Oct 17, 2014

செயலலிதா சாமீனில் விடுதலை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதாவை உச்சநீதிமன்றம் சாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

மேல் முறையீட்டு விசாரனையை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை செயலலிதாவை விடுதலை செய்வதோடு தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகூர், ஏ.கே.சிக்ரி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து செயலலிதா உடனடியாக விடுதலையாகிறார். 

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க தடை இல்லை என்பது கூடுதல் செய்தி.

Oct 16, 2014

காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க...

இந்த நாட்டில் அத்தனை துறைகளையும் சீர்திருத்தப்படுகின்றன. நீதித்துறையும், காவல்துறையும் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் எப்படி இருந்ததோ, அதைவிட மோசமாக இருக்கின்றன.

இலக்கு வைத்து வழக்கு பதிவு செய்யும் கொடுமை உலகில் எங்காவது இருக்கிறதா? தமிழ்நாட்டில்  மட்டும் தான் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. 

காவல்துறை இல்லை என்றால் குற்றவாளிகள் பெருகி விடுவார்கள் என்பது தான் பலரின் வாதம். ஆனால் இந்த காவல் துறையால் தான் குற்றவாளிகள் பெருகிவருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

மதுபான கடைக்கு இலக்கு நிர்ணயித்தால் எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அதை விட கொடுமையானாது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய இலக்கு நிர்ணயிப்பது. இந்த ஒரு இலக்கால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். 

போலீசார் கையில் எதற்கு லத்தி என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அத்தனை உதவி காவல் ஆய்வாளர் கையிலும் துப்பாக்கியை கொடுத்திருக்கிறார்கள். 

தற்காப்புக்கு தான் துப்பாக்கி என்றால், பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு துப்பாக்கியுடன் செல்லவேண்டும். குறைந்தபட்சம் சமபல ஆயுதமாவது கையில் வேண்டாமா?

ராமநாதபுரம் சம்பவத்தில் பலரும் குற்றவாளி காவல் ஆய்வாளர் காளிதாசுக்கு எதிராக தான் போராடுகிறார்கள். ஆனால் குற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காவலர்கள், காளிதாசை காப்பாற்ற முயன்ற ஆய்வாளர், காவல் கண்காணிப்பாளர், தினமலர் பத்திரிக்கை போன்றவற்றிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய யாரும் குரல் கொடுப்பது இல்லை.

காளிதாசு என்ற உதவி ஆய்வாளர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையே குறை சொல்லலாமா என பலர் கேட்கலாம். விசாரனை கைதியை சுட்டவுடன் காளிதாசு மீது வழக்கு பதிவு செய்து முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு ஒரு ராயல் சலியூட். ஆனால் என்ன செய்தார்கள்?   

காளிதாசு கொலையாளி என்றால் காளிதாசின் குற்றத்தை மறைக்க காவல்துறையும், தினமலர் பத்திரிக்கையும் முயன்று உள்ளது. இவர்களை எல்லாம் யார் தண்டிப்பது?

 இந்த நாட்டில் ஒரு மாநில முதல் அமைச்சரை நிமிட பொழுதில் சிறையில் அடைக்க முடியும். ஆனால் கொலை குற்றம் செய்த காவல் ஆய்வாளர் மீது குறைந்த பட்சம் வழக்கு கூட பதிவு செய்ய முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாம். வாழ்க இந்திய சனநாயகம், வளர்க்க இந்தியாவின் சட்ட தீவீரவாதம்.

பொதுமக்களுக்கு ஒரே ஒரு அலோசனை : தயவு செய்து காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க, அப்படியே போக வேண்டிய நிலை வந்தாலும் சுயமரியாதையை கழட்டி வைத்துவிட்டு போங்க...

Oct 14, 2014

வலைப்பதிவில் அதிமுக - திமுக விளையாட்டு

மாவட்டம் தோறும் இணையதளங்கள் துவங்கப்படும் என்று திமுக அறிவித்தது. வலைதளங்களில் திமுக குறித்த விமர்சனங்களை சமாளிக்கவே இந்த ஏற்பாடு. திமுக குறித்த கொள்கைகளை பரப்புவார்கள் என நினைத்தால் அது தவறு. எங்கு, யார் திமுகவுக்கு எதிராக பதிவு எழுதினாலும் அனானியாக பின்னுட்டம் இடுவதையே இவர்கள் செய்கிறார்கள். இதனால் எப்படி திமுக மீது நன்மதிப்பு வரும் என்று தெரியவில்லை.

ஈழப்போரின் இறுதி கட்டத்தில் திமுகவின் செயல்பாடு தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டியது. அந்த வெறுப்பின் காரணமாக திமுகவுக்கு எதிராக உலகம் முழுவதும் பல வலைப்பதிவுகள் வந்தன. இதனால் வலைப்பதிவில் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இன்று வரை விரவி கிடக்கின்றன. இதை எதிர்கொள்ளத் தான் திமுக தற்போது மாவட்டம் தோறும் வலைதளங்களை துவங்கி உள்ளது. இது நல்ல முயற்சி தான். நேரடியாக திமுகவின் விமர்சனங்களை எதிர்கொண்டால் வரவேற்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, அனானிகளாக நாகரீகமற்ற பின்னூட்டங்களை பரப்புவதால் என்ன பயன்? இதை திமுக ஆதரவாளர்கள் புறிந்து கொள்வார்களா? 

திமுக இப்படி இருக்க அதிமுகவோ அதைவிட மோசம். வலைதளமாவது எலிவலையாவது, அதிமுகவுக்கு எதிராக எவன் எழுதினாலும் அவனை தூக்கி குண்டர் சட்டதில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த குண்டர் சட்டத்தின் காரணமாக பல வலைப்பதிவர்கள் காணாமல் போனார்கள். பலரும் அடக்கி வாசிக்கிறார்கள். பலர் நமக்கு ஏன் வம்பு என கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என எழுதத் துவங்கி விட்டார்கள்.

இன்று செயலலிதா சிறையில் அடைபட்டதும். அவருக்கு ஆதரவாக பலர் குரல்கொடுக்க முடியாமல் போனதற்கு வலைப்பதிவை குண்டர் சட்டத்தில் கொண்டு வந்ததும் ஒரு காரணம். 

இந்த இரு கட்சிகளின் வருகையால் வலைப்பதிவில் அனானிகளின் சித்து விளையாட்டுகள் தான் அதிகமாகி இருக்கிறது. மக்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள அப்பழுக்கற்ற சிறந்த ஊடகம் வலைப்பதிவு. அதை இந்த இரு கட்சியனரும் புறிந்து கொள்ள வேண்டும். 

பத்திரிக்கை, தொலைக்காட்சி போல வலைப்பதிவிலும் அரசியல் அநாகரீகத்தை திணிக்க கூடாது. இது பொதுமக்களின் ஊடகம். இங்கு தான் புதிய சிந்தனைகள் பரவலாக ஊற்றெடுக்கும். இதை சனநாயக அரசாங்கங்கள் உயரிய வரமாக தான் நினைக்க வேண்டும். 

Oct 13, 2014

மனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்

தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால் செயலலிதா விசயத்தில் பேச்சும் காணோம்! மூச்சும் காணோம்!!
செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீரல் நடந்துள்ளது. அதை கேள்வி கேட்க எந்த அமைப்பும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கீழ்நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தால் உடனே அவர் தண்டிக்கப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீரல். ஒருவரை தண்டித்து விட்டு மேல்முறையீட்டு வாய்ப்பு தருவது எந்தவிதத்தில் நீதியாகும்?. 

மனித உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. ஒரு மாநில முதல் அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரன குடிமகனின் நிலை? 

மனித உரிமை கழகங்கள் நிதிவாங்கும் அமைப்புகளாக மட்டும் செயல்படலாமா? மனித உரிமையை கழகம் என்ற பெயரில் நிதிவாங்குவக்கி ஏப்பம் விடுவது தான் உச்சகட்ட மனிதஉரிமை மீரல். உலகை ஏமாற்றும் மனித உரிமை கழங்களை இழுத்து மூடவேண்டும். இவர்களால் யாருக்காவது துளியேனும் பயன் உள்ளதா? 

