்றின் அடியில் அகலமான சுவரும்,மேலே வரவர கூர்மையான பகுதியாக உள்ளது. இந்த கட்டமைப்பு தான் ஆபத்தாக உள்ளதாக கேரளா கூறுகிறது.
  • கல்லணை ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • பெரியாறு அணை இரு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • கல்லணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை.
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. 
  • கல்லணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. 
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிது.
  • காவிரியாற்றில் கர்நாடகாவுக்கும், நமக்கும் தேவை ஒரேமாதிரியானது. குடிநீர், விவசாயம், மின்சாரம்.
  • ஆனால் பெரியாற்று நீர் கேரளாவுக்கு ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு தேவையானது.
  • தண்ணீரை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • கேரளாவின் குடிநீர், விவசாயம், மின்சாரத் தேவைகளுக்கு பெரியாறு பயன்படுவதில்லை, தேவையும் இல்லை.
  • பெரியாற்றின் வெள்ளப்பெருக்கால் உயிர்சேதமும், கொச்சி நகர அழிவும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
  • ஆனால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் குடிநீர், விவசாயம்,மின்சார தேவைகளுக்கு பெரியாறு இன்றியமையாதது.
  • நமக்கு இது உயிர் ஆதார பிரச்சனை.கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
  • கர்நாடகாவைப் போல தண்ணீர் தரமாட்டோம் என்று கேரளா ஒரு போதும் சொல்லவில்லை.
  • காவிரி பிரச்சனையில் தீர்வை முன்வைத்து யாரும் போராடுவதில்லை.
  • ஆனால் பெரியாற்று பிரச்சனையில் போராட்டக்காரர்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள்.


அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள். 



இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்க கூடாது.
இந்த தீர்வால் தமிழகத்திற்கு செலவு குறைவும், பிரச்சனைக்கு தீர்வும், அதிக தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப
காய் கவர்ந் தற்று 
அல்லவா..



முல்லைப்பெரியாறு பிரச்சனையோடு, காவிரியையும், பாலாற்றையும், ஈழத்தையும் சேர்த்து முடிச்சு போட்டு, எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு தொல்லை என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நமது கண்ணோட்டத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். 

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ ஈகோ பிரச்சனையோ அல்ல.



இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.



அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்  



இந்த பதிவை வாசிப்பவர்கள் ஒரு முறை கூகிள் இணையத்தில் உள்ள மேப் பகுதி வழியாக அணையை பார்வையிடுங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்


ஈழத்துக்கும் முல்லை பெரியாருக்கும் என்ன சம்மந்தம்? என்ற கேள்வி மனதுள் எழுந்திருக்கும் . நன்று .

ஈழத்துக்கு கேரளாவின் மிகப்பெரிய உதவி தேவைப்படுகிறது. குமரகம் சென்றுவரும் வைகோவுக்கு இது தெரியும். 

Jan 10, 2011

சாக்கடை இந்தியாவை சுத்தப்படுத்த முடியுமா?

அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன்.

இப்படி நாரிப்போன இந்தியாவை சுத்தப்படுத்த முடியுமா? 

சும்மா குறைகளையே சொல்லிக்கொண்டு இருந்தால் பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன? -  இதுதான் பலரின் ஆதங்கம்.

இந்திய அரசியலை சுத்தப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான் செயல் அல்ல.

இந்தியா அரசியல் அமைப்பு சாசனத்தை தங்களின் சுயநலனுக்கு ஏற்ப திரித்துவிட்ட அரசியல்வாதிகள் அதை முறைப்படுத்துவார்கள் என்பது கேள்வி குறியே?

 இந்தியாவை சுத்தப்படுத்த அரசியல் ஒன்று தான் வழி என்றால் எத்தனை யுகங்கள் கடந்தாலும் சுத்தப்படுத்தவே முடியாது என்பதுவே என் கருத்து.

ஒரு கட்சி ஆரம்பித்து அதில் நல்லவர்களை இணைத்து இப்போது உள்ள அரசியல் பணமுதலைகளை எதிர்த்து எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்?

சாதாரண மக்களுக்கு பிரபலங்களின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. எந்த பிரபலம் தைரியமாக அரசியல்வாதிகளை எதிர்க்க முன்வருகிறார்கள்?

உதாரணத்துக்கு ஈழப்போரின் போது குழந்கைளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று அப்துல்கலாமை கேட்டோம். வாயே திறக்கவில்லை. இவர் எல்லாம் எதற்கு குழந்தைகளை பற்றி பேசி பிரபலமானார்?. இப்படி தான் இன்றுள்ள ஒவ்வொரு பிரபலமும். தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் வீதிக்கு கூட வந்து போராடுவார்கள். ஆனால் பொதுநலன் என்றால் பொட்டி பாம்பாக அடங்கிவிடுவார்கள். 

