Dec 7, 2011

திரு.வைகோவை சந்திக்கப்போகிறேன்


முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சில கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறேன்.

முல்லைபெரியாறு பிரச்சனைக்கான தீர்வை எளிமையாக சுருக்கமாக ஒரு பக்க கடிதமாக தயார் படுத்தியுள்ளேன்.

ஒரு கேரள தமிழனின் எதார்த்த கோரிக்கை என்ற தலைப்பில் இந்த கடிதத்தை தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ளேன். 


முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு  முழுமையான ஆறுதலை தரும்.  

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

திரு. வைகோ அவர்களே, திரு.நெடுமாறன் அவர்களே, திரு கொளத்தூர் மணி அவர்களே இந்த கடிதத்திற்கு உங்களிடம் இருந்து ஆறுதலான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் அயல்மாநில உறவாய்
ஒரு கேரள தமிழன்.

7 comments:

 1. watch tamil nadu PWD engineers association "Mullaiperiyar Real story" on youtube. Then u will understand the malabaris crucial mind.

  ReplyDelete
 2. திரு. பெயரிலி

  நீங்கள் குறிப்பிடும் வீடியோவை பார்த்துவிட்டேன். அதை கேரள மாநிலம் பாலக்காடு பத்திரிக்கையாளர்கள், கோவை பத்திரிக்கையாளர்கள், முல்லைபெரியாறு பாதுகாப்பு கேரள போராட்டக்குழுவின் உண்ணாவிரதபந்தல் ஆகியவற்றில் லேப்டாப்பில் போட்டு காண்பித்தேன்.

  மேலும் வீடியோவில் உள்ள கருத்துக்களுக்கான மாற்று கருத்துக்களை விவாதிக்க வீடியோவில் உள்ள பொறியாளரை தொடர்பு கொண்ட போது பதில் இல்லை.

  ReplyDelete
 3. ok i read your previous article also about ur personal visit to that dam.
  do this job only a open discussion can help all
  for which our leaders not ready.

  pls read my blog also, n give your comments
  Regards
  vinoth
  mydreamonhome.blogspot.com

  ReplyDelete
 4. http://www.change.org/petitions/retain-mullai-periyaru-dam-and-save-millions-of-farmers-and-wildlife

  mydreamonhome.blogspot.com

  ReplyDelete
 5. Hi i am JBD From JBD

  Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


  Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

  ReplyDelete
 6. // அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. //தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?// 104 அடி க்கு மேல் நீர் தேங்கினால் தான், தமிழகத்திற்கு தண்ணீர் வரும் என்று கேள்வி பட்டேன்.. பயன்பாட்டை குறைத்து விட்டால் தண்ணீர் எப்படி கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு...

  ReplyDelete
 7. உங்களைப் போன்றவர்கள் தான் தமிழினத்தின் சாபக்கேடு.மலையாளிகளின் இரட்டைவேடம் உங்களைப்போன்ற ஒத்தூதிகளுக்குத் தெரியவாய்ப்பில்லை.300 அடி பள்ளத்தில் புதிய அணைகட்டி எப்படித் தண்ணீர் கொடுக்க முடியும். முல்லைப்பெரியாரின் மொத்தக்கொள்ளளவே 17.5 டி.எம்.சி தான்.அணை உடைந்தாலும் 70.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்குத்தான் தண்ணீர் செல்லும் தவிர எந்த மக்களுக்கும் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை என கேரள மாநில A.G யே கூறியிருக்கிறார்.கேரள அரசியல் கட்சிகளுக்கு அரசியல் செய்ய முல்லைப்பெரியார் எப்போதுமே வேண்டும்.மக்களைப் பீதியில் ஆழ்த்தி இருமாநில மக்களிடமும் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியவை கேரள அரசியல் கட்சிகளே.இந்த மாதிரி எழுதுவதற்கு கேரள அரசியல்வாதிகள் எவ்வளவு பணம் தந்தார்கள். எட்டப்பனும்,வீரபாண்டிய கட்டபொம்மனும் தமிழர்கள் தான்................

  ReplyDelete

Popular Posts