ஒருவரை குற்றவாளி என்று தண்டித்து விட்டு, பின்னர் எதற்கு மேல் முறையீடு? - இந்த கேள்விக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

Oct 12, 2014

திமுகவின் அசைக்கமுடியாத அடித்தளம்.

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி உண்டு. தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பாரதிய சனதா கட்சி தலைகால் புறியாமல் ஆடிக்கொண்டுள்ளது. அடுத்த முதல் அமைச்சர் சுப்பிரமணிய சாமி, தமிழிசை சவுந்திரராசன், ராதாகிருசுணன், ரசினி என பல கோணங்களில் பரபரப்பாக நடிக்கின்றனர்.

அதிமுகவும் திமுகவும் முடிந்து விட்டன. தமிழக மக்கள் இனி திராவிட கட்சிகளை நம்ப மாட்டார்கள். தேசிய கட்சியின் ஆட்சிக்காக தமிழ்நாடு ஏங்குகிறது. அப்பப்பா என்ன ஆழமான கனவுகள்.

தனித்து போட்டியிட்டால் 1 சதவீத வாக்குகளை கூட வாங்க முடியாத பாரதிய சனதா கட்சி இப்படி கனவு காணலாமா?

மதிமுக, தேமுதிக, ஆதரவில் கன்யாகுமரியை பிடித்த பாசக, இப்போது தனித்து போட்டியிட்டு தமிழகத்தையே பிடிக்க கனவு காண்கிறது.

இதில் உச்ச கட்ட சிரிப்பு திமுக முடிந்துவிட்டது என்று சொல்வது தான்.

திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் 1 கோடி திமுக தொண்டர்கள் அசைக்கமுடியாத அடித்தளமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

2014 நாடாளுமன்ற தேர்தல் திமுக அசுர பலத்தில் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. ஆனாலும் பல உதிரி கட்சிகள், அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. அரசின் நலத்திட்டங்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலை என பலதரப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைத்தது. 70 சதவீதம் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இந்த அடிப்படையில் அதிமுக 44.3 சதவீதம் வாக்குகளை பெற்றது.

மதிமுக, தேமுதிக, பாமக, கொமதேக, புதியநீதிக்கட்சி, என 7 கட்சிகளின் ஆதரவுடன் பாசக கூட்டணி போட்டியிட்டது. மத்தியில் காங்கிரசுக்கு மாற்று அமைய வேண்டும் என்பதற்காக பல நடுநிலை வாக்காளர்களும் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். பொதுமக்கள் 20% பேர் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். இதன் அடிப்படையில் பாசக அணி 18.5 சதவீதம் வாக்குகளை பெற்றது.

திமுக விசி, மமக கட்சிகள் கூட்டணியிட்டு போட்டி இட்டன. இதில் விசி, மமகவின் வாக்கு வங்கிகள் 1.5 சதவீதம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்களை பொருத்தவரை யாரும் திமுகவுக்கு வாக்கு அளித்திருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை பேரும் திமுக மீது வெறுப்பில் இருந்தார்கள். அதிக பட்சமாக 5 சதவீத பொதுமக்கள் வாக்கு திமுகவுக்கு கிடைத்திருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 26.8%. இதில் விசி, மமக, பொதுமக்கள் வாக்குகளை கழித்தால் திமுக மட்டும் 20 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும். இந்த 20% வாக்குகள் முழுக்க முழுக்க திமுக தொண்டர்களுடையது. 

திமுக அணி மூன்றாம் இடம்தான் பெரும் என்ற பல கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது திமுகவின் அசைக்கமுடியாத 20% தொண்டர்  படை தான். 

அதிமுகவின் 20% தொண்டர்களுக்கு இணையாக திமுகவும் 20% தொண்டர்களை கொண்டுள்ளது. பொதுமக்கள் வாக்கு, தேர்தல் கூட்டணி என்பவை தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியவை. இன்று பாசக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா?

7 கட்சி கூட்டணி, பொதுமக்கள் வாக்கு, இத்தனையும் சேர்த்தே பாசக அணியால் திமுகவின் 20% சதவீதத்தை நெறுங்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறார்களாம். 

அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்ற அதே நேரம், திமுக 30 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. பாசக அணியால் 8 இடங்களில் தான் திமுக அணியை முந்த முடிந்திருக்கிறது.

செயலலிதா உள்ளவரை அதிமுக அசுர பலத்தில் இருக்கும், கருணாநிதிக்கு பின்னும் திமுக அசுர பலத்தில் தான் இருக்கும். இதை பாசகவும் காங்கிரசும் கவனிக்க தவற வேண்டாம். அணிகள், தலைமைகள் மாறலாம், ஆனால் அதிமுகவையும் திமுகவும் இன்னும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது அசுர பலத்துடன் இருக்கும். அதற்கு பின்னர் பாசக, காங்கிரசு என்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தால் ஆட்சியை பற்றி யோசிக்கட்டும். 

எம்.சி.ஆருக்கு பின் அதிமுக முடிந்ததுவிடும் என்று கனவு கண்டதை போல, கருணாநிக்கு பின் திமுக முடிந்து விடும் என கனவு காண்பது அடி முட்டாள் தனம்.   

திராவிட கட்சிகளை வீழ்த்துவோம் என்ற தேசிய கட்சிகளின் கனவு ஒருகாலமும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் தந்தை பெரியாரை விழ்த்திவிட முடியாது. 

Oct 10, 2014

குன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி

செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பில் கூறியுள்ளார். 

நீதிமன்றம் என்ன இலாப நட்டம் பார்க்கும் வியாபார தளமா? சட்டம் தான் அதன் மூலதனமா? அதை வைத்து 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட குன்கா முயன்றிருக்கிறாரா?

ஒரு வேளை செயலலிதாவை நிரபராதி என கருதி இருந்தால் இந்த 6 கோடி ரூபாயை யாரிடம் வசூலித்து இருப்பார்? செயலலிதாவை குற்றவாளி என்று தண்டித்தால் நீதிமன்றத்திற்கு 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நிரபராதி என விடுதலை செய்தால் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அப்படியானால் நீதிபதி இலாபத்தை பார்ப்பாரா நட்டத்தை  பார்ப்பாரா? 

நீதிதேவதையின் சின்னமான தராசை குன்கா தவறாக புறிந்துகொண்டாரோ? 

நல்ல நீதிபதி. வளர்க்க நீதித்துறையின் மாண்பு.  

எந்த அமைப்பும் மக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகும்போது தான் அதன் தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மேலும் அந்த அமைப்பை தூய்மைப்படுத்த முடியும். நீதிமன்றங்களும் அப்படி தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்திலேயே பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டோம். ஆனால் நீதிமன்றங்கள் மட்டும் 3 கோடி வழக்குகளை தேக்கிவைத்துக்கொண்டு பெருமை படுகின்றன.

எனக்கு தெரிந்து தீபாவளிக்கு பள்ளிகளுக்கு 1 நாள் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை. ஆனால் நீதிமன்றத்திற்கு 10 நாள் விடுமுறை. என்னத்த வெட்டி முறிச்சிட்டாங்கனு இவங்களுக்கு இத்தனை நாள் விடுமுறை?

இந்த அநியாயத்தை எல்லாம் கேட்க நாட்டில் ஆளே இல்லையா?

செயலலிதா 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்று வாய்கிழிய பேசுகிறோம். இந்த 18 வருடத்தில் நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என கணக்கிட்டு சொல்ல முடியுமா? அப்படி பார்த்தால் செயலலிதாவை விட நீதிமன்றம் தான் அதிக வாய்தாக்கள் வாங்கி இருக்கும்.

நீதிமன்றத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நீதிபதியை பாராட்டி எழுதும் அதே நேரம், நீதிபதியின் தவறுகளையும் சுட்டிக்கட்டுங்கள்.  

Oct 9, 2014

ரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது

செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’’ என்று அடித்துக்கொள்கின்றனர்.

4 வருடம் சிறை, 6 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வளவு தான்! செயலலிதாவால் 10 வருடத்திற்கு திரும்பி வர முடியாது.

