Jan 12, 2011

ஈழம் ; வைகோ, சீமான் முடிவு சரியானதே

ஈழம், முல்லைபெரியாறு, சேதுசமுத்திர திட்டம், உட்பட பல விடயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரே தமிழக தலைவர் வைகோ. (எனக்கு தெரிந்தவரை) 

அரசியலில் வைகோ போன்ற நபர்கள் தேவை என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்திய நாடாளுமன்றம், சட்டசபைகளில் வைகோ இடம்பெறாதது தமிழர்களுக்கு பின்னடைவே.

வைகோவின் அரசியல் பயணம் தடுமாறியது காலத்தின் நெறுக்கடியாகவே நான் பார்க்கிறேன். வேர்பிடித்துவிட்ட இரு பெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்துவது சாதரனம் அல்ல. சிலநேரங்களில் ஏதோ ஒரு பக்கம் சாயாவிட்டால் கட்சி இழப்புக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். 

தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.

கருணாநிதியை விட செயலலிதா ஈழத்திற்கு எதிரானவர் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். 

கருணாநிதி எதிர்கட்சியாக இருந்திருந்தால் ஈழப்போரின் போது தமிழகத்தில் மிகப்பெரிய பிராளயமே ஏற்பட்டிருக்கும். ஒருவேளை போரின் வெற்றி புலிகள் பக்கம் கூட திரும்பியிருக்கலாம். ஆனால் அதைவிட அதிகாரம் கொண்ட ஆளும்கட்சியாக இருந்து கருணாநிதி நடத்திய நாடகத்தை எப்படி மன்னிப்பது?

தமிழக மக்களிடம் ஈழம் ஒரு பிரச்சனையே அல்ல என்று அடித்து சொன்ன துணைமுதல்வர் சிடாலின் அதை நீருபித்தும் காட்டிவிட்டார். காங்கிரசுக்கு இதைவிட மிகப்பெரிய தைரியம் வேறு என்ன இருக்க முடியும்?

இந்த தேர்தலில் திமுக-காங்கிரசு கூட்டணி வெற்றிபெறும் என்றால் தமிழகத்தில் ஈழம் மீண்டும் குழிதோண்டி புதைக்கப்படும்.

ஈழம் தமிழர்களின் உணர்வு என்பதை நிரூபிக்க திமுக-காங்கிரசு கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஈழப்போரை நடத்திய காங்கிரசை இந்த தேர்தலோடு தமிழகத்தில் இருந்தே துடைத்தெரிய வேண்டும். அது தான் ஈழம் அமைப்பதற்கான மற்றொரு படி.

செயலலிதா மிகவும் ஆபத்தானவர், ஈழத்துக்கு எதிரானவர், எந்த நேரத்திலும் காங்கிரசோடு கைகோர்த்துவிடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்காக ஈழ ஆதரவு கட்சிகள் தனி அணியில் நின்றால் அதைவிட ஈழத்துக்கான பின்னடைவு வேறு ஏதும் இருக்க முடியாது.

போதிய அரசியல் அறிவோ, ஈழம் குறித்த புரிதல்களோ இல்லாத தமிழகத்தில் நிச்சயமாக ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

1 comment:

  1. வரும் தேர்தலில் தி.மு.க தோற்கடிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான காரணங்கள் உள்ளூரில் உண்டே தவிர ஈழம் அல்ல.

    இப்போது கருணாநிதி சொல்லாவிட்டாலும் தமிழன் சோற்றாலடித்த பிண்டமாகத்தான் இருக்கிறான்.

    சிறுபாண்மையான தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக உள்ளத்திலே மருகிக் கொண்டும், தூக்க மாத்திரை உதவியுடன் தூங்கிக் கொண்டுமே இருக்கிறார்கள்.

    ReplyDelete

Popular Posts