நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவ கொள்ளை, நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் நீதித்துறை ஊழல், இறையாண்மை என்ற பெயரில் அடிமைத்தனம் இந்த மூன்றுக்கும் புரையோடிய சாக்கடை வாசம் அல்லாமல் வேறு என்ன இருக்கிறது?
நாட்டின் உச்ச அதிகாரமாகமும் நம்பிக்கையும் தருவது 2 கட்டமைப்புகள் 1. சனாதிபதி, 2 உச்சநீதிமன்றம்.
ஆனால் இன்று இந்த இரண்டுமே அரசியல் சாக்கடையில் சுற்றும் மூச்செலிகள் ஆகிவிட்டன.
சனாதிபதியை யார் தேர்ந்தெடுத்தது? சனாதிபதி யாரின் சிபாரிசில் வந்தவர்? சனாதிபதி யாருக்கு கூழைகும்பிடு போட்டவர்? காங்கிரசு என்ற கட்சிதான் இந்தியாவா? இந்தியர்களின் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
பிரதீபா பட்டீல் யார்? இந்தியாவின் 100 கோடி மக்கள் தேர்ந்தெடுத்த சனாதிபதியா? அல்லது காங்கிரசு தேர்ந்தெடுத்த சனாதிபதியா?
இந்திய மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவர் இந்தியாவின் சனாதிபதி. காங்கிரசு தேர்ந்தெடுத்தது என்றால் அவர் காங்கிரசின் சனாதிபதி தானே.
இன்று இந்தியாவின் மாநில கவர்னர்கள் எல்லாம் யார்? முன்னாள் காங்கிரசு தலைவர்கள், அல்லது அடுத்து காங்கிரசு தலைவர்களாகுபவர்கள். காங்கிரசுக்கு கூழைகும்பிடுபோட்டு வந்தவரை எல்லாம் கவர்னர் என்றால் அந்த பதவிக்கு என்ன விலையும் மரியாதையும் தருவது?
சி.பி.ஐ, தகவல் உரிமை ஆணையம், மனித உரிமை ஆணையம், லஞ்ச ஒழிப்பு ஆணையம் இப்படி எந்த ஆணையத்தை எடுத்தாலும் காங்கிரசு அபிமானிகள். இந்த நாட்டில் என்ன சனநாயகம் இருக்கிறது?
இன்று பல ஆணையங்களில், பல ஆட்சிபணி அதிகாரிகளில் காங்கிரசுக்காரர்கள் தான் கொட்டம் அடிக்கின்றனர். அதே பாணியில் தான் நாட்டில் உள்ள பெருபான்மை நீதிமன்றங்களில் அரசியல் அபிமானிகள் நீதிபதிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் எழுதும் தீர்ப்பில் எல்லாம் எப்படி நீதியை எதிர்பார்ப்பது?
சனாதிபதி, சபாநாயகர், கவர்னர், நீதிபதிகள், காவல்துறை, ஆணையங்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லாம் எந்த அரசியல் கட்சியையும் சாராத நடுநிலையாளர்களாக இருக்க வேண்டாமா? அப்போது தானே நியாமன சனநாயாகம் இருக்கும்.
அரசியல் கட்சிகளுக்கு கூழைகும்பிடு போடும் சனாதிபதி, கவர்னர்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை ஆய்வாளர், அரசுஊழியர்கள் கூண்டோடு அகற்றப்பட வேண்டும்.
அதற்கு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். வழி இருக்கிறது அம்பேத்காரின் சட்ட புத்தகத்தில்
அதை செயல்படுத்த தேவை 100 நல்லெண்ணவாதிகள், 5 மாவட்ட ஆட்சியர்கள், 2 வழக்கறிஞர்கள். தேவைப்பட்டால் ஒரு பிரபலம்.
சனநாயகத்தின் மீது உண்மையான மதிப்பை வைத்திருப்பவர்கள் என்னோடு தோள்கோர்க்கலாம்.
சேர்ந்து சிந்திப்போம்.
தொடரும்.
சொல்லுங்க
ReplyDelete