Sep 28, 2014

கர்நாடகாவின் அயோக்கியத்தனம்

தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை எந்தவித முன் அறிவிப்பும், காலஅவகாசமும் இன்றி சிறையில் அடைத்தது மிகப்பெரிய முட்டாள் தனம். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடர வேண்டும்.  நீதிபதி குல்கார்னியை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசையும் மக்களையும் அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம், தண்டனை அறிவிக்கப்பட்டதும் செயலலிதா தமிழக முதலமைச்சர் பதவியை இழக்கிறார். அவர் சாதாரண மக்களிள் ஒருவர் தான் என நினைக்கலாம். ஆனால் அது தவறு. முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் தான் சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் ஒருவரை கைது செய்வதற்கு சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒரு அமைச்சரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதியை பெற வேண்டும். 

ஊழல் வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் தான் உடனடியாக இழக்கப்படும். ஆனால் அமைச்சர் பதவி பறிக்கப்படமாட்டாது. செயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் தனது எம்.எல்.ஏ., பதவியை தான் இழக்கிறாரே தவிர, முதல்அமைச்சர் என்ற பதவியை அல்ல. எம்.எல்.ஏ., பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அமைச்சரை பதவிநீக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதே போல ஒரு  முதல் அமைச்சரை கவர்னர் மற்றும் சபாநாயகரின் அனுமதி இன்றி சிறைவைக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. 

செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய சட்ட மீறுதல் நடந்துள்ளது. இதை சட்ட வல்லுநர்கள் கவனிக்க வேண்டும். செயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு கர்நாடக நீதித்துறை நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக நீதிபதி அதிகார அத்துமீரலில் ஈடுபட்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

செயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது, தண்டணை அறிவித்தது இவைகளை நான் குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என உச்சநீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் தமிழக முதல்வரின் காரை பறிமுதல் செய்து, அரசு சின்னங்களை பறித்தது, தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது, தமிழக அமைச்சரவையை முடக்கியது., ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்த செயலாகும். எம்.எல்.ஏ., எம்.பி., க்களுக்கும் முதல் அமைச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிபதி புரிந்துகொள்ள தவறிவிட்டார். 

செயலலிதாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் தண்டனைக்கு உட்படுத்த ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டுமே. ஆனால் நீதிபதி தானே தமிழக அரசு சின்னங்களை பறித்தது, சிறையில் அடைத்தது என தன் அதிகார வரம்பை மீறி இருக்கிறார். 

தமிழக அமைச்சரவையை முடக்குவது என்பது ஒட்டுமொத்த தமிழக அரசையே முடக்குவதற்கு இணையானது. இதற்கு ஆளுநர், குடியரசு தலைவரிடம் முறையான ஒப்புதலை பெற நீதிபதி தவறி விட்டார். இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் மற்றும் சபாநாயகர் த¬லையிட்டு கர்நாடக நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

தமிழக மக்களுக்கு  ஒரு வேண்டுகோள் : செயலிதா அவர்கள் குற்றவாளியாக இருக்கட்டும். தண்டிக்கப்பட வேண்டியவராக இருக்கட்டும். ஆனால் அதற்காக கர்நாடக நீதிபதி தமிழக அரசை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.  இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

14 comments:


  1. இத தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சிட்டு அங்கயே உக்காந்துக்குங்க. வருங்கால சந்ததிகள் படிச்சி தெரிஞ்சிக்குவாங்க.

    ReplyDelete
  2. Vilunthalum meesaiyilai mann padallai?????

    ReplyDelete
  3. Ethukku intha maanam ketta polappu.roadil nikka vachchu sudanum.pavvamunnu viddidaaru

    ReplyDelete
  4. தமிழக மக்களிடம் இதற்காக பேருந்துகளை கொளுத்த சொல்லுங்கள். கடைகளை சூரையாட சொல்லுங்கள். மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளை மறிக்க சொல்லுங்கள். முதலில் உங்களை போன்ற வதந்திகளை பரப்புவர்களை சிறையில் இடவேண்டும்.
    நீங்கள் சொல்வது ஞாயமாக இருந்தால் நீங்களே கோர்ட்டுக்கு போகலாமே. நமது வரிப் பணத்தில் 18 வருடங்கள் வழக்காடிவிட்டு இப்போது தமிழக அரசு மீண்டும் நமது வரிப் பணத்தில் கோர்ட்டுக்கு போக வேண்டுமாம். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. திரு. அசோகராசு

    இது மக்களாட்சி நடைபெரும் நாடு. இங்கு நீதிபதிகள் ஆட்சியாளர்கள் அல்ல. செயலலிதாவுக்கு தண்டனை விதித்ததை குற்றம் சொல்லவில்லை. கைது செய்த முறையை தான் குற்றம் சொல்கிறோம். ஆளுநர் யார்? சனாதிபதி எதற்காக இருக்கிறார்? இவர்கள் அதிகாரத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி கையில் எடுப்பது சரியா?