கருப்பு எம்.சி.ஆர் நாம் தான் அடுத்த முதல்வர் என விசயகாந்த் கனவு காண்கிறார்

எப்படியாவது 2016ல் ஆட்சியை பிடித்தால் போதும், மெரினாவில் இடம் பிடித்துவிடலாம் என திமுக கனவு காண்கிறது.

பாமக ராமதாசின் பயம் தான் ரொம்ப சிரிக்க வைக்கிறது. செயலலிதா தேர்தல் பரப்புரை செய்வதை தடுக்க வேண்டுமாம். 2004ல் செயலலிதா தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அனுதாப அலையிலேயே அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல 2016ல் செயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மக்கள் அனுதாபம் பெருகுமே என ராமதாசு பயப்படுகிறார். (தனித்தமிழ் கொள்கையில் உறுதியாக இருக்கும் ராமதாசு மீது எனக்கு தனி மரியாதை உண்டு)

இவர்கள் திண்ணையை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் பாசகவும், காங்கிரசும் எதற்காக இப்போது துள்ளுகின்றன.

ரசினிகாந்தை வைத்து தமிழக பாரதிய சனதா ஆட்சியை பிடிக்க கனவு கண்டால் அது கனவாகவே தான் இருக்கும். ரசினி மட்டுமல்ல செயலலிதாவே பாரதிய சனதாவில் சேர்ந்தாலும் பாசகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.
  
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சியின் ஆட்சியை கனவிலும் நினைக்காதீர்கள். அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் பெரியாரை வீழ்த்திவிட முடியாது.

செயலலிதாவை இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓரங்கட்டி விடலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் மனக்கணக்கு போடுவது தவறு.

உச்சநீதிமன்றமே தண்டித்தாலும், தமிழக சட்டசபைக்கு செயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

செயலலிதாவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதை விட, மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். 

வைகோ ஒரு தமிழரா?

திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிட இயக்கத்தின் கடைப்புலி என கலைஞர் கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர் வைகோ. ஈழத்தமிழர்களுக்கான வைகோவின் குரலை யாரும் சந்தேகிக்க முடியாது. தமிழக நலன்களின் வைகோவின் துணிச்சலான போராட்டங்களை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டிட முடியாது. வைகோவின் தமிழ் புலமையையும், ஈடுபாடும் உயரியவை. தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழர்களுக்கு ஒரு இன்னல் வந்தாலும் முதலில் குரல்கொடுப்பவர் வைகோ தான். 

ஆனால் செயலலிதா விசயத்தில் மட்டும் வைகோவின் அரசியல் நாகரீகம் சற்று தரம் தாழ்ந்ததோ என்று சந்தேகம் எழுகிறது.


செயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்ற வைகோ, அதேநேரம் தமிழக முதலமைச்சரை கைது செய்த முறையை கண்டித்திருக்க வேண்டும். செயலலிதாவும் ஒரு தமிழர் தான். செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவிரவாதத்தை வைகோ வேடிக்கை பார்ப்பது விசித்திரமாக உள்ளது. தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர் தனது அரசியல் எதிரிக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

அரசியல் எதிரி வேறு, தமிழர் நலன் வேறு. இதை வைகோ புறிந்துகொள்ள வேண்டும். 

தமிழர் நலனில் உண்மையில் அக்கறை உள்ளவர் என்றால் வைகோ உடனடியாக செயலலிதா மீது திணிக்கப்படும் சட்ட தீவிரவாத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக முதல் அமைச்சரை அவமதித்தது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதித்த செயல். இதற்கு வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.

கலைஞருக்கு பின்னர் செயலிதாவை எதிர்க்கும் திறன் வைகோவுக்கு தான் உள்ளது. அதனால் தான் வைகோவிடம் இந்த அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன்.

ம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்த கலைஞரின் அனுபவம் வைகோவிடம் தான் உள்ளது. அந்த அனுபவம் கலைஞருக்கு பின்னும் தமிழக அரசியல் களத்தில் தேவை. வைகோ அதை ஈடுசெய்வார் என நினைக்கிறேன்.

செயலலிதாவை அரசியல் எதிரியாகத்தான் வைகோ பார்க்க வேண்டுமே தவிர, மற்ற கட்சி தலைவர்களை போல பழி தீர்க்கும் எண்ணம் கூடாது. வைகோவின் அரசியல் நாகரீகத்தை மதிக்கும் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த பதிவு.

Oct 8, 2014

கர்நாடக நீதிமன்றத்தின் தீவிரவாதம்

செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தவருக்கு சாமீன் வழங்க கோரினால் நாங்கள் ஊழலுக்கு எதிராக உள்ளோம் என்று சுய தம்பட்டம் அடித்திருக்கிறார் நீதிபதி சந்திரசேகரா

சந்திரசேகரா போன்ற நீதிபதிகள் உண்மையில் ஊழலுக்கு எதிராக இருந்தால் தங்கள் சொத்துப்பட்டியலை முதலில் பொதுத்தளத்தில் வெளியிடட்டும். வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரரிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது தரட்டும். 

நீதிமன்றம் என்பது நீதியை நிலைநாட்டும் அமைப்புதானே தவிர, ஓய்வுக்கு பின்னர் பதவி கிடைக்க சால்ரா போடும் தளம் அல்ல. 

இரு கட்சியினர் தங்கள் வாதத்தை முன்வைக்கும்போது பிரதிவாதங்களை கேட்டு நீதியை வழங்குவது தான் ஒரு நீதிபதியின் வேலை. ஆனால் சந்திரசேகரா ஊழலை எதிர்க்கிறேன் என்று கூறி சாமீன் மறுத்திருக்கிறார். சாமீன் அடிப்படை உரிமை இல்லையாம். இது ஒன்றே போதாதா இவர் ஒரு அடி முட்டாள் என்று கூற. இவர் எந்த சட்டக் கல்லூரியில் படித்தார் என்று தெரியவில்லை.

சாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று சொல்பவர் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனம் பரிசீலிக்க வேண்டும். சாமீனின் அர்த்தம் தெரியாதவர் எல்லாம் நீதிபதி பதவியில் இருப்பது தான் காலத்தின் கொடுமை.

அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டார்கள் என்றால், நீதித்துறையில் முட்டாள்கள் பெருகிவிட்டார்கள்.

தண்டனை என்பது குற்றவாளி திருந்திவாழ கொடுக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால் குன்காவும், சந்திரசேகராவும் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவதற்காக செயலலிதாவை தண்டித்திருக்கிறார்கள்.  செயலலிதாவை தண்டித்தால் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவார்களா?

கிடைத்தவரை பிடித்து தண்டிப்பதால் மீதியுள்ளவர்கள் திருந்துவார்கள் என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதைத்தான் பெரும்பான்மையான இந்திய நீதிமன்றங்கள்  செய்கின்றன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பதை தடுக்க வேண்டும் என்றால் முதலில் நீதிபதிகள் தங்கள் சொத்துப்பட்டியலை காட்ட வேண்டும். - அதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை. 

ஒவ்வொரு வழக்கறிஞரும் கட்சிக்காரரிடம் பெரும் பணத்திற்கு உரிய ரசீது தரவேண்டும். - இதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அம்பானி முதல் டட்டா, பிர்லா, மல்லையா, இன்னும் எத்தனையோ பண முதலாளிகள் உள்ளார்கள். அவர்கள் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். - இதை செய்ய எந்த இந்திய நீதிமன்றத்திற்கும் திராணி இல்லை.

ஊழலை விட, தவறான தீர்ப்புகள் தான் மனித குலத்துக்கு எதிரானது. தவரான தீர்ப்புகள் கொடுத்த நீதிபதிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை ஏன்

  • 1. சொத்துக்கணக்கை காட்ட மாட்டார்கள், 
  • 2. வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரமாட்டார்கள், 
  • 3. தவறான தீர்ப்புகளுக்கு குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்க மாட்டார்கள், 
  • 4. பள்ளிக் குழந்தைகளை விட அதிக நாட்கள் விடுமுறை வேண்டும். 
  • 5. தீர்ப்பு எழுத எத்தனை வாய்தாக்கள் வேண்டுமானலும் வாங்கிக்கொள்வார்கள், 
  • 6. தினமும் 50 ஆயிரத்துக்கும் குறையாமல் சம்பளம் வேண்டும். 
  • 7. நீதிமன்றத்தை நாடுபவர்கள் இவர்களை பார்த்து கூழை கும்பிடு போட வேண்டும். 
  • 8. சட்டம் படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் ( 30 வயதுக்கு மேல் மருத்துவம், கலை, பொறியியல் என எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் சட்டம் படிக்க முடியாது.)