இன்று இந்தியாவை ஆக்கிரமித்து உள்ள இத்தாலி சனியன் உட்பட 2000 நச்சு அரசியல்வாதிகளை தாண்டி ஒரு சாதாரன மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் வாய் கூட திறக்க முடியாது.

மக்களாட்சி என்ற இந்தியாவில் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் தாத்தன், அப்பன், மகன், பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, கள்ளகாதலன், கள்ளகாதலி, இப்படிப்பட்டவர்கள் தான் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த கேவலம் இந்தியாவுக்கு தேவையா?

இந்தியாவை நிச்சயமாக அரசியலை வைத்து சீர்திருத்த முடியாது. அப்படி முயன்றால் என்னை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இதை தாண்டிய ஒருமாற்று வழி. அது இந்திய அரசில் சாசனத்திலேயே உள்ளது.

அரசியல் அல்லாத மாற்று வழி. அந்த வழியில் இந்தியாவில் நல்லதொரு மக்களாட்சியை கட்டமைத்துவிட முடியும் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் உச்ச அதிகாரம் சனாதிபதி, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று சனாதிபதியும், நாடாளுமன்றமும், நீதிமன்றமும் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கின்றன. இந்த கட்டமைப்பை உடைக்க வேண்டும். அதிகார படிநிலைகளை நேர் எதிராக திருப்ப வேண்டும். 

நாடாளுமன்றம் - மாநிலம் - மாவட்டம் - பஞ்சாயத்து என்ற அதிகார கட்டமைப்பை
பஞ்சாயத்து - மாவட்டம் - மாநிலம் - நாடளுமன்றம் என்று திருப்ப வேண்டும்.

இது குறித்து விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமானது., அதிக கால அவகாசமும் தேவையில்லை. ஒரு ஆண்டு போதும். இந்தியாவை நல்லரசாகவும் வல்லரசாகவும் மாற்றிக்காட்ட முடியும். 

இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவை 100 நல்லெண்ணவாதிகள். 5 மாவட்ட ஆட்சியர்கள். 2 வழக்கறிஞர்கள். 1 எம்.பி, தேவைபட்டால் ஒரு பிரபலம் இவர்கள் இருந்தால் போதும்.

சேர்ந்து சிந்திப்போம். 
தொடரும்...

Jan 9, 2011

இந்தியாவை சுக்குநூறாக உடைக்க வேண்டும்

சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான்.

அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்கள். ஆனால் இன்று இந்தியாவில் மக்களாட்சி என்ற பெயரில் மீண்டும் ஒரு நபர் ஆட்சியை தானே இருக்கிறது. சுதந்திரம் முதலே போலி இந்தியாவையும் போலி மக்களாட்சியையும் திணித்தது ஏன்? அதை எதிர்த்து தான் தந்தை பெரியார் உள்ளிட்டோர் மாநில சுயாட்சி கொள்கையை முன்வைத்தார்கள். ஆனால் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுவதே இ¬றாண்மைக்கு எதிரானது என்ற அளவுக்கு வந்துவிட்டது. 

மாநில சுயாட்சி, பஞ்சாயத்து ராசியம், கிராம தன்னாட்சி என்ற அற்புதமான கட்டமைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் 60 ஆண்டுகளாகியும் அது வெறும் ஆவணமாகதானே இருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் கட்டமைப்புகளை படித்துபாருங்கள். அதில் குறிப்பிட்ட மாநில சுய ஆட்சியும் பஞ்சாயத்து ராசியங்களும் எங்கே போயின. ஏன் செயல்படுத்தப்படவில்லை?
மத்திய மாநில அரசுகளின் கைபாவையாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டதன் காரணம் என்ன?

100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் எத்தனை பேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது. 99 கோடி பேருக்கு அரசியல் அறிவு இல்லை. மீதம் 1 கோடி பேரில் 50 லட்சம் பேர் ஆட்சிபணி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்ற பெயரில் ஆதிக்க வர்கத்துக்கு கூப்பாடு போடுகின்றனர். 50 லட்சம் பேர் அரசியல்வாதிகள், தொழில்அதிபர்கள் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த ஒரு கோடி பேர் தான் இந்திய மக்களா? இவர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள். மற்றவர்கள் வெறும் வாக்கு இயந்திரம் மட்டும் தானே.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி தென்கோடியில் உள்ள எனக்கு என்ன தெரியும்? இத்தாலியில் பிறந்து இந்தியாவில் மருமகளான சோனியா குறித்து என்ன தெரியும்? அல்லது மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் எனது எண்ணங்கள், வாழ்க்கைபோராட்டம் எதாவது தெரியுமா? நான் பட்டினி கிடப்பது கூட தெரியாத ஒரு பிரதமர் எனக்கு தேவையா? 
இந்த நாட்டில் எந்த பொருளையும் நான் வரி செலுத்தாமல் வாங்க முடியாது. அப்படி வரி செலுத்தும் எனக்கு போலி ஓட்டுரிமை அல்லாமல் வேறு என்ன உரிமை இருக்கிறது.