    முன்பு ஒரு பட்டதாரியை கைது செய்யவே போலீசார் தயங்குவார்கள். ஆயிரம் விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் இன்றோ?

    தயவு செய்து அதிகாரத்தை அதிகாரிகள் கையில் கொடுக்காதீர்கள். அரசியல் வாதிகள் கையில் கொடுங்கள்.

    ஒரே ஒரு உதாரணம். போலீசார் பொதுமக்களை கண்டு பயப்படமாட்டார்கள் ஆனால் அரசியல்வாதிகளை கண்டு பயப்படுவார்கள். அரசியல்வாதிகள் போலீசாரை கண்டு பயப்படமாட்டார்கள் ஆனால் பொதுமக்களை கண்டு பயப்படுவார்கள். உங்களுக்கு யார் வேண்டும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

    அதிகாரிகள் ஆட்சி செய்யலாம் என்றால் தேர்தல் எதற்கு? முதலமைச்சர் எதற்கு?

    சட்டம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் அப்போது தான் சட்டத்தை பொதுமக்கள் மதிப்பார்கள். மரியாதை இல்லாத சட்டத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். முதல் அமைச்சரை நீதிபதி பதவிநீக்கம் செய்யும் சட்டம் மிக தவறானது. முதலமைச்சரை கவர்னர் தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பிரதமரை சனாதிபதி தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அல்லாமல் கீழமை நீதிபதி அல்ல.
    நீதிபதிகள் எல்லாம் நீதிமான்கள் அல்ல என்பதை முதலில் புறிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. தமிழக முன்னால் முதல்வருக்கு ஆதரவாக பதிவு எழுதும் முன், அவருக்காக தமிழகத்தில் நடக்கும் வன்முறைகளையும் பதிவாக எழுதுங்கள். நீங்கள் கதறி எழுதும் இந்த பதிவிற்கு உரித்தான முன்னால் முதல்வர், தன் கட்சித்தொண்டர்களை வன்முறையில் ஈடுபடாமல் இருக்க சொல்லுங்கள். மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக மௌனம் சாதிக்கும் ஒருவருக்காக நீங்கள் ஆதரவு கோருகிறீர்கள்

    ReplyDelete
  7. திரு பெயரிலி
    கட்சியினரை அமைதிப்படுத்தக்கூட வாய்ப்பளிக்காமல் சிறையில் அடைத்ததை தான் கண்டித்துள்ளோம். நீதிபதி பொறுப்பு இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டதன் விளைவு தான் இவைகள்.

    கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டதற்காக வன்முறையில் ஈடுபடுபவர்களை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் தமிழக முதல்வர் கைது செய்யப்பட்டதற்காக போராடுபவர்களை கைகூப்பி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  8. Actually the Assembly of Ministers failed to devolve the powers before the imprisonment. The CM of Tamilnadu should beseech a permission with the Special Judge, who is appointed by the Supreme Court, specially constituted Case to enquire into the irregularities of the Disproportionate Asset accumulation to the known source of income.

    She should have devolved her powers to another Minister in her couture by beseeching a permission with the Judge of the Special Court and appointed a person as chief minister, care taker government until the next government is formed.

    So it is not like, as stated in an another article or in this one.

    ReplyDelete
    Replies
    1. One should understand the difference between arrest and imprisonment. This is an imprisonment and not arrest.

      Delete
  9. // One should understand the difference between arrest and imprisonment. This is an imprisonment and not arrest.//

    திரு. பெயரிலி

    ஒரு மாநில முதல் அமைச்சரை தண்டிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஒன்று அவர் பதவியை ராசினாமா செய்த பின்னர் தண்டிக்க வேண்டும். அல்லது அவரை பதவி நீக்கம் செய்த பின்னர் தண்டிக்க வேண்டும்.

    தன்னிச்சையாக முதல் அமைச்சர் பதவி ரத்தாகும் என்பது வேடிக்கையாக இல்லையா? அவ்வளவு கேவலமானதா முதல் அமைச்சர் பதவி. அதற்காக தான் 600 கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்படுகிறதா?

    முதல் அமைச்சரை மட்டுமல்ல ஒரு சாதாரண மனிதனை கூட தண்டிக்கும் அதிகாரம் கீழமை நீதிமன்றத்திற்கு இல்லை.