- ஊழலில் திளைப்பவர்களே ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களாம். 
வாழ்க இந்திய சனநாயகம்! 

வளர்க இந்திய நீதிபதிகளின் சட்ட தீவிரவாதம்!! 

பின்குறிப்பு:-
 செயலிதாவை எதிர்க்கிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சட்ட தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்காதீர்கள். நாளை நீங்களும் பாதிக்கப்படக்கூடும். அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டதை போல நீதித்துறையில் பதவி வெறியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

Oct 3, 2014

பழி தீர்த்த கர்நாடக நீதிபதிகள் ?

செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. 

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம் ஆனால் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பது நியாயம் தான். ஆனால் ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் செயல்படும் போது அதை சுட்டிக்காட்ட ஏன் பயப்பட வேண்டும்?

நீதிபதி குன்கா அப்பட்டமாக பழி தீர்த்திருக்கிறார். இதற்கு குன்கா விளக்கம் அளித்தாக வேண்டும். 

‘‘18 ஆண்டுகள் நீதிமன்றத்தை இழுத்தடித்தாய், அதற்காக நீதிமன்றம் என்றால் என்ன என்பதை காண்பிக்கிறேன்’’ என ‘‘இது தான்டா போலீசு’’ என்ற பானியில் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார். குன்காவுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றமும் செயல்படுவது தான் வேதனையாக இருக்கிறது.

நீதிபதி என்பவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் எதிரியாக செயல்படக்கூடாது. நீதிபதி குன்கா செயலலிதாவின் நேருக்கு நேர் எதிரியாக செயல்பட்டுள்ளார்.

செயலலிதாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். குற்றவாளியை விமர்சிக்க எந்த நீதிபதிக்கும் அதிகாரம் இல்லை. செயலலிதாவை விமர்சித்தன் மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியாகி இருக்கிறார் குன்கா.

ஒருவரை குற்றவாளி என நீதிபதி கருதினால் அதற்கான விளக்கத்தை குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளிக்க அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவகாசம் அளிக்காமல் நேரடியாக தண்டனையை அறிவித்திருக்கிறார். இதன் உள்நோக்கம் என்ன என்பதை குன்கா விளக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை சிறைப்படுத்த போகிறோம். ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறைபடுத்தப்போகிறோம் என்ற பகுத்தாயும் திறன் கூட இல்லாமல் ஒரு மரமண்டை போல செயல்பட்டிருக்கிறார் குன்கா.

தமிழக காவல் ஆணையரிடம் தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து கேட்காமல் தான்தோன்றித் தனமாக பழி தீர்த்திருக்கிறார் குன்கா.

குன்காவின் தவறுகளை மூடி மறைக்கும் விதமாக கர்நாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டிருக்கிறது. முதல் நாள் அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று கூறியிருக்கிறது. இது மிக மோசமான அநீதி. 

 சாமீனில் இரண்டு வகை உண்டு.

1. சாட்சிகளை கலைத்துவிடுவார், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பித்து விடுவார். இந்த காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யும் போது நீதிமன்றம் உரிய சாமீனை கோரி அவரை உடனடியாக விடுதலை செய்கிறது.

2. கிழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துவிட்டால் மேற்கொண்டு அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இல்லை. மேல்முறையீடு செய்யாமல் தலைமைறைவாகி விடுவார் என்பதற்காக தான் சாமீன் கோர வேண்டும். செயலலிதாவை பொறுத்தவரை மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். மட்டுமல்லாது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருப்பவர். இப்படிப்பட்டவர் தலைமறைவாக 100% வாய்ப்பே இல்லை. 

இப்படிப்பட்டவரை உடனடியாக சாமீனில் விடுதலை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தயங்கியதன் காரணம் என்ன? பழிவாக்கும் நடவடிக்கையா என்பதை விளக்க வேண்டும்.

முதல் நாள் அரசு தரப்பு வாதம் இல்லாமல் வழக்கு நடத்த முடியாது என்று கூறிய நீதிபதி, இரண்டாம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் ஏற்றதன் நோக்கம் என்ன? ஏன் செயலலிதா தரப்பு வாதத்தை 1 நிமிடம் கூட கேட்கவில்லை. நீதிபதி யாருக்கு பயந்தார்? தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொன்னதன் காரணம் என்ன? உரிய காரணம் சொல்லாமல் வழக்கை ஒத்திவைக்கும் நீதிபதியின் மனநிலை என்ன?

நீதிபதி என்பவர் நீதிக்கு தலைவணங்குபவராக இருக்க வேண்டும். காரணமே இல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்வது சரியா? இவருக்கு எல்லாம் நீதிபதி பதவி தேவையா?

நீதிபதி குன்கா மீதான குற்றச்சாட்டுகள் :-

நீதிபதி குன்கா செயலிதாவை ஒரு எதிரியாக சித்தரித்து இருக்கிறார். நீதிமன்றத்தின் அதிகார அத்துமீரலை செயலலிதா மீது செலுத்தி இருக்கிறார். தமிழக காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததால் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு தூண்டுதலாக இருந்து இருக்கிறார். செயலலிதாவை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து பழி தீர்த்து இருக்கிறார்.

கர்நாடக உயர்நீதினமன்றத்தின் மீதான குற்றச்சாட்டுகள் :- 

விடுமுறை நாளில் தீர்ப்பு அளித்தது தவறு என்ற வாதத்தை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் நாடகம் ஆடியுள்ளது. முதல் நாள் அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என்று மனுதாரருக்கு நீதி மறுத்திருக்கிறது. 2ம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. மனுதாரர்கள் மீது கீழ்த்தரமான சர்வாதிகாரத்தனத்தை காட்டியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம் 

எனது பொதுவான சந்தேகம் :-

நீதிபதி குன்கா தமிழ்நாட்டை பழிவாங்கியதன் நோக்கம் என்ன? நீதிபதி குன்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் சொந்த பகை உள்ளதா? அப்படி இல்லை என்றால் தமிழக காவல் துறையிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததன் காரணம் என்ன?

விடுமுறை காலத்தில் குன்கா தீர்ப்பு வழங்கியது தவறு என மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுமுறை என்றாலும் செயலலிதா வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் 2 முறை விசாரித்தது என காண்பிப்பதற்காக நாடகம் ஆடியதன் அவசியம் என்ன? ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்பது தான் விசாரணையா? இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொல்வது தான் விசாரணையா?

காவிரி பிரச்சனை இருப்பதால் வழக்கை கர்நாடகாவில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செயலலிதா தரப்பு கோரியதன் காரணத்துக்காக தான் கர்நாடக உயர்நீதிமன்றம் இப்படி பழிவாங்கி உள்ளது என்பது எனது ஆழமான சந்தேகம். இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பொது தளத்தில் உரிய விளக்கம் அளிக்க முன்வருமா? அல்லது இன்னும் தனது போலி சர்வாதிகாரத்தை பயன்படுத்துமா?

நீதிபதிகள் சர்வாதிகாரிகள் அல்ல. அதுபோல விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஒரு நீதிபதியை புகழ்ந்து எழுத எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே போல அவரது தவறுகளை சுட்டிக்காட்டவும் உரிமை உள்ளது.

குன்காவின் போலி வீரத்தை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளும் போது, குன்காவின் கீழ்த்தரமான பழிவாங்கும் நடவடிக்கையை சுட்டிக்காட்ட வலைத்தளங்களாவது பயன்படுகிறதே என நினைக்கும் போது சனநாயகத்தின் மீது  நம்பிக்கை துளிர்கிறது.

கர்நாடக நீதிபதி குன்கா, ரத்தினகாலா ஆகியோர் மீது குறைந்தபட்சம் துறைரீதியான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும்.