என் ஊராட்சி மன்ற உறுப்பினரை என்னால் கண்காணிக்க முடியும், அவரிடம் எனது குறைகளை சொல்ல முடியும். என்னையும் அவரால் நேரடியாக பார்க்க முடியும். ஆனால் அவரே அதிகாரம் அற்றவராக இருந்தால் என்ன செய்வது?

போதிய கண்காணிப்பு இல்லாமல் மக்களாட்சியை செயல்படுத்தியது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். 

இன்று சனநாயகத்தின் நான்கு தூண்களும் யார் கையில் உள்ளது? மக்கள் கையிலா? மக்கள் கண்காணிப்பிலா? எல்லாம் முன்னரே குறிப்பிட்ட அந்த ஒரு கோடி பேர் கையில் உள்ளது. அப்படியானால் சனநாயகத்தின் மொத்த உருவம் இவர்கள் தானே. மக்கள் வெறும் வாக்கு இயந்திரங்கள் மட்டும் தானே. இதை இயக்குவது கூட அவர்களாக இருக்கும்போது இந்த சனநாயகம் எப்படி சுதந்திரமாகும்?

99 கோடி அடிமைகள் கொண்ட நாடு தான் இந்தியா. 1 கோடி பேரின் அடக்குமுறையில் இருந்து மீண்டு வர ஏன் 99 கோடி மக்கள் பயப்பட வேண்டும்? ஏன் இதற்காக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் கூடாது?

எனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் அதிகாரத்தை நான் எப்படி கண்காணிக்க முடியும்?

உதாரணத்துக்கு : 
ஈழப்போருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? ஐ.நாவில் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்ககூடாது என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? 99 கோடி இந்தியர்களா? அல்லது 1 கோடி இந்தியார்களா? 

எனது ஒப்புதலாக எல்லாவற்றையும் இவர்களே செய்கிறார்கள் என்றால் எனக்கு என்ன விலை இருக்கிறது இந்த நாட்டில்?

என்னை கொண்டே என் தாயை கொலை செய்ய சொல்லும் இந்தியாவின் இந்த குரூரத்துக்கு எப்போது முற்றுபுள்ளி வைப்பது?

நான் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான் சட்டங்களையும் மசோதாக்களையும் வகுக்கிறார்கள் என்று வாதிட வருபவர்களிடம் ஒரே ஒரு கேள்வி

இந்தியாவில் உள்ள 802 எம்பி களை எடுத்துக்கொள்ளுங்கள். எதாவது ஒரு எம்பியிடம் கடந்த கூட்டுத்தொடரில் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றினார்கள்? நீங்கள் எதற்கு வாக்களித்தீர்கள்? என்ன கருத்தை பதிவு செய்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள்.  தெளிவான பதிலை சொல்லும் ஒரு எம்.பி இருந்தால் இந்த நாடாளுமன்றத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.

எம்பிக்கும் மசோதா என்ன என்று தெரியாது. எம்பியை தேர்ந்தெடுத்தவனுக்கும் தெரியாது. அப்புறம் எதற்கு இந்த இந்தியா?

இந்திய ஆட்சி அதிகாரத்தை புரட்டிபோட வேண்டும். தலைகிழாக மாற்ற வேண்டும். உச்ச அதிகாரம் மக்கள் கையில் கொடுக்கப்பட வேண்டும். 

1 கோடி பேர் கையில் உள்ள ஆட்சி அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்து 100 கோடி பேருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். 

அதற்கு என்ன வழி? சேர்ந்து யோசிப்போம்

Jan 8, 2011

அடிமைத்தனம் தான் இந்தியாவின் இறையாண்மையா?

இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை காப்பி குடிப்பது முதற்கொண்டு இரவு தூங்கி அடுத்தநாள் விழிக்கும் வரை சுரண்டப்படுகிறேன். 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அடிமை வம்சம் தமிழனாக தான் இருக்க முடியும்.

இந்தியா என்ற நாட்டுக்கு அடிமையானாலும் பரவாயில்லை என பல்வேறு இன கலாச்சார மக்கள் தலைவணங்கினார்கள். எதற்காக? சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் சுயநலனுகளுக்காகவா? அம்பேத்கார் என்ற மனிதரின் அரசியல் சாசனத்துக்காக தான். 

ஆனால் இன்று அந்த அரசியல் சாசனம் தான் பின்பற்றப்படுகிறதா? இல்லை அரசியல் கட்சிகளின் சாசனம் பின்பற்றப்படுகிறதா? 