    ஒருவரை குற்றவாளி என அறிவித்து தண்டிக்கும் அதிகாரம் 2 பேருக்கு தான் உள்ளது.

    1. குற்றம் சாட்டப்பட்டவர்: குற்றம் சாட்டப்பட்டவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அவர் உடனே குற்றவாளி ஆகிறார். தண்டிக்கவும் மன்னிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

    2. உச்சநீதிமன்றம் : கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். மீண்டும் சீராய்வு மனு கொடுக்கலாம். இறுதியாக தான் உச்சநீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவிக்கும். பின்னர் தான் அவர் குற்றவாளி ஆகிறார். அதுவரை அவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான்.

    தான் நிரபராதி என்பதை மரணம் வரை மட்டுமல்ல மரணத்துக்குப் பின்னும் நிரூபிக்கும் உரிமை ஒரு நிரபராதிக்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. முதல் அமைச்சரை மட்டுமல்ல ஒரு சாதாரண மனிதனை கூட தண்டிக்கும் அதிகாரம் கீழமை நீதிமன்றத்திற்கு இல்லை. என்கிறீர்கள் திரு தமிழ்மலர். இதற்கு சட்ட உதாரணம் எதேனும் உண்டா?

      இந்த விலக்குகள் அல்லது இந்த அதிகாரம் இல்லை என்பதை அரசியல் சாசன சட்டமோ அல்லது வேறு சில சட்டங்களோ எங்கேனும் பகர்கின்றனவா? தெரிய விழைகிறேன்

      Delete
    2. தன்னிச்சையாக முதல் அமைச்சர் பதவி ரத்தாகும் /// முதல்வர் பதவியிலிருக்கும் போது உயிரிழந்தால் பதவியும் நீடிக்குமா? அது போலத்தான் இதுவும். ஒரு சட்டத்தின் விளக்கம் உச்ச நீதிமன்றத்தால் விளக்கப்பட்டு, அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

      அதன் படி அவர் வகித்த பதவி தானாக அவருக்கு ரத்தாகும் அல்லது பதவியில் இருப்பவர் அந்த பதவியை இழப்பார். இதுதான் சட்டத்தின் நிலை.


      Delete
    3. ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன். இது குறித்து உங்கள் கருத்து என்ன - இந்த கேள்வியை குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து கீழமை நீதிபதி கேட்பார்.

      நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் எனக்கு குறைந்தபட்ட தண்டனை கொடுங்கள் என குற்றம் சாட்டப்பட்டவர் கூறுவார். உடனே நீதிபதி குற்றவாளி என அறிவித்து தண்டனையையும் அறிவித்து விடுவார்.

      நான் குற்றவாளி இல்லை எனக்கு மேல் முறையீட்டு வாய்ப்பு கொடுங்கள் என குற்றம்சாட்டப்பட்டவர் கேட்டால் - உடனே நீதிபதி தன்னிடமே மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லலாம். அல்லது உயர்நீதிமன்றத்தில் முறையிட அவகாசம் அளிக்கலாம். இதற்காக தனது தீர்ப்பையும் தண்டனையும் நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறேன் எனு தீர்ப்பை அறிவிப்பார். - இது தான் இந்தியாவில் நீதிமன்ற நடைமுறை. சின்ன திருட்டு வழக்கு முதல் கொலைக்குற்றம் வரை இது தான் நடைமுறை சட்டம்.

      Delete
  10. நமது நீதி பரிபாலனத்தில் 3 நிலைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் வரை ஒருவர் நிரபராதி என்பது தவறு. அவருக்கு தன்னை நிரபராதி என்று நிரூபிக்க சந்தர்ப்பங்கள் மேல் முறையீட்டீல் உண்டு. ஆனால் ஒரு நீதி மன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டவர் குற்றவாளி அல்ல. தண்டனைக் கைதிதான்.

    மரணத்துக்குப் பின்னும் நிரூபிக்கும் உரிமை ஒரு நிரபராதிக்கு இருக்கிறது. இது சாத்தியம்தான் ஆனால் பலனில்லாதது.

    தண்டிக்கவும் மன்னிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் மன்னிக்க இடம் இல்லை.

    ஏன்னெனில் குற்றம் நிரூபிக்கப் பட்டதால். ஆனால் அதே நீதிபதி இவரின் அரசியல் சாசனப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு மாநில முதல்வர் என்பதால் அவருக்கு ஜாமின் அளித்து மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி இருக்க வேண்டும்.

    இது இந்த நீதி பரிபாலனத்தில் நேர்ந்துள்ள ஒரு முக்கியத் தவறுதலாகும்.

    ReplyDelete

Popular Posts