Oct 1, 2014

கர்நாடக நீதிமன்றத்தின் அயோக்கியதை

 ஒரு நீதிமன்றம் இவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ளும் என்பதற்கு செயலலிதா வழக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

இங்கு கர்நாடகா & தமிழ்நாடு பகையை ஊட்டுவதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என யாரும் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில், கேரளாவில், பீகாரில் ஏன் இந்திய உச்சநீதிமன்றத்தில் நடந்திருந்தாலும் அதை சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

கர்நாடக நீதிமன்றமும் செயலலிதாவும் நீயா&நானா கபடி விளையாடி உள்ளனர். இப்படி 100 கோடி இந்திய குடிமக்களையும் கேவலப்படுத்தியுள்ளார்கள். இதில் நீதிமன்றத்தின் செயல்பாடு தான் மிகமோசமாக உள்ளது. ஒரு நீதிமன்றம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு கர்நாடக நீதிமன்றம் உதாரணமாக உள்ளது.

நீதிபதி குன்கா ஒரு கீழ்த்தரமான சர்வாதிகாரி போல செயல்பட்டிருக்கிறார். அவரை காப்பாற்ற கர்நாடக உயர்நீதிமன்றமும் நாடகமாடி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதிகள் விருப்பு வெறுப்புகளை கடந்து, உணர்ச்சிவயப் படாதவர்களாய், குறிப்பாக தலைக்கணம் இல்லாதவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் குன்காவின் தலைக்கணம் நீதிமன்ற காவலர்களையும், வழக்கறிஞர்களையும் எச்சரித்ததில் இருந்து துவங்குகிறது.

செயலலிதா வரும் போது யாரும் எழுந்து நிற்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். ஒருவருக்கு மரியாதை கொடுப்பது  என்பது தனி மனித உரிமை. அதை கேள்வி கேட்ட நீதிபதி குன்காவின் மன நிலையை தலைக்கணம் என்று தானே சொல்ல முடியும்!.

செயலலிதா ஒரு அரசாங்கத்தின் முதல் அமைச்சர் என்பதை மறந்து செயல்பட்டிருக்கிறார். நான் செயலலிதாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லவில்லை. முதல் அமைச்சர் என்ற மாண்புமிகு பதவிக்கு தான் மரியாதை கொடுக்க சொல்கிறேன். 

நீதிபதி குன்கா தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும் மதிக்கவில்லை. தமிழ்நாட்டையும் மதிக்கவில்லை. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி கர்நாடக தலைமை காவல் ஆணையரிடம் ஆலோசித்துள்ளார். ஆனால் தமிழக காவல் துறையிடம் ஆலோசிக்கவில்லை. கர்நாடகாவின் பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொண்ட நீதிபதி குன்கா தமிழ்நாட்டின் பாதுகாப்பை அலட்சியம் செய்துள்ளார். இதிலிருந்தே தெரியவில்லையா இவர் சுயநலவாதி என்று. 

தமிழ்நாட்டு காவல் துறையிடம் பாதுகாப்பு பற்றி ஆலோசிக்காதது மிகப்பெரிய தவறு. தமிழ்நாட்டில் எவன் அடித்துக்கொண்டு செத்தால் எனக்கு என்ன? கர்நாடகா பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தானே நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார்.

ஒருவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவர் குற்றவாளி ஆக மாட்டார். அவருக்கு மேல் முறையீட்டு வாய்ப்புகள் உள்ளன. அங்கு அவர் நிரபராதியாகலாம். இது எல்லா கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியும். இந்த அடிப்படை வீதி கூட தெரியாமல் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார். 

நான் உங்களை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறேன் என்று நீதிபதி அறிவித்ததும். பின்னர் அது குறித்து குற்றவாளிகளின் இறுதி வாதத்தை கேட்க வேண்டும். இதை நீதிபதி குன்கா செய்ய தவறியிருக்கிறார். இதில் குன்காவின் கீழ்த்தரமான சர்வாதிகார குணம் வெளிப்பட்டிருக்கிறது.

நீங்கள் தற்போது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களை உடனடியாக சிறையில் அடைப்பதால் உங்களது கடமைகள் ஏதேனும் தடைபடுமா? அல்லது அவசர பணிகள் தடைபடுமா? என செயலலிதாவிடம் கேட்டிருக்க வேண்டும். & இதை செய்ய தவறியதன் மூலம் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் என்ற பதவியை மதிப்பற்றதாக நினைத்திருக்கிறார் குன்கா.

செயலலிதா மீதான குற்றத்தை ஒரு கொடூர குற்றமாக சித்தரித்திருக்கிறார். இது மிகப்பெரிய உளவியல் தாக்குதல். இந்தியாவில் 100% பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்கள். இதில் நீதிபதி குன்காவும் அடக்கம். இதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். இப்படிப்பட்ட தவறுகளை கொடூர குற்றமாக சித்தரித்ததன் மூலம் தன் பழிவாங்கும் போக்கை குன்கா செய்திருக்கிறார்.

குன்கா தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டார் என்றால், கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீண்ட விடுமுறை காலத்தில் தீர்ப்பு அளித்தது மனித உரிமை மீறல் என நீதிபதி குன்கா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் விடுமுறை காலத்தில் செயலலிதா மனுவை 2 நாள் விசாரிப்பது போல விசாரித்து நாடகமாடியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலையில் அரசு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார். மாலையில் நாளை விசாரிக்கப்படும் என பதிவாளர் அறிவிக்கிறார். அடுத்த நாள் காலை அரசு வழக்கறிஞரின் வாதத்தை மட்டும் கேட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்கிறார். இதில் எங்கு நீதி உள்ளது என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

நீதிபதிகள் என்பவர்கள் சாவி கொடுத்த பொம்மைகளை போல செயல்படக்கூடாது. கொஞ்சம் பகுத்தாயும் திறமை நீதிபதிகளுக்கு வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் எவ்வளவு மேல்படிப்பு படித்துவிட்டாலும் இன்னும் பயிற்சி எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்பார்கள். அதே போல தான் வழக்கறிஞர்களும். வழக்கு, சட்டம் இவைகள் எல்லாம் நாள்தோறும் சூழலுக்கு சூழல் பகுத்தாயக்கூடியது. ஆனால் பல கான்வென்ட் நீதிபதிகள் செக்கு மாடுகளாகவே உள்ளார்கள். அதனால் தானே இந்திய குடியரசு தலைவருக்கே பிடிவாரண்ட் கொடுத்தார்கள். 

இப்படிப்பட்ட நிலைகள் மாற வேண்டும். குன்காவை போன்ற ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ நீதிபதிகள் திருந்த வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசாகும். இல்லாவிட்டால் அரசியலை விட நீதித்துறையில் தான் சாக்கடை நாற்றம் அதிகரிக்கும்

பின்குறிப்பு : இந்த கட்டுரையில் தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அயோக்கியதை என்ற வார்தை மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தகுதியின்மை என்ற பொருளை குறிக்கிறது.

Sep 30, 2014

செயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்

தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார். 

2. செயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை  கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.   

ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் செயலலிதா செய்த படிப்படியான தவறுகள்:

1. நீதிபதியிடம் தான் தற்போது தமிழக முதல் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பதவியை ராசினாமா செய்து விட்டு இந்த நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று கூறியிருக்க வேண்டும். 

2. தீர்ப்பின் நகலை பெற்றுக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பி கவர்னரிடம் ராசினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேல்முறையீட்டு வழிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

3. செயலலிதா தமிழக முதல் அமைச்சராகவும், கூடவே இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார். எனவே கீழமை நீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக செயலலிதாவை கைது செய்திருக்க முடியாது.

 அதிமுக வழக்கறிஞர்கள் பதட்டத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

4. தீர்ப்பை எதிர்ப்பது, 100 கோடி அபராதத்தை எதிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு!. நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார் என்ற சட்டப்பிரச்சனையை தான் அதிமுக வழக்கறிஞர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது சாமீனுக்காக அலைவது மிக முட்டாள் தனமான நடவடிக்கை!