இந்தியாவின் முதல் குடிமகன்(சனாதிபதி) எப்படி ஒரு தலையாட்டு பொம்மையாக இருக்கிறாரோ அதே போலதான் அத்தனை குடிமகக்களும் இருக்கிறார்கள்.

நானும் என் அடுத்தடுத்த தலைமுறையும் தொடர்ந்து அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பது தான் இந்த இந்தியாவின் இறையாண்மையா?

இதுல எதபத்தி வேணும்னாலும் பேசு என் இந்தியாவை பற்றி பேசினா அழுதுருவேனு ஒரு கூட்டம் வேர.

இந்தியா இந்தியா எனும் அறிவிலிகளே அப்படி என்ன உங்கள் இந்தியாவில் இப்போது உள்ளது. பழம் பெருமையை விட்டு நடப்பு உலகை பேசுங்கள்.

உலகில் ரத்தவெறி கொண்ட நாற்றம் பிடித்த நாடாகதானே இந்தியா இருக்கிறது.

இறையாண்மை என்ற ஒற்றை சொல்லில் அடிமையாக இரு என்றால் அப்படி ஒரு நாடே எனக்கு தேவை இல்லை.

என் உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பாவது இருக்க வேண்டும். அது இல்லாதபோது இந்த நாட்டிற்கு நான் மட்டும் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்.

ஓட்டுபோட மட்டும் தான் மக்கள். மசோத சட்டம் இதெல்லாம் அவர்கள் தலையெழுத்து என்றால் தூக்கி எரியுங்கள் உங்கள் குப்பை இந்தியாவை.

ஒரு பண்டிட் குடும்பத்துக்காக 60 ஆண்டுகளாகியும் நான் இன்னும் வருமைகோட்டுக்கு கீழே தான் இருக்க வேண்டுமா?

குடியேற்ற நாடு காசுமீருக்காக மூன்றில் 2 பங்கு நிதியை செலவு செய்யும் இந்தியா ஏன் சொந்த குடிமக்களின் பசிக்கு சோறுபோட கூட மறுக்கிறது.

இதே நிலை நீடித்தால் தமிழ்நாடும் ஒரு குடியேற்ற நாடு தான் என்ற உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டி இருக்கும்.

புரியாதவர்கள் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனம் 370 பிரிவை படித்து தெளிந்துகொள்ளுங்கள்

சுயராசியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் தேசத்தியாகி. ஆனால் அதே முழுக்கத்தை இன்று நான் பேசினால் தேசதுரோகி. அப்படி என்னட உங்க மண்ணாங்கட்டி இறையாண்மை கொள்கை.

அரசியல் தூய்மை, அதிகார நேர்மை, ஆட்சியில் சமநிலை அப்படி ஒரு இந்தியாவை காட்டுங்கள். நான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படுகிறேன். அதை விட்டுவிட்டு நாங்க இப்படி தான் ரத்த வெறிபிடித்து அலைவோம். அதற்கு நீ அடிபணிந்தேயாகவேண்டும் என்றால் அதற்கு சாவு மேல்.

இந்தியா என்றால் இறையாண்மை மிக்க நாடு என்றுதானே மதிப்பளித்தோம். ஆனால் இன்று என்ன இறையாண்மை இந்தியாவில் உள்ளது.

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்ககூடாது, இந்திய போர்குற்றங்களை விசாரிக்ககூடாது, குவோட்ரோசியை விசாரிக்ககூடாது, அலைகற்றை ஊழலில் சனியனின் தங்கைகளை விசாரிக்க கூடாது. ஒரு பண்டிட் குடும்பம் காசுமீரில் நடத்தும் அட்டூழியங்களை விசாரிக்கக்கூடாது. இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவனை மட்டும் தேசபாதுகாப்பு சட்டத்தில் விசாரிக்க வேண்டும். இதுதான் உங்கள் இறையாண்மை கொள்கையா?

முதலில் இந்த 60 ஆண்டு காலங்களாக நாடாளுமன்றத்தில் முறைகேடாக நிறைவேற்றப்பட்ட அத்தனை மசோதாக்களையும் ரத்து செய்யுங்கள். அத்தனை வெளியுறவு கொள்கைகளையும் அடியோடு நீக்குங்கள். மக்களுக்கு தெரியாமல் இயற்றப்பட்ட அத்தனை அரசியல் சட்டங்களையும் கிழித்து எரியுங்கள். நேர்மையான புதிய சட்டங்களை இயற்றுங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள் அதற்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அது முடியாது என்றால் எனது சுயராசியத்தை அமைக்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் அமைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஊழல் இந்தியாவை இன்னும் பொத்தி வைத்து பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.

அடிமை தமிழனே(இந்தியனே) இன்னும் எத்தனை சந்ததிகள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது உன் கனவு?

Popular Posts