5. தமிழக முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கலாம். இதனால் கவர்னர், மாநில காவல் ஆணையர், தலைமை செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பார்கள். (செயலலிதா கைது செய்யப்பட்ட விடயம் அடுத்த நாள் தான் கவர்னருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்)

இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக செயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். எனவே மேலே சொல்லபடும் காரணங்கள் எல்லாம் குழந்தை தனமானது எனலாம்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் செயலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் என்பது சரிதான். ஆனால் அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. முறையாக கவர்னர் தான் இதை அறிவிக்க வேண்டும். அல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி அல்ல. தன்னிச்சையாக பதவிஇழக்க முதலமைச்சர் பதவி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அதற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை கர்நாடக நீதினமன்றம் காலில்போட்டு மிதித்துள்ளது. இதை தமிழகம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தான் கேவலமாக உள்ளது.

முதலமைச்சர் பதவியை கீழமை நீதிமன்ற நீதிபதி பறிக்க முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தமிழக அரசுக்கு நிகழ்ந்த இதே நிலையை இந்திய அரசுக்கு நிகழ்வதாக ஒப்பிட்டு பாருங்கள். பிரதமரை பதவிநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? சனாதிபதிக்கா? அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதிக்கா?

 மெத்த படித்த கனவான்களே இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேவலப்படுத்தாதீர்கள். உலகம் உங்களை பார்த்து உரக்க சிரிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் செயலலிதாவுக்கு எதற்கு சிறையில் சொகுசு அறை? இதிலிருந்தே தெரியவில்லையா சட்டம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது என்று!

கர்நாடக வழக்கறிஞருக்கு முறையாக ஆணை கிடைக்கவில்லையாம் அதனால் செயலலிதா சாமீன் வழக்கில் வாதாட முடியாது என்கிறார். அதை அனைவரும் சரி என ஒப்புக்கொள்கிறோம். அதே போல  முறையாக கவர்னருக்கு அறிவித்து விட்டு தானே செயலிதாவை கைது செய்திருக்க வேண்டும். அதை ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? 

தூக்கு தண்டனை விதித்தவுடன் நீதிபதியே எமனை போல தூக்கு கயிறை வீசி குற்றவாளியை அங்கேயே கொல்வது போல உள்ளது நீதிபதி குன்காவின் செயல். நல்லவேளை நீதிபதி குன்கா செயலிதாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கவில்லை. அப்படி விதித்திருந்தால் உடனே தன் முன் இருக்கும் சுத்தியலை எடுத்து வீசி கொன்றிருப்பாரோ என்னவோ?  

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக முதலமைச்சர் என்ற மாண்புமிகு பதவியை கேவலப்படுத்தாதீர்கள். 

ஒரு நிறுவனத்தில் எடுபடி வேலை செய்யும் நபரை பணிநீக்கம் செய்யவே விதிமுறைகள் இருக்கிறது. அதைவிட கேவலமானதா முதல் அமைச்சர் பதவி? கொஞ்சமாவது அறிவுபூர்வமாக யோசியுங்கள்!

Sep 29, 2014

தமிழக கவர்னர் கோமாளியா?

இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிகூத்தாக்கி உள்ளார் நீதிபதி குன்கா. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்துள்ளார். சாமான்யனுக்கு கூட தெரியும் சட்டம் குன்காவுக்கும் தெரியவில்லை, கவர்னர் ரோசையாவுக்கும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் எதற்காக இந்த பதவியில் இருக்கிறார்கள்?

கவர்னரால் பதவிப்பிரமானம் செய்து வைக்கப்பட்ட அமைச்சரவையை கலைக்க குன்காவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? முதலமைச்சரை ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி கைது செய்ய முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தன்னால் பதவி பிரமாணம் செய்துவைத்த முதல் அமைச்சரை கைது செய்த நீதிபதியை கண்டித்து, கைது நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும் தமிழக ஆளுனர். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரும் ஒரு பொம்மை போலவே செயல்பட்டு விட்டார். இவர் கவர்னர் பதவிக்கே தகுதி அற்றவர் என்பது எனது கருத்து.   

இது மக்களாட்சி நடைபெரும் நாடு. இங்கு நீதிபதிகள் உச்ச அதிகாரிகள் அல்ல. செயலலிதாவுக்கு தண்டனை விதித்ததை குற்றம் சொல்லவில்லை. கைது செய்த முறையை தான் குற்றம் சொல்கிறோம். 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் செயலலிதா முதல்வர் பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார். எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும் என கவர்னருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். அதுதான் முறை. கவர்னர் தான் செயலலிதாவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். பின்னர் ஒரு சாதாரண குடிமகனாக செயலலிதாவை சிறையில் அடைத்திருக்க வேண்டும். இது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம். 

ஆனால் நீதிபதி தானே கவர்னரின் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். கீழ்தரமான சர்வாதிகாரி போல குன்கா செயல்பட்டிருக்கிறார். இதனால் தமிழக அரசு உடனடியாக செயல் இழந்தது. இது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை யோசித்து பாருங்கள். இதே நிலை நாளை இந்திய அரசுக்கும் வராது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் ஒரு கீழமை நீதிமன்றம் சிறையில் அடைத்தால் இந்திய அரசு என்னவாவது? உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு என்னவாவது? பிரதமரை பதவி நீக்கம் செய்ய சனாதிபதிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அதுபோல முதல் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அல்லாமல் கீழமை நீதிபதிக்கு அல்ல.

சட்டம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் அப்போது தான் சட்டத்தை பொதுமக்கள் மதிப்பார்கள். மரியாதை இல்லாத சட்டத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். முதல் அமைச்சரை கீழமை நீதிபதி பதவிநீக்கம் செய்யும் சட்டம் மிக தவறானது. 

48 மணிநேரம் தமிழக அரசு செயல் இழந்ததற்கு கவர்னர் ரோசையாவே முழுபொறுப்பு, கடமை தவறிய ரோசைய்யாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிகார அத்துமீரலில் ஈடுபட்ட நீதிபதி குன்காவை நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டும். தமிழக முதல் அமைச்சரை உடனடியாக விடுவித்து, முறையாக செயலலிதாவை கைது செய்ய வேண்டும். 

சட்ட வல்லுனர்கள் இந்த விடயத்தை ஏன் கவனிக்க தவறுகின்றனர் என்பது புறியவில்ல. தெரிந்தவர்கள் சொல்லுகள். 

Sep 28, 2014

கர்நாடகாவின் அயோக்கியத்தனம்

தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை எந்தவித முன் அறிவிப்பும், காலஅவகாசமும் இன்றி சிறையில் அடைத்தது மிகப்பெரிய முட்டாள் தனம். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடர வேண்டும்.  நீதிபதி குல்கார்னியை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசையும் மக்களையும் அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம், தண்டனை அறிவிக்கப்பட்டதும் செயலலிதா தமிழக முதலமைச்சர் பதவியை இழக்கிறார். அவர் சாதாரண மக்களிள் ஒருவர் தான் என நினைக்கலாம். ஆனால் அது தவறு. முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் தான் சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் ஒருவரை கைது செய்வதற்கு சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒரு அமைச்சரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதியை பெற வேண்டும். 

ஊழல் வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் தான் உடனடியாக இழக்கப்படும். ஆனால் அமைச்சர் பதவி பறிக்கப்படமாட்டாது. செயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் தனது எம்.எல்.ஏ., பதவியை தான் இழக்கிறாரே தவிர, முதல்அமைச்சர் என்ற பதவியை அல்ல. எம்.எல்.ஏ., பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அமைச்சரை பதவிநீக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதே போல ஒரு  முதல் அமைச்சரை கவர்னர் மற்றும் சபாநாயகரின் அனுமதி இன்றி சிறைவைக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. 

செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய சட்ட மீறுதல் நடந்துள்ளது. இதை சட்ட வல்லுநர்கள் கவனிக்க வேண்டும். செயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு கர்நாடக நீதித்துறை நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக நீதிபதி அதிகார அத்துமீரலில் ஈடுபட்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

செயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது, தண்டணை அறிவித்தது இவைகளை நான் குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என உச்சநீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் தமிழக முதல்வரின் காரை பறிமுதல் செய்து, அரசு சின்னங்களை பறித்தது, தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது, தமிழக அமைச்சரவையை முடக்கியது., ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்த செயலாகும். எம்.எல்.ஏ., எம்.பி., க்களுக்கும் முதல் அமைச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிபதி புரிந்துகொள்ள தவறிவிட்டார். 

செயலலிதாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் தண்டனைக்கு உட்படுத்த ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டுமே. ஆனால் நீதிபதி தானே தமிழக அரசு சின்னங்களை பறித்தது, சிறையில் அடைத்தது என தன் அதிகார வரம்பை மீறி இருக்கிறார். 

தமிழக அமைச்சரவையை முடக்குவது என்பது ஒட்டுமொத்த தமிழக அரசையே முடக்குவதற்கு இணையானது. இதற்கு ஆளுநர், குடியரசு தலைவரிடம் முறையான ஒப்புதலை பெற நீதிபதி தவறி விட்டார். இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் மற்றும் சபாநாயகர் த¬லையிட்டு கர்நாடக நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

தமிழக மக்களுக்கு  ஒரு வேண்டுகோள் : செயலிதா அவர்கள் குற்றவாளியாக இருக்கட்டும். தண்டிக்கப்பட வேண்டியவராக இருக்கட்டும். ஆனால் அதற்காக கர்நாடக நீதிபதி தமிழக அரசை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.  இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

Sep 4, 2014

தமிழகத்தை இலங்கையுடன் இணைத்து விடலாம்

தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. 

  தனிஈழம், கச்சத்தீவு குறித்து வீட்டில் குடும்பமாக விவாதித்துக் கொண்டிருந்தோம்.  இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் ஒன்பது வயது மகன் அறிவு பட்டென ஒரு யோசனையை சொன்னான். 
  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதை விட, தமிழகத்தை இலங்கையுடன் இணைத்துவிடலாமே!. குழந்தையின் இந்த எதார்த்த பேச்சு எங்களை வேடிக்கையாக யோசிக்க வைத்தது.  

  தமிழகத்தை இலங்கையுடன் இணைத்தால் தமிழர்களின் அத்தனை பிரச்சனைகளும் தீரும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் சிங்களவர்களோ 2 கோடி பேர் மட்டுமே. தமிழகத்தை இலங்கையுடன் இணைப்பதால் தமிழர்கள் பெரும்பான்மையினராகி விடுவோம். சிங்களவர்கள் சிறுபாண்மையினராகி விடுவார்கள். அப்புறம் இலங்கையில் தனிநாடு கேட்டு சிங்களர்கள் தான் போராட வேண்டும். அதை இனத் தீவிரவாதம் என்று ஒடுக்க பெரும்பான்மையினராக இருக்கும் தமிழகர்களுக்கு மிக எளிதானது. 

 தமிழர்கள் தான் இலங்கையின் அத்தனை அதிகாரங்களிலும் இருப்பார்கள். சிங்களவர் எந்த காலத்திலும் இலங்கையின் சனாதிபதியாக முடியாது. தமிழக முதல்வர் சனாதிபதியாகவிடுவார். இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதை விட இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாமே. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும்பாண்மையினர் கருத்து தானே எடுபடுகிறது. தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்.

 இந்த கருத்துக்காக தடா, பொடா, குண்டர், தேசதுரோகம் எதுவரும் என்று தெரியவில்லை. பயம் இருக்கிறது. ஆனாலும் பயத்தை தான்டி மன உணர்வுகள் வெளிப்பட்டு விடுகிறது. 

 இந்த கருத்துக்கள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னித்துக்கொள்ளுங்கோள். இப்படி யோசிப்பது தேச துரோகம் என்றால் அதற்கும் சேர்த்து ஒரு மன்னிப்பு. 

‘‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிக திறமைசாலிகள், ஆனால் வாய் தான் கொஞ்சம் நீளம்!’’ தமிழர்களைப் பார்த்து சும்மாவா சொல்லி வைத்தார்கள்?  இந்தியா வாழ்க. இலங்கை வாழ்க!, இன்னும் ஒரு படி மேலேபோய் இலங்கையின் இறையாண்மையும் வாழ்க!! அப்புறம் என்ன? விடுங்க சாமி என்னை! எதோ கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன். 

பின் குறிப்பு : பெரும்பாண்மையினர் சிறுபாண்மையினரை அடக்கும் ஆட்சி முறைக்கு எதிரான உதாரண கட்டுரை மட்டுமே இது. மாறாக வேறு அர்த்தம் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

Apr 25, 2014

சூழ்நிலை கைதியாக நீதிபதி சதாசிவம்

ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சூழ்நிலை கைதியானால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அரசியல் சூழ்நிலைகளுக்கு நீதிமன்றங்கள்  பயப்படுமானால் நீதிமன்றம் எதற்கு? எல்லா அதிகாரங்களையும் அரசியல்வாதிகளிடமே கொடுத்து விடலாமே!

ராசீவ் கொலை வழக்கில் சூழ்நிலை காரணமாக தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நீதிபதி கே.டி தாமசு பதவி ஓய்வுக்கு பின்னர் கூறுகிறார். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குற்றத்தின் மையத்தை தான் பார்த்தோமே தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தன்மையை பார்க்கவில்லை, என்று இன்று கூறுகிறார் கே.டி.தாமசு. இன்றாவது மனசாட்சியை வெளிப்படுத்தினாரே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளாமல் வெறு என்ன சொல்வது?


இதே போல இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் நிச்சயமாக பதவி ஓய்வுக்கு பின்னர் மனசாட்சியை வெளிப்படுத்தலாம். தேர்தல் நேரம் அரசியல் சூழ்நிலை அதனால் இப்பட்டிப்பட்ட தீர்ப்பை வழங்க நிர்பந்திக்கப்பட்டேன் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வழக்கு விசாரனையின் போது அரசியல் அமைப்பு சாசனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற நீதிபதி சதாசிவம், இன்று அதே தீர்ப்பை வழங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது.

தேர்தல் நேரம், பதவி ஓய்பு பெறும் இறுதி நாள், தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட புகார். இந்த நிர்பந்தம் மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களை சூழ்நிலை கைதியாகக்கி இருக்கிறது. 

அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி தாமசு செய்த அதே தவறை இப்போதைய நீதிபதி சதாசிவம் செய்திருப்பது காலத்தின் கொடுமை.

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. நீதித்துறையை சீர்திருந்த இன்னும் புரட்சியாளர் தேவைப்படுகிறார்கள் என்று தான் முடிக்க வேண்டியுள்ளது. 

Apr 21, 2014

தமிழகம் 40ல் யார் யார்? - 2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்புகள் அகியவை எடுத்த கருத்துக் கணிப்புகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை வைத்து இறுதியாக கணிக்கப்பட்டுள்ளது. 

இடதுசாரி கட்சிகளை கழட்டி விட்டது தேசிய அளவிலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வாக்கு வங்கியை இழக்கிறது. தற்போது திடீர் என அதிகரித்துள்ள கடுமையான மின்வெட்டு அதிமுகவை அடியோடு சாய்க்கிறது.

அதிமுக. காங்கிரசு மீதான வெறுப்பு பாசக அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்கிறது. 

கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறுவதில் குறியாக இருந்த தேமுதிக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற தவறி விட்டது. 

குறைந்த தொகுதிகளை பெற்றாலும் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற்றுள்ளது பாமகவின் பலம். தேமுதிக பாமக முரண்பாடு இரு கட்சிகளுக்கும் இழப்பை தருகிறது. 

வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை பெற்றது, தென்மாவட்டங்களில் திமுக பிளவு, பெதிக, மே17, தமிழர் அமைப்புகள், தமிழ்புலிகள், நடுநிலை வாக்காளர்கள், இடதுசாரிகள் மறைமுக ஆதரவு, தேமுதிக பாமக, பாசக நேரடி ஆதரவு என மதிமுக 100% வெற்றிக்கொடியை நாட்டுகிறது. 

கன்யாகுமரியில் மட்டும் பாசக கரை சேர்கிறது. கோவை தென் சென்னையில் வெற்றியின் அருகில் உள்ளது. 

புதிய வேட்பாளர்கள், கட்சி பிளவு, கூட்டணி இன்மை, குழு சண்டை ஆகியவை திமுகவை பல இடங்களில் தோழ்விக்கு அழைத்து செல்கிறது. பாசக போட்டி இடாமை நீலகிரியில் ராசாவை தோற்கடிக்கிறது.  

மஞ்சள் பின்புலம் இழுபறியை குறிக்கிறது. 
  1. திருவள்ளூர் .....................................அதிமுக .............தேமுதிக
  2. வட சென்னை................................. அதிமுக ..............தேமுதிக 
  3. தென் சென்னை............................... பாசக................... அதிமுக
  4. மத்திய சென்னை........................... திமுக ..................அதிமுக 
  5. திருபெரும்புதூர்................................ மதிமுக ...............அதிமுக 
  6. காஞ்சிபுரம் (தனி) ..........................மதிமுக ...............அதிமுக 
  7. அரக்கோணம் ..................................பாமக....................அதிமுக 
  8. வேலூர்............................................ அதிமுக ..................புநீக
  9. கிருசுணகிரி ..................................பாமக ...................அதிமுக 
  10. தருமபுரி .............................................பாமக ................அதிமுக 
  11. திருவண்ணாமலை ....................அதிமுக ...............பாமக 
  12. ஆரணி ..............................................பாமக .................அதிமுக 
  13. விழுப்புரம் (தனி) ..........................அதிமுக ............தேமுதிக 
  14. கள்ளக்குறிச்சி.............................. அதிமுக..............தேமுதிக 
  15. சேலம் ..............................................தேமுதிக ...........அதிமுக 
  16. நாமக்கல்......................................... அதிமுக.............. தேமுதிக 
  17. ஈரோடு .............................................மதிமுக ...............அதிமுக
  18. திருப்பூர் ..........................................தேமுதிக.............. அதிமுக 
  19. நீலகிரி (தனி) .................................அதிமுக .................திமுக 
  20. கோயம்புத்தூர் ...............................அதிமுக ................பாசக 
  21. பொள்ளாச்சி ....................................அதிமுக .............கோமதேக 
  22. திண்டுக்கல் .....................................அதிமுக.............. தேமுதிக 
  23. திருச்சிராப்பள்ளி ...........................அதிமுக ............தேமுதிக 
  24. கரூர் ....................................................அதிமுக ...........தேமுதிக 
  25. பெரம்பலூர் .........................................இ.ச.க ..............அதிமுக 
  26. கடலூர்.............................................. அதிமுக ..............தேமுதிக 
  27. சிதம்பரம் (தனி) ..............................அதிமுக .............வி.சி
  28. மயிலாடுதுறை ..............................அதிமுக............. பாமக 
  29. நாகப்பட்டினம் (தனி) .....................அதிமுக........... பாமக 
  30. தஞ்சாவூர் ........................................அதிமுக............ திமுக 
  31. சிவகங்கை .......................................அதிமுக............ பாசக 
  32. மதுரை ................................................அதிமுக ...........தேமுதிக
  33. தேனி ...................................................மதிமுக .............அதிமுக 
  34. விருதுநகர் ........................................மதிமுக ..............அதிமுக 
  35. இராமநாதபுரம் ...............................அதிமுக ..............பாசக 
  36. தூத்துக்குடி...................................... மதிமுக ..............அதிமுக 
  37. தென்காசி (தனி) ............................மதிமுக................. பு.த 
  38. திருநெல்வேலி............................ அதிமுக .............தேமுதிக 
  39. கன்னியாகுமரி................................ பாசக ................அதிமுக
  40. புதுச்சேரி........................................... பாமக................ என்ஆர்.க
அதிமுக .........................16 - 22 
மதிமுக............................6 - 7
பாமக................................4  - 5
பாசக.................................1  - 2
தேமுதிக ........................6 - 2
இசக..................................1 - 1
கோமதேக .....................1- 0
திமுக ..............................3 - 1 
வி.சி ..................................1 - 0
என்ஆர்.க .......................1 - 0

அதிமுக ......................... 16 - 22 
பாசக அணி ................. 20 - 17
திமுக அணி ................ 4 - 1

இறுதிநாள் மக்கள் மனநிலை பாசக அணியை கூடுதல் வெற்றி தொகுதிகளுக்கு அழைத்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Apr 18, 2014

அதிமுகவை முந்தும் பாசக அணி - தேர்தல் கருத்து கணிப்பு

தமிழகத்தில் பல முனை போட்டி நிலவினாலும் அதிமுக திமுக பாசக கூட்டணி இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

காங்கிரசு, இடதுசாரி மற்றும் உதிரிகட்சிகள் ஓட்டை பிரிக்கும் பணியை முழு வீச்சில் செய்கின்றன. இத்தகு நிலையில் பொதுமக்களின் வாக்கு எந்த அணிக்கு அதிகம் கிடைக்கிறதோ அந்த அணியே வெற்றி அணியாகும்.

வாக்கு வங்கி அடிப்படையில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது என்றாலும் பாசக கூட்டணி வாக்கு வங்கியும் அதிமுக வாக்கு வங்கியும் ஏரத்தாள இணையாகவே உள்ளன.

அதிமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 7 %
கட்சி அனுதாபிகள்  10 %
ஆதரவு கட்சிகள் 2 %
மொத்தம் 19 %

திமுக வாக்கு வங்கி
கட்சி உறுப்பினர்கள் 5 %
கட்சி அனுதாபிகள்  8 %
வி.சி, + பு.த                         1 %
மமக + மு.லீ         1 %
மொத்தம் 15 %

பாரதிய சனதா கூட்டணி வாக்கு வங்கி
தேமுதிக கட்சி உறுப்பினர்கள்  2 %
தேமுதிக கட்சி அனுதாபிகள் 2 %
பாமக கட்சி உறுப்பினர்கள் 2 %
பாமக கட்சி அனுதாபிகள்         2 %
மதிமுக கட்சி உறுப்பினர்கள் 1 %
மதிமுக கட்சி அனுதாபிகள் 4 %
பாசக கட்சி உறுப்பினர்கள்         1 %
பாசக கட்சி அனுதாபிகள்         1.5 %
இ.ச.க + புநீக + கொமதேக        1.5 %
மொத்தம்                        17 %

அதிமுக 19 %
பாசக 17 %
திமுக 15 %

இடதுசாரி, காங்கிரசு, இதர கட்சிகள், சுயேட்சைகள் போன்றவை 4 % வாக்குகளை பிரித்து விடுகின்றன.  

அனுதாபிகள் போக மீதமுள்ள 45 % பொதுமக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதை பொருத்தே வெற்றி நிர்ணயிக்கப்பட உள்ளது.

காங்கிரசு அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு, மின்வெட்டு, மத்தியில் அடுத்த ஆட்சி, புதிய மாற்றம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவை பாசக அணிக்கு பொதுமக்கள் வாக்குகளை 10% கொண்டு சேர்க்கிறது.

அடுத்த பிரதமர் வாய்ப்பு, துணிச்சலான நிர்வாகம், சிறுபான்மையினரின் பாசக எதிர்ப்பு வாக்கு ஆகியவை அதிமுகவுக்கு 7 % பொது மக்கள் வாக்கு வந்து சேர்கிறது. அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற விதத்தில் 3 % பொதுமக்கள் வாக்குகள் திமுகவுக்கு வருகிறது. 20-25 % வாக்குகள் வாக்குசாவடிக்கு வராதவர்கள் பக்கம் செல்கிறது.

75 % வாக்கு பதிவு நடந்தால் கீழ் கண்டபடி தேர்தல் வெற்றிகள் அமைய வாய்ப்பு உள்ளது.

பாசக            17 + 10 = 27%

அதிமுக      19 + 7 = 26%

திமுக        15 + 3 = 18%

பாசக கூட்டணியில் பாமக, கொமதேக, இசக, புநீக கட்சிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாக்கு வங்கியை பெற்றிருப்பது அந்த அணிக்கு கணிசமான தொகுதிகளை இழக்க வழி செய்கிறது. 

தனிப்பட்ட வேட்பாளர் செல்வாக்கு, தொகுதிக்கு உட்பட்ட வாக்கு வங்கி அடிப்படையில் பாசக அணியும் அதிமுகவும் சமநிலையில் உள்ளன

மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால்

பாசக அணி   18

அதிமுக 18

திமுக 4

இடங்களை பெற வாய்ப்புள்ளது.

Popular Posts